இரதி தேவி
(ரதி தேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரதி தேவி இந்து மதத்தில் உள்ள மன்மதன் என்ற உடலியல் இன்பம் சார் கடவுளின் மனைவி ஆவாள் அதனால் இவளுக்கு காமினி, சுகுமாரி, சுகந்தி, சுகன்யா என்கிற திருப்பெயரும் உண்டு. மேலும் இவள் உடல் தேகமானது ரோஜா மலருடன் ஒப்பிட்டு சரோஜினி, சரோஜா தேவி என்றும் கூறுவதும் உண்டு.[1]
இரதி | |
---|---|
அதிபதி | காதல், காமம், இன்பம்
|
தேவநாகரி | रति |
சமசுகிருதம் | Rati |
ஆயுதம் | வாள் |
துணை | மன்மதன் (காம தேவன்) |
ரதி மிகவும் அழகானவளாக கருதப்படுகிறாள். காமத்தகனம் முடிந்த பிறகு மகாபாரத காலத்தில் கிருஷ்ண அவதாரம் எடுத்து, காமன் மீண்டும் உயிர்பெறும் வரை தீவிர விரதங்களை ரதி மேற்கோண்டதாக நம்பப்படுகிறது.
சிலைகள்
தொகுரதிக்கு பல்வேறு கோயில்களில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு விதங்களில் உள்ளமை பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். [2]
- புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோயில்
- மதுரை புதுமண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதி
- தாராமங்கலம் கோயில்
- திருகுறுக்கை கோயில்
- தென்காசி கோவில்
- ஸ்ரீவில்லிபுத்தூ கோயில்