பாலகுமாரன்

தமிழ் -எழுத்தாளர்

பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.[1]

பாலகுமாரன்
பிறப்புசூலை 5, 1946(1946-07-05)
பழமானேரி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு15 மே 2018(2018-05-15) (அகவை 71)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிபுதின எழுத்தாளர்
பிள்ளைகள்கௌரி, சூரியா

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

படைப்புகள்தொகு

புதினங்கள்தொகு

அகரவரிசையில்

கதையின் பெயர் வெளியான காலம் இதழின்பெயர் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் வெளியீட்டாளர் பெயர் முதற்பதிப்பு ஆண்டு குறிப்பு
அகல்யா - - அகல்யா (5ஆவது நூல்) - -
அகல்விளக்கு - - - -
அடுக்கு மல்லி - - - - -
அத்திப்பூ - - - - -
அப்பம் வடை தயிர்சாதம் - குமுதம் - - -
அப்பா! 1993 - - - -
அமிர்தயோகம் - - - - -
அம்மாவும் பத்து கட்டுரைகளும் - - - - -
அரசமரம் - - - - -
அவரும் அவளும் - - - - -
அன்பரசு - - - - - மாணிக்கவாசகர் புராணம்
ஆசை என்னும் வேதம் - - - - -
ஆசைக்கடல் - - - - -
ஆயிரம் கண்ணி - - - - -
ஆருயிரே மன்னவரே - - - - -
ஆலமரம் - - - - -
ஆனந்த யோகம் - - - - - தாயுமானவர் புராணம்
ஆனந்த வயல் - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
இதுதான் காதல் என்பதா..? - - - - -
இதுதான் வயது காதலிக்க... - - - - -
இரண்டாவது கல்யாணம் - - - - -
இரண்டாவது சூரியன் - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
இரும்பு குதிரைகள் 1984 கல்கி இரும்புக் குதிரைகள் (7ஆவது நூல்) - - மோட்டார் தொழில் பற்றிய கதை
இனி என் முறை - - - - -
இனிது இனிது காதல் இனிது - - - - -
இனிய யட்சினி - - - - -
உச்சித் திலகம் - - - - -
உடையார் - - - - - தஞ்சை பெருவுடையார் கோவிலின் கதை
உத்தமன் - - - - -
உள்ளம் கவர் கள்வன் - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
உறவில் கலந்து உணர்வில் நனைந்து 1993 தினமணி கதிர் - - -
எங்கள் காதல் ஒரு தினுசு - - - - -
எட்ட நின்று சுட்ட நிலா - - - - -
எதிர்ப்பக்கம் - கல்கி நானே எனக்கொரு போதி மரம் - ஏப்ரல் 1989 திருமணத்திற்கு பின்னர் அறுந்துபோகும் ஆண்களது நட்பின் கதை
என் அன்புள்ள அப்பா - - - - -
என் கண்மணி - - என் கண்மணி (20ஆவது நூல்) - -
என் கண்மணித் தாமரை - - - - -
என் மனது தாமரைப்பூ - - என் மனது தாமரைப்பூ (18ஆவது நூல்) - -
என்றென்றும் அன்புடன் - - என்றென்றும் அன்புடன் (9ஆவது நூல்) - -
என்னுயிரும் நீயல்லவோ 1994 கல்கி - - -
என்னுயிர் தோழி - - - - -
ஏதோ ஒரு நதியில் - - ஏதோ ஒரு நதியில் (2ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை - குறுநாவல்
