தேவன் (நடிகர்)

இந்திய நடிகர்

தேவன் (Devan (actor)) மே 5, 1954இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1]

தேவன்
பிறப்பு5 மே 1954 (1954-05-05) (அகவை 70)
திருச்சூர், கேரளம், இந்தியா
பணிநடிகர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1985முதல் தற்போது வரை
பெற்றோர்ஸ்ரீனிவாசன், லலிதா
வாழ்க்கைத்
துணை
சுமா
பிள்ளைகள்லட்சுமி

இளமைப்பருவம்

தொகு

தேவன், மே 5, 1954[2] அன்று, இந்தியாவின் திரிச்சூர் மாவட்டத்தில், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, ஸ்ரீநிவாசன், ஒரு பொது வழக்கறிஞர் ஆவார். மற்றும் அவரது தாயார் லலிதா, வீட்டு நிர்வாகி ஆவார்.[3]

தேவன் தனது ஆரம்பக் கல்வியினை, திருச்சூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தார். அவர் திரிச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டம் பெற்றார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படித்து பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

தேவன், 1985 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான வெள்ளமின் படத்தின் தயாரிப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். ஆனால் படத் தயாரிப்புகளில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[4]

சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தயாரிப்பாளரை அணுகியதன் மூலம் தேவன் துணை நடிகராக நடிக்கத் தொடங்கினார்.[5] இவர் நடித்த படங்களில், "ஏகலைவன்", பாட்ஷா மற்றும் இந்திரபிரஸ்தம் போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.[1] மேலும், இவர், பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.[6]

இவர் கேரள மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்.

சொந்த வாழ்க்கை

தொகு

இவருக்கு ஷோபா, ஷீலா மற்றும் சுரேஷ்பாபு என்கிற மூன்று உடன்பிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் ராமு கரியத், இவரது மாமா ஆவார்.[7] இவர், தனது மாமா கரியத்தின் மகளான சுமாவை மணந்தார். இத் தம்பதியருக்கு லக்ஷ்மி என்ற மகள் உள்ளார்.[8]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 https://www.filmibeat.com/celebs/devan/biography.html
  2. https://timesofindia.indiatimes.com/topic/Devan
  3. https://www.celebrityborn.com/biography/devan/718
  4. "In the thick of real action". 16 March 2004. Archived from the original on 1 July 2018. பார்க்கப்பட்ட நாள் 1 July 2018.
  5. "Developing the negative | The Hindu".
  6. "Sathi Karyat passes away". Entertainment.oneindia.in. 2 September 2010. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Archived copy". Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "വേഷങ്ങളിലെ ദേവസ്പര്‍ശം". பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவன்_(நடிகர்)&oldid=3992398" இலிருந்து மீள்விக்கப்பட்டது