மாரீசன்
மாரீசன் (வடமொழி: मारीच, mārīcha), இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம் ஆகும்.


பொன் மானாக வந்த இராவணனின் மாமன் ஆவார். இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போக எண்ணினார். அதற்கு அவர் தனது மாமனின் உதவியை நாடினார். அவர் மாமனும் அதற்கு சம்மதித்தார்.
அழகிய பொன் மான் உருவம் எடுத்து சீதையின் முன் சென்றார். அதன் அழகைக் கண்டு மயங்கிய சீதை, மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்டாள். சீதையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இராமன் மானைத் துரத்திக்கொண்டு போனார். சீதைக்கு இலக்குமணன் காவலாக இருந்தார். இராமனின் பாணம் மானைக் கொன்றது.[1] திடீரென்று "இலக்குமணா!" என்னும் சத்தம் கேட்டது.
இது மாரீசனின் மாயம் ஆகும். சீதைக்கு அச்சம் பிறந்தது, இராமனை அழைக்க இலக்குமணனை அனுப்பினார். அந்தச் சமயம் பார்த்து சீதையை இராவணன் கடத்திச் சென்றார். இந்தக் கதையை மூலமாகக் கொண்டு தமிழில் 2008 ஆம் ஆண்டு பஞ்சாமிர்தம் (2008 திரைப்படம்) என்னும் திரைப்படம் வெளியானது.