மைனா (திரைப்படம்)

பிரபு சாலமன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இதே பெயரில் வெளியான கன்னடத் திரைப்படம் பற்றி அறிய, மைனா (கன்னடத் திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்

மைனா பிரபு சாலமன் கதை எழுதி இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினும் கல்பாத்தி அகோரமும் வெளியிட்டனர். இதில் வித்தார்தும் அமலாபாலும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினர். இப்படத்திற்கு இமான் இசையமைத்தார். 2010 நவம்பர் 5 ஆம் தேதி தீபாவளியன்று இப்படம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் இப்படத்தில் நடித்தமைக்காக தம்பி ராமையாவிற்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.[2][3]

மைனா
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புஜான் மாக்சு
கதைபிரபு சாலமன்
இசைடி.இமான்
நடிப்புவிதார்த்
அமலா பால்
தம்பி இராமையா
சேது
ஒளிப்பதிவுஎம். சுகுமார்
படத்தொகுப்புஎல். கே. வி. தாஸ்
கலையகம்ஷாலோம் ஸ்டுடியோஸ்
விநியோகம்உதயநிதி ஸ்டாலின்
ஏஜியெஸ் என்டர்டைன்மென்ட்
வெளியீடுநவம்பர் 5, 2010 (2010-11-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 5 கோடி [1]

கதைச் சுருக்கம் தொகு

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

மைனா
ஒலிப்பதிவு
வெளியீடு23 செப்டம்பர் 2010 (2010-09-23)
ஒலிப்பதிவுஜங்கலி இசையகம்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்
நீளம்19:20
இசைத்தட்டு நிறுவனம்ஜங்கலி இசையகம்
இசைத் தயாரிப்பாளர்டி. இமான்

இப்படத்தின் ஐந்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கியவர் டி. இமான் ஆவார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை யுகபாரதி, எக்நாத் ஆகியோர் எழுதியிருந்தனர். அனைத்துப் பாடல்களும் மிகவும் வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[3][4]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "மைனா மைனா"  யுகபாரதிசான் 04:35
2. "கிச்சு கிச்சு தாம்பலம்"  யுகபாரதிஹரிணி ரவி, சிறீ ரஞ்சனி, எஸ். சிறீமதி, ஜி. ஆத்திரெயா, இலட்சுமண் அரவிந்த், சோலார் சாய் 04:16
3. "நீயும் நானும்"  எக்நாத்பென்னி தயாள், ஸ்ரேயா கோசல் 04:57
4. "ஜிங்கு சிக்கா"  யுகபாரதிசோலார் சாய், கல்பனா 03:55
5. "கையப் புடி"  யுகபாரதிநரேஷ் ஐயர், சாதனா சர்கம் 04:03

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனா_(திரைப்படம்)&oldid=3709874" இருந்து மீள்விக்கப்பட்டது