ஏழாவது காதல் - - - - -
ஏனோ தெரியவில்லை - - - - -
ஒரு காதல் நிவந்தம் - - - நர்மதா பதிப்பகம், சென்னை - ராஜேந்திர சோழர் - திருவாரூர் தளிச்சேரிப்பெண் பரவையார் காதல்
ஒரு சொல் - - - - - காஞ்சி சங்கரர் கதை
கங்கை கொண்ட சோழன் - - - - - 'கங்கைகொண்டசோழபுரத்தின் கதை
கடல் நீலம் - - நானே எனக்கொரு போதிமரம் (28ஆவது நூல்) - 1989 ஏப்ரல்
கடலோரக் குருவிகள் - - - - -
கடற்பாலம் - - கடற்பாலம் (15ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை -
கடிகை - - - - -
கண்காட்சி - - - - -
கண்ணாடிக் கோபுரங்கள் - - - - -
கண்ணே கலைமானே - - - - -
கதைகதையாம் காரணமாம் - - - - -
கரையோர முதலைகள் - - கரையோர முதலைகள் (14ஆவது நூல்) - - காதலியின் திருமணத்தை நடத்தி வைக்கும் காதலனின் கதை
கர்ணனின் கதை - - - - -
கல்குதிரை - - - - -
கல்யாண முருங்கை - - - - -
கல்யாணத் தேர் - - - - -
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை - - - - -
கவிழ்ந்த காணிக்கை - - - - - திருகளத்தூரில் கவிழ்ந்து பிளந்து கிடக்கும் நந்தியின் கதை
கள்ளி - - - - -
கற்றுக்கொண்டால் குற்றமில்லை - - - - -
கனவு கண்டேன் தோழி - - - - -
கனவுக்குடித்தனம் - - - - -
கனவுகள் விற்பவன் - - - - -
காசும் பிறப்பும் - - - - -
காதல் சொல்ல வந்தேன் - - - - -
காதல் வரி - - - - -
காதல் வெண்ணிலா - - - - -
காதற் கிளிகள் - - - - -
காதற் பெருமான் - - - - - அருணகிரிநாதர் புராணம்
காமதேனு - - - - -
காற்றுக்கென்ன வேலி - - - - -
கானல் தாகம் - - - - -
கிருஷ்ண மந்திரம் - - - - -
குசேலர் - - - - -
குயிலே குயிலே - - - - -
குரு - - - - -
கூடு - - - - -
கை வீசம்மா கை வீசு - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
கொஞ்சும் புறாவே - - - - -
கொம்புத்தேன் - - கொம்புத்தேன் (13ஆவது நூல்) - -
சக்ரவாஹம் - - - - -
சக்தி - - - - -
சிநேகமுள்ள சிங்கம் - - - - -
சிம்மாசனம் - - - - - குமரகுருபரர் கதை
சின்ன சின்ன வட்டங்கள் - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
சுந்தரி கண்ணால் ஒரு சேதி - - - - -
சுழற்காற்று - - - - -
செண்பகத்தோட்டம் - - - - -
செப்புப் பட்டயம் - - - - -
செவ்வரளி - - என் கண்மணி (20ஆவது நூல்) - - விலங்கு மருத்துவனின் கதை
சொர்ண வேட்டை - - - - -
தங்கக்கை - - - - -
தனரேகை - - - - -
தனிமைத் தவம் - - - - -
தாயுமானவன் - - தாயுமானவன் (19ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை -
திருப்பூந்துருத்தி - - - - -
திருமணமான என் தோழிக்கு - - - - -
திருவடி - - - - -
துணை - - - - -
துளசி - - - - -
தென்னம் பாளை - - - - -
