அந்தோணிதாசன்
அந்தோணிதாசன், (Anthony Daasan) தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறு நகரில் பிறந்த ஒரு தமிழ் இசைக் கலைஞன் ஆவார்.[1] இவர் நாட்டுப்புற இசைப் பாடகர், தெருக்கூத்து இசைப் பாடகர், நாட்டுப்புறக் கலைஞரும் ஆவார். இவரது பெயரை "ஆண்டனி தாசன்", "ஆண்டனி தாஸ்" என்றும் உச்சரிப்பர். குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பாடல்கள் இயற்றிப் பாடும் கலைஞராக உருவெடுத்துள்ளார். திரையிசையில் பெரும்பாலும் பின்னணிப் பாடகராக, சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன், விஷால் சந்திரசேகர் போன்ற புதுப்புது கலைஞர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். இது தவிர அவர் மேடையில் ஆடவும், நடிக்கவும் செய்வதோடு, சில இசைக் கருவிகளையும் வாசிக்கிறார்.
அந்தோணி தாசன் | |
---|---|
பிறப்பு | ரெட்டிப்பாளையம், தஞ்சாவூர், தமிழ் நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | நாட்டுப்புறயிசை, இணைவு, பின்னணி |
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர், நடிகர், நாட்டுப்புறக் கலைஞர், கூத்தர் |
இணைந்த செயற்பாடுகள் | லா பொங்கல், அந்தோனியின் பார்ட்டி |
இசைப் பணி தவிர, சில தமிழ்த் திரைப்படங்களில், குறிப்பாகத் தான் பாடிய பாடல்களில் கௌரவத் தோற்றத்தில் தோன்றுவார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா எனும் திரைப்படத்தில் ஒரு குண்டர்/அடியாளாக நடித்த நீண்டநேர கௌரவத் தோற்றம் இங்குக் குறிப்பிடத்தக்கது.[2] முன்னதாக இந்தியாவில் வெளியாகும் தி தேவாரிஸ்ட்ஸ், என்ற இசை தொடர்பான தொலைக்காட்சித் தொடரிலும் பங்குபெற்றிருந்தார்.[3] இத்தொடர் ஓர் பயணக்குறிப்புடன் கூடிய இசை ஆவணப்படம் ஆகும்.
இசைக் குழுக்கள்
தொகுதன் இசைக்குழுவான "அந்தோணியின் பார்ட்டி" என்ற நாட்டுப்புற மின்னணு இணைவு இசைக் குழுவுடன் பயணித்து பல கச்சேரிகள் நிகழ்த்தி வருகிறார்.[1] தர்புகா சிவா ஒருங்கிணைத்து, மற்றொரு புகழ் பெற்ற இசைக் கலைஞரான பிரதீப் பங்காற்றும் மற்றுமொரு நாட்டுப்புற இணைவு இசைக்குழுவான "லா பொங்கல்" இசைக்குழுவோடும் இணைந்துள்ளார். இவ்விசைக்குழு விழாக் கச்சேரி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.[4][5][6] அக்குழுவின் படைப்புகளுள் புகழ்பெற்ற ஒன்றான "வண்டியிலே நெல்லு வரும்" என்ற பாடலை எம் டிவி கோக் ஸ்டூடியோ இந்தியா 2012-இல், மூத்த பாடகரான உஷா உதூப்புடன் இணைந்து அரங்கேற்றினர்.[7]
விருதுகள்
தொகு2014 செப்டம்பரில், "தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை" என்ற விருதும், "நாட்டுப்புறக் கலையின் அடையாளம்" என்ற பாராட்டும் அந்தோனி தாசனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது பிரதர்சினி 2014 என்ற தென்னிந்தியப் பண்பாட்டு விழாவில் வழங்கப்பட்டது.
