காம தேவன்

(மன்மதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள் ஆவார். இவருக்கு ராகவிருந்தன், அனங்கன், கந்தர்வன், மன்மதன், மனோசித், ரதிகந்தன்', மதனன், புஷ்பவனன், மாறன் புஷ்பதானுவன், வசந்தன் போன்ற பிற பெயர்களும் உண்டு.

காம தேவன்
அதிபதிகாமத்து
வகைதேவர்கள்
ஆயுதம்கரும்புவில் மற்றும் மலர்க்கணைகள்
துணைரதி தேவி

காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. ரதி தேவி காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.

தோற்றம்

புராணங்களில் படி, காம தேவன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன் ஆவார். சில புராணங்களில் இவர் திருமாலின் மகனாகவும் கருதப்படுகிறார். திருமால் கண்ணனாக அவதரித்த போது, காம தேவன் கண்ணன் - ருக்மினியின் மகன் பிரதுயும்னனாக அவதரித்தார். இவரை பிரம்மாவின் தம்பி என்று கூட கூறுகிறார்கள்.[1]

புராணக் கதைகள்

காமத்தகனம்

 
தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமஅன்பு எய்தும் காமன்

காம தேவன் சிவனால் எரிக்கப்பட்ட கதை மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அக்கதை பின் வருமாறு.

கைலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சிவபெருமான் பார்வதியை மணக்க வேண்டி, காம தேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைக்கொண்டு காம தேவனை எரித்து விடுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட ரதிதேவி சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள். காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார். பின்னர், திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது, காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும், அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார்.

காயத்திரி மந்திரம்

காம தேவனுக்குரிய காயத்ரி மந்திரம் கீழ்க்கண்டவாறு

காமதேவாய விதுமகே புட்பதேவாய தீமகி
தன்னோ அனங்கப் பரஞ்சோதியது

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=20585 அண்ணனின் ஆணை!
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காம தேவன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம_தேவன்&oldid=3874592" இலிருந்து மீள்விக்கப்பட்டது