கணையாழி (இதழ்)

கணையாழி ((ஒலிப்பு) என்னும் இதழ் 1965ல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் திகழ்ந்தார். தொடக்க நாட்களில் இது புது தில்லி வட்டார அறிவிஜீவிகளுக்காக நடத்தபட்டதாக ஒரு கணிப்பு நிலவியது. பின்னர் சற்று விரிவடைந்து இலக்கிய தன்னுணர்வுகளைத் தூண்டியதாக சொல்லப்படுகின்றது.

தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.

ஆசிரியர்கள்

தொகு

தி. ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோர் கணையாழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கணையாழி

தொகு

கணையாழி, இப்பொழுதும் தொடர்ந்து வெளிவரும் ஒரு மாதாந்த இலக்கிய இதழாகும். இப்பொழுது, தசரா அறக்கட்டளையினரால் கணையாழி வெளியிடப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளாக வெளியிடப்படாதிருந்த கணையாழி இதழ் 2011, ஏப்ரல் 14 முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. இதன் புதிய ஆசிரியர் குழுவில் ம. இராசேந்திரன், கவிஞர் சிற்பி, மு. ராமசுவாமி, ட்ராட்ஸ்கி மருது, கி. நாச்சிமுத்து, பிரசன்னா ராமசாமி, சுபாஷினி ட்ரெம்மல் ஆகியோர் உள்ளனர்.

நிறுவனர் : கி. கஸ்தூரி ரங்கன் , பதிப்பாளர்: ம. இராசேந்திரன், ஆசிரியர்: மய்திலி ராசேந்திரன், நிருவகை ஆசிரியர்: உரு. அரசவேந்தன், துணை ஆசிரியர்கள்: வேல் கண்ணன், ஜீவ கரிகாலன், ஆசிரியர் குழு: மு. ராமசாமி, ட்ராஸகி மருது, கி. நாச்சிமுத்து, சுபாஷிணி, நா. கண்ணன், சாந்தி சித்ரா, க. முத்துக்கிருஷ்ணன். ஆலோசகர்கள்: கே. எஸ். சுப்பிரமணியன், வ. ஜெயதேவன், ரெ. பாலகிருஷ்ணன், சு. சங்கரவடிவேலு, நா. சுவாமிநாதன், தமன் பிரகாஷ், கவிதா சொக்கலிங்கம். அயலக ஆலோசகர்கள்: எம். ஏ. முஸ்தபா(சிங்கப்பூர்), கார்த்திகா பார்த்திபன் (கனடா). உதவி ஆசிரியர்: ரமேஷ் ரக்சன். இதழழகு; கோபு ராசுவேல், சட்ட ஆலோசகர்: வழக்கறிஞர் அ. பன்னீர்செல்வம். மேலாளர் இரா; ஜெகன்.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணையாழி_(இதழ்)&oldid=3450043" இலிருந்து மீள்விக்கப்பட்டது