தொப்புள் கொடி - - - - -
தோழன் - - - - -
நல்ல முன்பனிக்காலம் - - - - -
நான்காம் பிறை - - - - -
நான் என்ன சொல்லி விட்டேன் - - - - -
நிகும்பலை - - - - -
நிலாக்கால மேகம் - - நிலாக்கால மேகம் (12ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை -
நிலாவே வா - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
நிழல் யுத்தம் - - நிழல் யுத்தம் நர்மதா பதிப்பகம், சென்னை 1987 நவம்பர் சங்கரன் மகள் லலிதாவிற்கும் முரளிக்கும் நடந்த மணவாழ்க்கை
நீ வருவாய் என - - நீ வருவாய் என (8ஆவது நூல்) - -
நெளிமோதிரம் - - - - -
நெல்லுச் சோறு - - - - -
நேற்று வரை ஏமாற்றினாள்! - - - - -
பச்சை வயல் மனது - - பச்சை வயல் மனது (6ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை -
பட்டாபிஷேகம் - - - - -
பணம் காய்ச்சி மரம் - - - - -
பந்தயப் புறா - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
பயணிகள் கவனிக்கவும் - - - - -
பவழமல்லி - - - - -
பனி விழும் மலர் வனம் - - - - -
பலாமரம் - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
பாகசாலை - - - - -
பிரம்புக்கூடை - - - - -
புருஷ வதம் - - - - -
பெண்ணாசை - - - - - 'பீஷ்மரின் கதை
பெரிய புராணக் கதைகள் - - - - -
பேய்க் கரும்பு - - - - -
பொய்மான் - - - - -
பொன்னார் மேனியனே - - - - -
போகன் வில்லா - - - - -
போராடும் பெண்மணிகள் - - - - -
மணல் நதி - - - - -
மரக்கால் - - மரக்கால் (17ஆவது நூல்) - - விபத்தில் காலை இழந்த சிறுவனின் கதை
மனக் கோயில் - - - - -
மனசே மனசே கதவைத் திற - - - - -
மனம் உருகுதே - - - - -
மண்ணில் தெரியுது வானம் - - - - -
மாலைநேரத்து மயக்கம் - - - - -
மாவிலைத் தோரணம் - - - - -
மானச தேவி - - - - -
மீட்டாத வீணை - - - - -
முதிர்கன்னி - - - - -
முந்தானை ஆயுதம் - - - - -
முன்கதைச் சுருக்கம் - - - நர்மதா பதிப்பகம், சென்னை -
மெர்க்குரிப் பூக்கள் - சாவி மெர்க்குரிப் பூக்கள் (3ஆவது நூல்) - - தொழிற்சங்க ஊழியனின் கதை
மெளனமே காதலாக... - - மெளனமே காதலா (4ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை -
மேய்ச்சல் மைதானம் - - - - -
யானை வேட்டை - - யானை வேட்டை (23ஆவது நூல்) - - தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கதை
ரகசிய சிநேகிதனே - - - - -
ராஜ கோபுரம் - - - - -
வன்னி மரத் தாலி - - - - -
வாலிப வேடம் - - - - -
வாழையடி வாழை - - - - -
விழித்துணை - - விழித்துணை (234ஆவது நூல்) - -
வில்வ மரம் - - வில்வமரம் (22ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை -
வெள்ளைத் துறைமுகம் - - - - -
வெற்றிலைக் கொடி - - - - -
வேட்டை - - - - -