இசை வரலாறு
தொகுதிரையிசைப் பாடல்கள்
தொகுஆண்டு | பாடல் | திரைப்படம் | இணை கலைஞர் | இசையமைப்பாளர் | நிறுவனம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
2013 | "காசு, பணம்" | சூது கவ்வும் | கானா பாலா | சந்தோஷ் நாராயணன் | திங்க் மியூசிக் | கௌரவத் தோற்றம் |
2013 | "டைய்யாரே டைய்யாரே" | பாண்டிய நாடு (திரைப்படம்) | பவன், நட்ராஜ், பழனியம்மாள் | டி. இமான் | திங்க் மியூசிக் | |
2013 | "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" | வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) | சிவ கார்த்திகேயன் | டி. இமான் | சோனி மியூசிக் | கௌரவத் தோற்றம் |
2014 | "கல்யாணமாம் கல்யாணம்" | குக்கூ | சந்தோஷ் நாராயணன் | திங்க் மியூசிக் | ||
2014 | "ராசா மகராச (டூயட்)" | முண்டாசுப்பட்டி | ரீட்டா, ஷான் ரால்டன் | ஷான் ரால்டன் | திங்க் மியூசிக் | |
2014 | "கில்லாடி ஒருத்தன்" | முண்டாசுப்பட்டி | ஷான் ரால்டன் | திங்க் மியூசிக் | ||
2014 | "போதையில் பாடை மாறும்" | சரபம் (திரைப்படம்) | பிரிட்டோ மைக்கேல் | பிரிட்டோ மைக்கேல் | திங்க் மியூசிக் | |
2014 | "கண்ணம்மா" | ஜிகர்தண்டா (திரைப்படம்) | ரீட்டா | சந்தோஷ் நாராயணன் | திங்க் மியூசிக் | |
2014 | "பாண்டி நாட்டுக் கொடி" | ஜிகர்தண்டா (திரைப்படம்) | சந்தோஷ் நாராயணன் | திங்க் மியூசிக் | பாடலாசிரியர், கௌரவத் தோற்றம் | |
2014 | "டக்கு டக்கு" | சிகரம் தொடு | வருன் பரந்தாமன் | டி. இமான் | சோனி மியூசிக் | |
2014 | "ஒரு ரோசா" | ஜீவா | பூஜா | டி. இமான் | சோனி மியூசிக் | |
2014 | "சோடா பாட்டில்" | பூஜை (திரைப்படம்) | யாசின் நிசார், சத்தியன் | யுவன் சங்கர் ராஜா | வி மியூசிக் | |
2014 | "ஃபிரெண்ட்ஷிப்" | கப்பல் | நடராஜன் சங்கரன் | ஐ ஸ்டூடியோஸ் | ||
2015 | "யார் என்ன சொன்னாலும்" | ஆம்பள | குத்லே கான், வருன் பரந்தாமன் | கிப்கொப் தமிழா | வி மியூசிக் | |
2015 | "கட்டிக்கிட" | காக்கிசட்டை | மானசி, துர்கா, அனிதா | அனிருத் ரவிச்சந்திரன் | வன்டர்பார் ஸ்டூடியோஸ் | படலாசிரியர் |
2015 | "அரக்கி" | ரோமியோ ஜூலியட் (திரைப்படம்) | டி. இமான் | மெட்ராஸ் என்டர்பிரைஸஸ் | ||
2015 | "நானே தான் ராஜா" | இன்று நேற்று நாளை | கிப்கொப் தமிழா | திங்க் மியூசிக் | ||
2015 | "நல்லவனா கெட்டவனா" | சவாலே சமாளி | எல். ஆர். ஈஸ்வரி | தமன் (இசையமைப்பாளர்) | கே தயாரிப்புகள், டி ஃபோக்கஸ் | |
2015 | "காக்கா பொண்ணு" | யட்சன் (திரைப்படம்) | பிரியதர்சினி, யுவன் சங்கர் ராஜா | யுவன் சங்கர் ராஜா | ஜீ இசை நிறுவனம் | |
2015 | "டகால்ட்டி" | திரிஷா இல்லனா நயன்தாரா | ஆண்ட்ரியா ஜெரெமையா, கானா பாலா | ஜி. வி. பிரகாஷ் குமார் | சோனி மியூசிக் | |
2015 | "பேபி பேபி" | உறுமீன் | அச்சு ராஜாமணி | |||
2015 | "கெணத்தக் காணோம்" | 144 (திரைப்படம்) | மாலவிகா சுந்தர் | ஷான் ரால்டன் | ||
2015 | "காசு கெடச்சா லூசுப் புடிக்கும்" | 144 (திரைப்படம்) | கௌரிசங்கர், சுசா | ஷான் ரால்டன் | ||
2016 | "வையம்பட்டி" | இடம் பொருள் ஏவல் | பிரியதர்சினி | யுவன் சங்கர் ராஜா | சோனி மியூசிக் | |
2016 | "மாங்கல்யமே" | ஒரு நாள் கூத்து | ரிச்சர்ட், Dr. நாராயணன் | யுவன் சங்கர் ராஜா | சோனி மியூசிக் | |
2016 | "டோமரு லார்டு" | ஜில் ஜங் ஜக் | கவிதா மேரி தாமஸ் | விஷால் சந்திரசேகர் | ஏடாகி என்டர்டெயின்மெண்ட் | |
2016 | "குச்சி மிட்டாய்" | அரண்மனை 2 | கிப்கொப் தமிழா | திங்க் மியூசிக் | ||
2016 | "எறங்கி வந்து" | கதகளி | கிப்கொப் தமிழா ஆதி | கிப்கொப் தமிழா | வி மியூசிக் |
சான்றாதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Anthony Daasan - Kumuli". 14 January 2013. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Andony Daasan - IMDb". IMDb. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
- ↑ "Watch: The Dewarists S02E03 – Today". nh7.in. 12 November 2012. Archived from the original on 23 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Suhasini, Lalitha (17 May 2012). "Chennai Band La Pongal Is A Hit At M.A.D. Fest". Rolling Stone India. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
- ↑ Ravi, S Arjun (17 February 2012). "Gig Preview: Fireflies Festival 2012". nh7.in. Archived from the original on 23 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Storm Festival 2013 Partial Lineup Anounced". nh7.in. 30 November 2012. Archived from the original on 23 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "La Pongal - Coke Studio India". Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Andony Dasan”, IMDb, அணுக்கம்: 15-செப்-2015
- Award winning ceremony: "[SmileWebRadio] Pradharshini 2014 - Hope Of Tamil Cinema, Anthony Daasan". South-India cultural festival 2014, Chennai, India. [1].
- Earth Sync musician biography [2] பரணிடப்பட்டது 2015-12-22 at the வந்தவழி இயந்திரம்
- Song video: "Anthony in Party - Odakara | IndiEarth Out There", IndieEarth