மகேஷ், சரண்யா மற்றும் பலர்

மகேஷ், சரண்யா மற்றும் பலர் 2008 ஆம் ஆண்டு சக்தி வாசு மற்றும் சந்தியா நடிப்பில், வித்தியாசாகர் இசையில், ரவி இயக்கத்தில், கூல் புரொடக்சன்ஸ் சித. செண்பககுமார் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1] 2008 பெப்ரவரி 11 இல் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கியது.[2] 2008 நவம்பர் 28 இல் படம் வெளியானது.[3]

மகேஷ், சரண்யா மற்றும் பலர்
இயக்கம்பி. வி. ரவி
தயாரிப்புசித. செண்பகக்குமார்
திரைக்கதைபி. வி. ரவி
இசைவித்தியாசாகர்
நடிப்புசக்தி வாசு
சந்தியா
சரண்யா மோகன்
ஒளிப்பதிவுகே. குணசேகரன்
படத்தொகுப்புகே. மோகன் குமார்
கலையகம்கூல் புரொடக்சன்ஸ்
வெளியீடு28 நவம்பர் 2008 (2008-11-28)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ. 4 கோடி

கதைச்சுருக்கம்

தொகு

கல்லூரியில் படிக்கும் மகேஷ் (சக்தி வாசு) தன் தங்கை கீர்த்தனாவின் (சரண்யா) திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வருகிறான். அழகான கூட்டுக் குடும்பத்தில் ஒருவன் மகேஷ். அவனது குடும்பத்தில் அனைவரும் அவன் மீது அளவுகடந்த பாசத்தைக் கொண்டுள்ளனர். அவனுடைய வருகைக்காக அவனது குடும்பத்தினர் அனைவரும் காத்திருக்கின்றனர். சரண்யா தன் நிச்சயதார்த்தத்திற்கு அவன் வராதது குறித்து கோபித்துக்கொள்கிறாள். தான் நிச்சயதார்த்தத்திற்கு பங்கெடுக்காததற்கு மன்னிப்புக்கோரும் அவன், அதற்கானக் காரணத்தைக் கூறுகிறான். தான் எதிர்பாராமல் சந்தித்த பெண்ணைப் பற்றியும் அவள் மீது தான் கொண்ட காதலைப் பற்றியும் கூறத் தொடங்குகிறான்.

மகேஷின் காதல்: சரண்யாவை (சந்தியா) சந்திக்கும் மகேஷ் அவளைக் காதலிக்கிறான். மகேஷின் காதல் கதையை அந்த வீட்டிலுள்ள அனைவரும் கேட்கின்றனர். கீர்த்தனாவின் திருமணத்தன்று அவனது காதல் கதையின் இறுதிக்கட்டத்தைக் கூறுவதாகக் கூறுகிறான். அவன் சொன்னபடி திருமண நாளன்று அவன் சொல்லும் முடிவைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அவன் காதலி சரண்யாவை ஒருவன் கொன்றுவிடுகிறான். இதை அறியும் மகேஷ் சரண்யாவைக் கொன்றவனைக் கொல்கிறான். தான் உடனே சிறைக்குச் சென்றால் தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாது மேலும் தங்கையின் திருமணத்தில் இதனால் பிரச்சனைகள் உருவாகும் என்று எண்ணும் மகேஷ், தன் தங்கையின் திருமணத்தில் கலந்துகொண்டபிறகு தானே காவல்நிலையத்தில் சென்று சரணடையப் போவதைக் கூறுகிறான். அவ்வாறே சென்று சரணடைகிறான்.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர்.

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்கள்
1 வைகறைப் பனியே எஸ். பி. பாலசுப்ரமணியம் யுகபாரதி
2 தந்தத்தில் செய்த நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் ஜெயந்தா
3 தஜம் தஜம் பின்னி கிருஷ்ணகுமார் பா. விஜய்
4 விழியில் விழியில் ஹரிசரண், ரீடா
5 என் பாடல் சைந்தவி யுகபாரதி
6 காற்றே காற்றே பென்னி தயாள் நா. முத்துக்குமார்
7 என் உயிருக்குள் ராஜலட்சுமி, திப்பு ஜெயந்தா
8 யாரது யாரது கார்த்திக் பா. விஜய்

மறுஆக்கம்

தொகு
  • ஒடியா மொழியில் அனுபவ் மொகந்தி, அர்ச்சிதா சஹு நடிப்பில் அகாஷே கி ரங்கா லகிலா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. அப்படம் "ஒடிசா மாநில அரசின் விருதுகள்" பலவற்றைப் பெற்றது.[4]
  • வங்காள மொழியில் ஜிஷு சென்குப்தா நடிப்பில் கோகோனோ பிடாய் போலோ நா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "திரைப்படம்".
  2. "படப்பிடிப்பு துவக்கம்". Archived from the original on 2008-04-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  3. "வெளியீடு - விமர்சனம்". Archived from the original on 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  4. "ஒடிசா மொழி - மறுஆக்கம்".
  5. "வங்காள மொழி - மறுஆக்கம்".
  6. "வங்காள மொழி - மறுஆக்கம்".