துள்ளாத மனமும் துள்ளும்
துள்ளாத மனமும் துள்ளும் (Thulladha Manamum Thullum) எழில் இயக்க்கத்தில் 1999 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் 4கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 12கோடி(தமிழ்) மற்றும் பிற மாநிலங்கள் நாடுகளில் 6 கோடிவசூல் செய்தது. 1999ஆம் ஆண்டின் 3ஆவது மிகப்பெரும் வெற்றிப்படமானது (படையப்பா முதல்வன் 1,2 இடங்கள்)
துள்ளாத மனமும் துள்ளும் | |
---|---|
![]() | |
இயக்கம் | எழில் |
தயாரிப்பு | ஆர்.பி.செளத்ரி |
இசை | எஸ். ஏ. இராஜ்குமார் |
நடிப்பு | விஜய், சிம்ரன், மணிவண்ணன், |
ஒளிப்பதிவு | ஆர். செல்வா |
படத்தொகுப்பு | வி.ஜெய்சங்கர் |
விநியோகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | ஜனவரி 29, 1999 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
கதாபாத்திரங்கள்தொகு
வெளியீடுதொகு
படம் ஆங்கில வருடம் 1999ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில்மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் வெள்ளிவிழா கொண்டாடியது.200 நாட்கள் பல திரையரங்குகளில் கடந்து மிகப்பெரும் வசூல் செய்தது. தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது சிம்ரனுக்கு வழங்கப்பட்டது. விஜய் எம்.ஜி.ஆர் சிறப்பு கௌரவ விருது பெற்றார். மேலும் இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் இரண்டாம் இடம் பெற்றது 1999ஆம் ஆண்டின் (ரஜினிகாந்த்தின் படைய்பா முதலிடம்) [1]