கட்டுரைகள்தொகு

கட்டுரைத் தொகுப்புகள்தொகு

  • பாலகுமாரன் கட்டுரைகள்
  • சிறுகதைகளும் கட்டுரைகளும்

சிறுகதைத் தொகுப்புகள்தொகு

  • சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
  • சுகஜீவனம்
  • கடற்பாலம்

கவிதைத் தொகுப்புகள்தொகு

  • விட்டில்பூச்சிகள்

சிறுகதைகளும் கவிதைகளும் தொகுப்புகள்தொகு

வாழ்க்கை வரலாறுகள்தொகு

  • பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)

தன்வரலாறுதொகு

  • முன்கதைச் சுருக்கம்
  • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
  • ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

மறுஆக்கங்கள்தொகு

  • மகாபாரதம் (இரு பாகங்கள்)

பாலகுமாரன் சிறுகதைப்பட்டியல்தொகு

(அகரவரிசைப்படி முறைப்படி)

கதையின் பெயர் வெளியான காலம் இதழின்பெயர் தொகுப்பின் பெயர் வெளியீட்டாளர் பெயர் முதற்பதிப்பு ஆண்டு
இடையினங்கள் - - விசிறி சாமியார் விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை 1991
ஒன்றானவன் - - - -
ஒன்றுமில்லாதவர்கள் - - விசிறி சாமியார் விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை 1991
ஓசையற்ற அலறல் - அமுதசுரபி நானே எனக்கொரு போதிமரம் - ஏப்ரல் 1989
கரை தொடும் அலைகள் - 1989 குங்குமம் நானே எனக்கொரு போதிமரம் ஏப்ரல் 1989
கல் பரிசல் - - விசிறி சாமியார் விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை 1991
சிட்டுக்குருவியும் ஸ்வர்ணலதாவும் - இதயம் பேசுகிறது நானே எனக்கொரு போதிமரம் - ஏப்ரல் 1989
தாக்கம் 1989 குங்குமம் நானே எனக்கொரு போதிமரம் - ஏப்ரல் 1989
தோழி - - - - -
நானே எனக்கொரு போதிமரம் - சாவி நானே எனக்கொரு போதிமரம் - ஏப்ரல் 1989
பாகல் - - விசிறி சாமியார் விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை 1991
மின்மினிக்கூட்டம் - - விசிறி சாமியார் விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை 1991
விகல்பம் 1988 அக்டோபர் ஜாப் கைடுலைன்ஸ் நானே எனக்கொரு போதிமரம் - ஏப்ரல் 1989
ஸ்திரீ லோலன் - ஆனந்த விகடன் நானே எனக்கொரு போதிமரம் - ஏப்ரல் 1989

திரைக்கதைகள்தொகு

வ.எண் திரைப்படத்தின் பெயர் வெளியான நாள் இயக்குநர் நடிகர்
01 நாயகன் 1987 மணிரத்னம் கமல்ஹாசன்
02 குணா 1992 சந்தான பாரதி கமல்ஹாசன்
03 செண்பகத் தோட்டம் 1992 மனோபாலா
04 ஜென்டில்மேன் 1993 சூன் 30 ஷங்கர் அர்ஜுன்
05 காதலன் 1994 பிப்ரவரி 19 ஷங்கர் பிரபுதேவா
06 கிழக்கு மலை
07 மதங்கள் எழு
08 ரகசிய போலிஸ்
09 பாட்ஷா 1995 சுரேஷ் கிருஷ்ணா ரஜினிகாந்த்
10 சிவசக்தி 1996 சுரேஷ் கிருஷ்ணா சத்யராஜ்
11 உல்லாசம் 1997 ஜெ. டி. ஜெர்ரி அஜித் குமார்
12 வேலை
13 வல்லவன்
14 ஜீன்ஸ் ஷங்கர் பிரசாந்த்
15 முகவரி 2000 வி. இசட். துரை அஜித் குமார்
16 உயிரிலே கலந்து
17 சிட்டிசன் 2001 சரவண சுப்பையா அஜித் குமார்
18 மஜ்னு 2001 ரவிச்சந்திரன் பிரசாந்த்
19 கிங் 2002 சாலமோன் விக்ரம்
20 காதல் சடுகுடு 2003 ஏப்ரல் 13 விக்ரம் வி. இசட். துரை
21 மன்மதன்
22 கலாபக் காதலன் 2006 பிப்ரவரி 17 ஆர்யா
23 புதுப்பேட்டை 2006 மே 26 செல்வராகவன் தனுஷ்

விருதுகள்தொகு

இலக்கிய விருதுகள்தொகு

  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
  • இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
  • தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)

கலைதொகு

  • கலைமாமணி[2]

திரையுலக விருதுகள்தொகு

  • தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)

மறைவுதொகு

மே 14, 2018 அன்று இரவு கடும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.[3][4]

மேற்கோள்கள்தொகு

  1. "Balakumaran about his Novels". The Hindu. 30 June 2016. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Stories-from-the-heart/article14410319.ece. பார்த்த நாள்: 12-12-2017. 
  2. "எம். எஸ். என் தளச் செய்தி". 2007-05-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-05-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. "எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!".
  4. எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

வெளி இணைப்புகள்தொகு

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - அறிமுகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகுமாரன்&oldid=3638382" இருந்து மீள்விக்கப்பட்டது