பஞ்சாமிர்தம் (2008 திரைப்படம்)
பஞ்சாமிர்தம் (Panchamirtham) 2008இல் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம் .எழுத்து ,இயக்கம் ராஜு ஈஸ்வரன் இதில் ஜெயராம் (நடிகர்), பிரகாஷ் ராஜ் மற்றும் ராஜு ஈஸ்வரன் போன்றோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர் while அரவிந்து ஆகாசு, நாசர், சமிக்ஷா மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றியுள்ளனர். இப்படத்தை அபிராமி ராமனாதன் தயாரித்திருந்தார். 2008 டிசம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது.
பஞ்சாமிர்தம் | |
---|---|
இயக்கம் | ராஜு ஈஸ்வரன் |
தயாரிப்பு | அபிராமி ராமனாதன் |
கதை | ராஜு ஈஸ்வரன் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு | ஜெயராம் (நடிகர்) பிரகாஷ் ராஜ் நாசர் அரவிந்து ஆகாசு சரண்யா மோகன் சமிக்ஷா கருணாஸ் கஞ்சா கறுப்பு எம். எசு. பாசுகர் மயில்சாமி (நடிகர்) |
ஒளிப்பதிவு | பிரமோத் வர்மா |
கலையகம் | அபிராமி மெகா மால் |
வெளியீடு | 25 திசம்பர் 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுஇக்கதை இராமாயணக் காலத்தில் தொடங்குகிறது. இராவணன்' பிரகாஷ் ராஜ் தனது மாமன் மாரீசனை மானாக உருமாறி சீதையை கவர்ந்துவர கட்டளையிடுகிறான். முதலில் மறுத்த மாரீசன் தனது மனைவியின் உயிருக்கு ராவணனால் ஆபத்து ஏற்படுமென என பயந்து இதற்கு சம்மதிக்கிறான், ஆனால் இராமன் விட்ட அம்பினால் மாரீசன் ஒரு பாறையாக மாறிவிடுகிறான். இப்போது, நவீன காலத்தில் கதை பயணம் செய்கிறது. ராஜாராம் நாசர் பெரிய தேயிலை தோட்டத்திற்கு உரிமையாளர். அவருக்கு உதவியாக சீதாவும் சரண்யா மோகன் சமையலில் ராம் என்பவனும் அரவிந்து ஆகாசு உதவியாக உள்ளனர் . ராம் மற்றும் சீதா இருவரும் நேசிகின்றனர். ராஜாராமின் உறவினர் (எம். எசு. பாசுகர் மற்றும் மயில்சாமி (நடிகர்) அவருடைய சொத்துகளை அபகரிக்க திட்டமிடுகின்றனர். இதற்காக சீதாவை மலையுச்சியிலிருந்து தள்ளி கொலை செய்யத் திட்டமிடுகின்றனர். தள்ளப்பட்ட சீதா நேராக மாரீசன் பாறையின் மேல் விழுந்ததால் அவன் தனது பழைய உருவை அடைகிறான். அதற்குப்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதையாகும்.
நடிகர்கள்
தொகு- ஜெயராம் (நடிகர்) - மாரீசன்
- பிரகாஷ் ராஜ் - இராவணன்
- நாசர் - ராஜாராம் மற்றும் மாணிக்கம் (இரு வேடங்களில்)
- அரவிந்து ஆகாசு -ஸ்ரீராமன்
- சரண்யா மோகன் - சீத்தா
- சுமிக்ஷா -மந்தாகினி
- கருணாஸ் - பாண்டி
- கஞ்சா கறுப்பு - முத்து
- எம். எசு. பாசுகர் - திருப்பதி
- மயில்சாமி (நடிகர்)
- ராஜு ஈஸ்வரன் - இடும்பன்
- இளவரசு - காசி
- ரெஜீனா கசான்ட்ரா - சீதா
தாயரிப்பு
தொகுஅபிராமி ராமநாதன், நன்கு அறியப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மற்றும் அபிராமி மெகா மால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பஞ்சாமிர்தம் படத் தயாரிக்க விரும்பினார். இப்படத்தின் தொடக்க விழா 2008 ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது. இயக்குனர் கே. பாலசந்தர், கே.ஆர்.ஜி., கலைப்புலி எஸ். தாணு, கலைப்புலி சேகரன், சரத்குமார், ராதா ரவி, ராம நாராயணன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். பூஜையன்று நாசருடனான ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.[1][2] முன்னதாக நடிகர் விவேக் மற்றும் நடிகர் வடிவேல் நடிப்பதா இருந்தது [3] சரண்யா மோகன் நடித்திருக்கும் ஒரு பாடல் காட்சி நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமால் ஊட்டியில் படமாக்கப்பட்டது.[4]
ஒலித்தொகுப்பு
தொகுசுந்தர் சி. பாபு இதன் இசையை மேகொள்ள கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளார்.[5]
விமர்சனம்
தொகுநவ் ரன்னிங் .காம் இவ்வாறு கூறியது : "பல நகைச்சுவை நடிகர்கள் நடித்து வெளிவந்த நகைச்சுவைப் படமாகும், அதன் இலக்கு குழந்தைகள் சிரிக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது" .[6] Indiaglitz wrote: "Panchamirtham is a laugh-riot".[7] ரெடிஃப் எழுதியது: அவர்கள் வாக்குறுதி கொடுத்தது போல் வேடிக்கையாக இல்லை என்றாலும், இந்த அணி சிரிக்க வைக்கிறது".[8] கோலிவுட். காம் எழுதியது: "பஞ்சாமிர்தம் ஒரு அற்புதமான உபசரிப்பு, ஆனால் துரதிருஷ்டவசமாக, தொலைக்காட்சியின் தாக்கங்கள் நிறைய இருந்தது".[9] பிகைன்ட்வுட் எழுதியது: நல்ல மதிப்பு மிக்கதாக உள்ளது[10]
மேற்கோள்கள்es
தொகு- ↑ "Panchamirtham from a Mall! - Behindwoods.com Abirami Ramanathan Abirami Mega Mall Director K Balachander KRG Kalaipuli S Dhanu Kalaipuli Sekaran Sarath Kumar Radha Ravi Rama Narayanan hot images picture gallery". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Abirami Ramanathan ready to serve 'Panchamirtham' - Tamil Movie News". IndiaGlitz. 10 சூலை 2008. Archived from the original on 11 சூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Vivek, Vadivelu in Panchamirtham? - Tamil Movie News". IndiaGlitz. 29 சூலை 2008. Archived from the original on 30 சூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Panchamirtham in Ooty". IndiaGlitz. 25 ஆகத்து 2008. Archived from the original on 26 ஆகத்து 2008. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Panchamirutam Songs — Tamil movie songs — Raaga.com". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2016.
- ↑ Mythily Ramachandran (27 திசம்பர் 2008). "Panchamirtham Review". Nowrunning.com. Archived from the original on 24 பெப்பிரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Panchamirtham Tamil Movie Review". IndiaGlitz. 26 திசம்பர் 2008. Archived from the original on 3 செப்டெம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Panchamirtham is a laugh riot". Rediff. 26 திசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Review — Panchamirtham". Kollywood Today. 25 திசம்பர் 2008. Archived from the original on 24 பெப்பிரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Panchamirtham Movie Review". Behindwoods. 5 திசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.