ரூபாய் (திரைப்படம்)

எம். அன்பழகன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரூபாய் (Rubaai) எம். அன்பழகன் இயக்கத்தில், 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு சாலமன் தயாரிப்பில், டி. இமான் இசையில், 14 ஜூலை 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில், சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள் தொகு

சந்திரன், ஆனந்தி, கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், மனோகர், ஜி. மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பரோட்டா முருகேஷ், தாஸ், மூணார் சுப்பிரமணி, ஞானவேல், மைனா பாலா.

கதைச்சுருக்கம் தொகு

இரு நண்பர்களான பரணியும் (சந்திரன்) பாபுவும் (கிஷோர் ரவிச்சந்திரன்) சின்ன டிரக் ஓட்டும் தொழில் செய்பவர்கள். தேனியில் இருக்கும் அவர்கள், வண்டி கடனை கட்ட இயலாமல் போகிறது. அந்நிலையில், குங்குமராஜன் (சின்னி ஜெயந்த்) என்பவருக்கு வீடு மாற்றி கொடுக்கும் வேலையை செய்யும் பொழுது, அவரின் மகள், பொன்னியை (ஆனந்தி) காதல் செய்கிறான் பரணி. குங்குமராஜன் குடிபுகும் புது வீடு அவருக்கு கிடைக்காமல் போவதால், அந்த சின்ன டிரகிலேயே இரவு முழுவதும் பொருட்களுடன் சென்னையில் அலைய நேரிடுகிறது.

அதே சமயம், மணி ஷர்மா (ஹரிஷ்) பொலிஸிடமிருந்து தப்பிப்பதற்காக திருடிய பணத்தை அந்த சின்ன டிரக்கில் மறைத்து வைக்க நேரிடுகிறது.

வெகு நேரம் தேடியும் வீடு கிடைக்காமல் போன கோபத்தில், பொருட்களை நடுவீதியில் இறக்கி வைக்கும் பொழுது நிறைய பணத்தை பார்க்கும் குங்குமராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவர் குணமடைவதற்குள் கிடைத்த முக்கால்வாசி பணத்தை மூவரும் செலவு செய்துவிடுகிறார்கள். மணி ஷர்மாவும் போலீசும் பணத்தை தீவிரமாக தேட, பரணியும் பாபுவும் மாட்டிக்கொண்டார்களா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு தொகு

இப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை டி.டி. இமான் அமைத்தார். யுகபாரதி எழுதிய நான்கு பாடல்களை கொண்ட தொகுப்பு, சோனி மியூசிக் இந்தியா நிறுவனத்தால் 26 அக்டோபர் 2016 அன்று வெளியிடப்பட்டது.

தயாரிப்பு தொகு

பிரபு சாலமனின் கயல் என்ற திரைப்படத்தில் நடித்த சந்திரனும் ஆனந்தியும் இந்த படத்தில் நடித்துள்ளனர். பைசா என்ற பெயருடன், 2015 ஆம் ஆண்டு துவக்கத்தில் தயாரிப்பு பணிகள் துவங்கின. அப்போது, படத்தின் பெயர் பைசல் என்று ஊடகங்களில் தவறாக வெளியானது.[2][3] 2016 மத்தியில் படம் ரூபாய் என்று பெயரிடப்பட்டது.[4]

வெளியீடு தொகு

பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், திரி போன்ற படங்களுடன் 14 ஜூலை 2017 அன்று ருபாய் படமும் வெளியானது.[5]

விமர்சனம் தொகு

காதல் மற்றும் அதிரடி காட்சிகளின் கலவை ரசிக்கும்படி அமையவில்லை என்றும், நல்ல முயற்சி என்றாலும், தவறுகள் பல இருப்பதாகவும், படம் சரியான வசூலை பெறவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.[6][7][8]

மேற்கோள்கள் தொகு

  1. "No stopping Prabhu Solomon !". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
  2. "http://www.indiaglitz.com/". {{cite web}}: External link in |title= (help)
  3. "http://www.newindianexpress.com/". {{cite web}}: External link in |title= (help)
  4. "http://www.behindwoods.com". {{cite web}}: External link in |title= (help)
  5. "http://www.newindianexpress.com". {{cite web}}: External link in |title= (help)
  6. "http://timesofindia.indiatimes.com". {{cite web}}: External link in |title= (help)
  7. "http://www.deccanchronicle.com". {{cite web}}: External link in |title= (help)
  8. "http://www.newindianexpress.com". {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபாய்_(திரைப்படம்)&oldid=3660816" இலிருந்து மீள்விக்கப்பட்டது