கருப்பன்
கருப்பன் (Karuppan) என்பது 2017 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட அதிரடி மற்றும் நகைச்சுவை நிறைந்த திரைப்படம். இத்திரைப்படம் ரா . பன்னீர்செல்வத்தால் எழுதப்பட்டது மற்றும் இயக்கப்பட்டது. திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் தன்யா இரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு ஜனவரி 2017 ல் தொடங்கியது. செப்டம்பர் 29, 2017அன்று வெளியிடப்பட்டது. வெளியீட்டின் போது , இந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் கருப்பன், திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையில் வெற்றிகரமான படமாக உருவெடுத்தது.[1][2]
கருப்பன் Karuppan | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். பன்னீர்செல்வம் |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
கதை | ஆர். பன்னீர்செல்வம் |
இசை | டி. இமான் |
நடிப்பு | விஜய் சேதுபதி தன்யா இரவிச்சந்திரன் பாபி சிம்ஹா பசுபதி (நடிகர்) |
ஒளிப்பதிவு | சக்திவேல் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | ஏ. எம். ரத்னம் |
விநியோகம் | பிக்சர் பாக்சு நிறுவனம் |
வெளியீடு | செப்டம்பர் 29, 2017 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜய் சேதுபதி - கருப்பன்
- பாபி சிம்ஹா - கதிர்
- தன்யா இரவிச்சந்திரன் - அன்புச் செல்வி கருப்பன்
- பசுபதி - மாயீ (அன்பசெலவின் சகோதரர்)
- காவேரி - முத்து
- சிங்கம்புலி - கருப்பனின் மாமா
- ரேணுகா - கருப்பனின் தாயாக
- சரத் லோகித்தாஸ்வா - வரச நாட்டு பெருசு