தன்யா இரவிச்சந்திரன்

இந்திய நடிகை

தன்யா இரவிச்சந்திரன் (Tanya Ravichandran) (இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம்) என்பவர் ஒரு இந்திய தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் நடிகை ஆவார். இவர் சென்னையில் 1996 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் பிறந்தார். இவர் பலே வெள்ளையத்தேவா (2016), பிருந்தாவனம் (2017) மற்றும் கருப்பன் (2017)  திரைப்படங்களில் நடித்தமைக்காக அறியப்பட்டவர். இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்படத்தில் நடிகை சிநேகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.[1]

தன்யா இரவிச்சந்திரன்

தொழில் வாழ்க்கை தொகு

இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தன்யாவிற்கு இளம் வயதில் இருந்து  அவரது தாத்தாவின் வேலையைப் பார்த்ததால் நடிப்புத் துறையில் ஆர்வம் அதிகம். அவரது தாயார், லாவண்யா ஸ்ரீராம் ஒரு நாட்டியக் கலைஞராவார். இதனால்  தான்யா மற்றும் அவரது சகோதரி அபராஜிதா ஆகிய இருவரையும் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். சகோதரிகள் இருவரும்  சென்னையில் தங்களின் பதின் வயதுகளின் போது பல மேடைகளில் தங்கள் பரதநாட்டியத்தை அரங்கேற்றியுள்ளனர்.[2] இவர் திரைப்படத் துறையில், நுழைவதற்கு முன்னதாக இளங்கலை வணிகவியல் பட்டத்தை சென்னையில் உள்ள எம். ஓ. பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியிலும் அதைத் தொடர்ந்து மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க்ஸ் கல்லுாரியில் முதுகலை வணிகவியல் பட்டத்தையும் பெற்றார்.[3][4] 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தான்யா முதலில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார். இத்திரைப்படத்தில் சக அறிமுக நடிகர் மைத்ரேயனுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். மிஷ்கின் அவரது இயற்பெயரான அபிராமியை தனது தொழில் வாழ்க்கைக்காக தன்யா என மாற்றுமாறு கோரினார். அதற்கு அவர் ஒப்புக் கொண்டார். தள்ளிப்போடப்பட்ட அத்திரைப்படம்,  தற்போது  துப்பறிவாளன் என்ற பெயரில் முடிவுற்றுள்ளது. [5][6]  மிஷ்கினால் தன்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதைக் கேள்விப்பட்ட இயக்குனர் ராதா மோகன் தன்யாவை திரைச் சோதனைகளுக்குப் பிறகு பிருந்தாவனம் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். எனினும், தான்யாவிற்கு திரைக்கு வந்த முதல் வெளியீடு பலே வெள்ளையத்தேவா (2016) என்ற கிராமியப் பின்ணனியிலான நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் இவர் சசிக்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கான வாய்ப்பு பிருந்தாவனம் படத்திற்கான விளம்பர ஒளிப்படங்களின் வாயிலாக அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளிவந்த பிறகு வந்த விமர்சனங்களில் தன்யாவிற்கு செய்வதற்கு ஏதுமில்லை என்ற பாணியில் எழுதப்பட்டிருந்தது.[7][8]

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்த அவரது அடுத்த படமான பிருந்தாவனம் மே 2017 இல் வெளிவந்தபோது நேர்மறையான விமர்சனங்கள் வந்தன.  உதகமண்டலத்தின் பின்னணியில் செவிட்டு ஊமையான கண்ணன் (அருள்நிதி) என்ற கதாபாத்திரம் மற்றும் அங்கு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விவேக்  ஆகியோருக்கான நட்பையும், சந்தியாவின் (தான்யா) காதலையும் சுற்றி நகர்கிறது கதை. இத்திரைப்படத்தில் தான்யாவின் நடிப்பை தி இந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி நியூ இந்தியன் எக்சுபிரசு போன்ற பல பத்திரிக்கைகளும் பாராட்டியுள்ளன.[9][10][11] தன்யா பிறகு விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருடன் கருப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். [12] தன்யாவிற்கு மெல்லிசைப்பாடல்கள் கேட்பது பிடிக்கும் எனவும், நடிகர்கள் விஜய், கமல்ஹாசன் ஆகியோரைப் பிடிக்கும் எனவும், விருப்பமான திரைப்படம் “துள்ளாத மனமும் துள்ளும்” எனவும் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களின் பட்டியல் தொகு

ஆண்டு  திரைப்படம் கதாபாத்திரம்  குறிப்பு
2016 பலே வெள்ளையத்தேவா  தனிக்கோடி
2017 பிருந்தாவனம் சந்தியா
கருப்பன் அன்புசெல்வி

மேற்கோள்கள் தொகு

 1. https://behindtalkies.com/tanya-ravichandran/
 2. "Margazhi dancers in pictures". 21 December 2013. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
 3. "A DANCER FROM THE VETERAN FAMILY - Tamil Movie Images - A DANCER FROM THE VETERAN FAMILY - Ravichandran - Abirami - Aparajitha - Behindwoods.com". பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
 4. "Ravichandran's granddaughter Tanya : He's the reason for my Tamil debut - Interview". IndiaGlitz. 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
 5. "Maitreya is Mysskin's new hero". Archived from the original on 4 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. "Important details of Mysskin's next after 'Thupparivalan' - Tamil Movie News - IndiaGlitz.com". பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
 7. "Balle Vellaiya Thevaa (aka) Balle Vellaiya Theva review". பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
 8. "Review : Balle Vellaiyathevaa review-Below Average (2016)". Archived from the original on 24 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 9. Anantharam, Chitradeepa (26 May 2017). "Brindavanam: Celebrating life's moments". பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
 10. "Brindavanam review: A warm, fuzzy film that works for the most part". பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
 11. "Brindavanam movie review: Director Radha Mohan's film is heartwarming and funny". 26 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
 12. "Promising year ahead for Tanya". 11 April 2017. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்யா_இரவிச்சந்திரன்&oldid=3760915" இலிருந்து மீள்விக்கப்பட்டது