மாயநதி

2020இல் வெளியான தமிழ் திரைப்படம்

மாயநதி (Maayanadhi) என்பது 2020 வெளியான தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இதில் ஆடுகளம் நரேன், வெண்பா, அபிசரவணன், அப்புக்குட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[1] அசோக் தியாகராஜன் இயக்குனராக அறிமுகமாகி இப்படத்தை எழுதி, தயாரித்துள்ளார்.

மாயநதி
இயக்கம்அசோக் தியாகராஜன்
தயாரிப்புஅசோக் தியாகராஜன்
கதைஅசோக் தியாகராஜன்
இசைபவதாரிணி
நடிப்புஆடுகளம் நரேன்
வெண்பா
அபிசரவணன்
அப்புக்குட்டி
ஒளிப்பதிவுசிறீனிவாஸ் தேவம்சம்
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்ராஜி நிலா முகில் பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 31, 2020 (2020-01-31)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

பிப்ரவரி 2018 இல் அதிகாரப்பூர்வமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அசோக் தியாகராஜன் தான் புதிதாக நிறுவிய ராஜி நிலா முகில் பிலிம்ஸ் (RNM FILMS) புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ், இந்த முயற்சியின் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். நடிகர்களில் வெண்பா, அபிசரவணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பவதாரிணி இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த படத்திற்கு முறையே ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவாளராகவும், கோபி கிருஷ்ணா படத் தொகுப்பாளராகவும், மயில் கிருஷ்ணன் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[2] மாயநதி 31 சனவரி 2020 அன்று வெளியானது.[3]

ஒலிப்பதிவுதொகு

படத்துக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.[4] ஒலிச்சுவடு வெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜா, அமீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.[5]

விமர்சனம்தொகு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்திற்கு ஐந்தில் இரண்டு நட்சத்திரங்களைக் கொடுத்து, "ஒரு சிறந்த கதை அவர்களுக்கு [படத்தின் நடிகர்களுக்கு] மேலும் உதவியிருக்கும்" என்று கூறியது.[6] ஏசியன் ஏஜ் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டரை நட்சத்திரங்களை வழங்கியது. மேலும் "ஒரு இறுக்கமான கதை மற்றும் இன்னும் கொஞ்சம் ஒத்திசைவு இருந்திருந்தால் படத்தை மேம்படுத்தியிருக்கும்" என்று எழுதியது.[7]

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயநதி&oldid=3304081" இருந்து மீள்விக்கப்பட்டது