பிரியா ஆனந்து

இந்திய நடிகை
(பிரியா ஆனந்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரியா ஆனந்து தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் இவர் பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

பிரியா ஆனந்து
பிறப்புபிரியா பரத்வாஜ் ஆனந்து
செப்டம்பர் 17, 1986 (1986-09-17) (அகவை 37)[1]
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009– தற்போது வரை

இளமைப் பருவம்

தொகு

தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுகிறார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பன்னிரண்டு தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் மூன்று தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார்.

நடித்த திரைப்படங்கள்

தொகு
வருடம் படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2009 வாமனன் திவ்யா தமிழ்
2010 புகைப்படம் சைனி ஜார்ஜ் தமிழ்
2010 லீடர் ரத்ன பிரபா தெலுங்கு
2010 ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா பிரியா தெலுங்கு
2011 நூற்றெண்பது ரேணுகா நாராயணன் தமிழ்
2011 180 தெலுங்கு
2012 இங்கிலீஷ் விங்கிலீஷ் ராதா இந்தி
2012 கோ அன்டே கோட்டி சத்யா தெலுங்கு
2013 ரங்கிரீஸ் மேகா ஜோஷி இந்தி
2013 எதிர் நீச்சல் கீதா தமிழ்
2013 ஃபுக்ரே பிரியா இந்தி
2013 வணக்கம் சென்னை அஞ்சலி ராஜ்மோஹன் தமிழ்
2015 வை ராஜா வை பிரியா தமிழ்
2014 அரிமா நம்பி அனாமிகா தமிழ்
2014 இரும்பு குதிரை சமயுத்த ராமகிருஷ்ணன் தமிழ்
2014 ஒரு ஊருல ரெண்டு ராஜா பிரியா தமிழ்

2015. த்ரிஷா இல்லனா நயன்தாரா. பிரியா ஆனந்த். தமிழ். இரயில் பயணி

2017. முத்துராமலிங்கம் விஜி. தமிழ்

2017. ராஜகுமாரா. நந்தினி. கன்னடம். முதல் படம்

2017. கூட்டத்தில் ஒருத்தன். ஜனனி. தமிழ்

2018 கயம்குலம் கொச்சுன்னி. ஜானகி. மலையாளம்

2018. ஆரஞ்சு. ராதா. கன்னடம்

2019. எல். கே. ஜி சரளா முனுசாமி. தமிழ்

2019. ஆதித்ய வர்மா. பிரியா மேனன். தமிழ்

2020. சுமோ. கொரோனா காரணத்தினால் படம் வெளியாகவில்லை

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. Happy Birthday To Priya Anand. chitramala.com. September 17, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_ஆனந்து&oldid=2998945" இலிருந்து மீள்விக்கப்பட்டது