கை (மரு./இலத்தீன்: manus, pl. manūs) பொதுவாக ஓர் முதனியின் கரம் அல்லது முன்னுறுப்பொன்றின் இறுதியில் இருக்கும், பொருட்களைப் பற்றிக்கொள்ளும் தன்மையுடையதும் பல விரல்களைக் கொண்டதுமான உடலுறுப்பாகும். கைகள் தன்னைச் சுற்றியுள்ளவற்றை கையாள முக்கியமான உறுப்பாகும். பெரிய பொருட்களைப் பற்றிக் கொள்ளவும் (பெரு உந்துதிறன்) சிறு கற்களையும் பிரிக்கவும் (நுண் உந்து திறன்) இவை பயனாகின்றன. விரல்முனைகள் உடலின் மிக அடர்த்தியான நரம்புத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், தொடு உணர்ச்சி மூலமான பின்னூட்டம் கிடைக்கிறது;இது உடலை சரியாக இருக்கையில் வைக்கும் திறனுடையது.தொடு உணர்ச்சி என்றாலே கைகள் என்ற தொடர்பு இதனாலேயே ஏற்பட்டுள்ளது.மற்ற இரட்டை உறுப்புகளான கண்கள், காதுகள்,கால்கள் போன்று ஒவ்வொரு கையும் மூளையின் எதிர்த்தரப்பு அரைக்கோளத்தால் ஆளப்படுகின்றன. (வலது கை இடது புற மூளை அரைக்கோளத்தாலும், இடது கை வலதுபுற மூளை அரைக்கோளத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன).தனி கையினால் செய்யப்படும் செயல்களுக்கு (எழுதுவது,வரைவது) விரும்பப்படும் கையைக் கொண்டே ஒருவர் வலதுகைக்காரர் அல்லது இடதுகைக்காரர் என அழைக்கப்படுகிறார்.

கை
Hand
Human-Hands-Front-Back.jpg
Handskelett.png
மனிதக் கை ஒன்றின் எக்சு-கதிர்ப் படம்
விளக்கங்கள்
இலத்தீன்Manus
dorsal venous network of hand
Ulnar, median, radial nerves
அடையாளங்காட்டிகள்
மரு.பா.தA01.378.800.667
TAA01.1.00.025
FMA9712
உடற்கூற்றியல்

அறிவியலில் கை எனப்படுவது யாது?தொகு

 
கை, Paolo Monti

பல பாலூட்டிகளும் பிற விலங்குகளும் கையைப் போன்றே பற்றிக்கொள்ளும் புற உறுப்புகளை,(நாய் போன்றவற்றின் பாத நகங்கள்,பறவைகளின் வளைந்த நகங்கள்)கொண்டிருந்தாலும் அவையெல்லாம் அறிவியலில் கைகளாகக் கருதப்படுவதில்லை. முதனிகளிடையே மட்டுமே கைகள் அமைந்துள்ளன. கைகளுக்கு எதிரெதிரான கட்டைவிரல்கள் இருக்கும்.

மனிதர்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே (பிறவிக்குறையாக கூடுதல் கைகள் இருக்கலாம்),[1] உள்ளன. மனிதக் குரங்குகளுக்கும் குரங்குகளுக்கும் சிலநேரங்களில் அவற்றின் கால் விரல்கள் நீண்டிருப்பதாலும், கால் கட்டை விரல்கள் எதிர்த்திருப்பதாலும் கைகளைக் கொண்டு செய்யும் செயல்களைக் கால்களாலும் செய்ய முடிவதாலும் நான்கு கைகள் கொண்டவையாக விவரிக்கப்படுகின்றன. சில மனிதக்குரங்குகளின் கால்விரல்கள் மனிதர்களுடைய கைவிரல்களை விடப் பெரியவை.[2]

உயிர்கள் உருவான வரலாற்றை ஆராயும் உடற்கூறு அறிஞர்கள் கை என்ற சொல்லை முன்னுறுப்பொன்றில் விரல்கள் ஒட்டியுள்ளதைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றனர். காட்டாக மூன்று விரல்கள் உடைய பறவைகளின் கைக்கும் இரண்டு விரல்கள் கொண்ட டினோசர் கைக்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்வதைக் கூறலாம்.[3]

மேற்கோள்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
hands
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "Three-armed boy to have surgery". BBC News. 2006-05-31. 2007-12-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Primate Feet". ufovideo.net. 2009-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 2009 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி) (JPG)
  3. Xing Xu et al.(2009). A Jurassic ceratosaur from China helps clarify avian digital homologies. Nature 459: 940-944 எஆசு:10.1038/nature08124

வெளியிணைப்புகள்தொகு

கை பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=கை&oldid=3551451" இருந்து மீள்விக்கப்பட்டது