எம். கே. பாலாஜி

இந்திய பாடகர்

எம். கே. பாலாஜி (MK Balaji) என்பவர் ஒரு இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் பின்னணி பாடகராக தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் சேதுபதி படத்தின் வழியாக பாடலாசிரியராகவும் அறிமுகமானார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

எம். கே. பாலாஜி
இசை வடிவங்கள்இந்திய இசை . ஹிப்பாப் . பாப்
தொழில்(கள்)படகர், படலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், நிகழ்த்துநர்

வாழ்கை குறிப்பு

தொகு

சூர்யா நடித்து கே. வி. ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படமான மாற்றான் திரைப்படத்தில் இடம்பெற "ரெட்டைக் கதிரே" பாடல் உட்பட பல தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்குப் பின்னால் குரல் கொடுத்தவர் எம். கே. பாலாஜி. இவர் தமிழ், தெலுங்கில் பல வெற்றிபெற்ற பாடல்களை வழங்கியுள்ளார். டி. இமான், கார்த்திக் ராஜா, சுந்தர் சி பாபு, தாஜ் நூர், ஜேம்ஸ் வசந்தன், சிற்பி, சபேஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா போன்ற இசை இயக்குநர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார்.

நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுப்பயணங்கள்

தொகு

இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக நிகழ்த்திய மிகச் சில தென்னிந்திய பாடகர்களில் எம். கே. பாலாஜியும் ஒருவர் ஆவார். விருது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்லூரி சார் நிகழ்ச்சிகள், பெருநிறுவன நிகழ்வுகள் ஆகியவற்றிற்காக இவர் ஒரு முக்கிய மேடை நிகழ்துநராக உள்ளார். பாரிஸ், ஜப்பான், துபாய், குவைத்து, சீஷெல்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகலில் இவரது சில சுற்றுப்பயணங்கள் அடங்கும். இவர் இசை இயக்குநர்களான ஹாரிஸ் ஜயராஜ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோருடன் அவர்களின் இசை நிகழ்ச்சிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

தொகு

ஜீ தமிழில் பிரபலமான ச ரி க ம பவின் தமிழ் பதிப்பு, விஜய் தொலைக்காட்சியின் பாடும் ஆபிஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ஆரம்பகால இசை

தொகு

தொலைக்காட்சியில் உண்மைநிலை நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஊலல்ல்லா நிகழ்ச்சியின் இவர் முன்னணி பாடகராக இருந்த இவரது இசைக்குழுவான வி 3 என்ற குழு கலந்து கொண்டு வெற்றியை ஈட்டியது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஏ. ஆர். ரகுமான் வந்தார். இதன்பிறகு இவர் ஒரு பின்னணி பாடகராக முன்னேற்றம் கண்டார்.

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு

தொகு

எம். கே. பாலாஜி பாடிய பாடல்களின் பகுதி இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு கீழே.

பாடல் தலைப்பு திரைப்படம் / ஆல்பம் இசை இயக்குநர் இணை பாடகர்கள்
ஏய் மாமா சேதுபதி நிவாஸ் கே. பிரசன்னா அனிருத் ரவிச்சந்திரன்
ரெட்டாய் கதிரா மாற்றான் ஹாரிஸ் ஜயராஜ் கிருஷ்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஒரு ஊர்ல ரெண்டு ராஜா டி. இமான் அந்தோணிதாசன்
சர சர சரவெடி இது கதிர்வேலன் காதல் ஹாரிஸ் ஜயராஜ் கே. கே., ஸ்ரீலேகா
கடல் நான் தான் என்றென்றும் புன்னகை ஹாரிஸ் ஜயராஜ் ஆண்ட்ரியா ஜெரிமியா, பம்பாய் ஜெயஸ்ரீ
வெள்ளைக்காரி இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஜி. வி. பிரகாஷ் குமார் என். எஸ். கே ரம்யா
எங்கே போவேனோ அங்காடித் தெரு விஜய் ஆண்டனி பென்னி தயால்
தூல் டக்கர் தூல் டக்கர் சிங்கில் எல். வி கணேசன் பீட் பிரபுதேவா
உன்னை எண்ணி ஆயிரத்தில் இருவர் பரத்வாஜ்
செக்சி லேடி நினைத்தாலே இனிக்கும் விஜய் ஆண்டனி என். எஸ். கே ரம்யா, மாயா
துல்லே ராணி சூப்பர் கவ்பாய் (தெலுங்கு) ஜி. வி. பிரகாஷ் குமார் என். எஸ். கே ரம்யா
திலமோ திலமோ மகாத்மா (தெலுங்கு) விஜய் ஆண்டனி சங்கீதா
துனீக துனீக துனீக துனீக (தெலுங்கு) கார்த்திக் ராஜா
பாடலாசிரியராக
பாடல் தலைப்பு திரைப்படம் / ஆல்பம் இசை இயக்குநர்
"ஹவா ஹவா" சேதுபதி "நிவாஸ் கே. பிரசன்னா"
தொலைக்காட்சித் தொகுப்பாளரக
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொலைக்காட்சி
பாடும் ஆபிஸ் விஜய் தொலைக்காட்சி
ச ரீ க ம ப ஜீ தமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._பாலாஜி&oldid=4167875" இலிருந்து மீள்விக்கப்பட்டது