சுந்தர் சி. பாபு
சுந்தர் சி பாபு (Sundar C. Babu) என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவர் ஒரு பிரபலமான வீணை இசைக் கலைஞர் டாக்டர் சிட்டி பாபு மற்றும் சுதாக்சனா தேவி ஆகியோரின் மகன் ஆவார். இவரது சகோதரர்கள் ரங்கசாய் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோராவர். இவர் தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ், 2006 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான சாக்கோ ராண்டாமன் என்ற படத்திற்கு முதன்முதலில் இசையமைத்தார் தொடங்கினார். அதே ஆண்டில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளரகா அறிமுகமாகி புகழ் பெற்றார். "வாள மீனுக்கும்" பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கு படங்களில் இவரது புகழ் சம்போ சிவ சம்போ மூலம் தொடங்கியது. இவர் ஆல்பா பள்ளியில் படித்தவர் [1][2][3]
சுந்தர் சி. பாபு | |
---|---|
பிறப்பு | இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணி இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை இயக்குநர், பாடகர் |
இசைத்துறையில் | 2006–தற்போது வரை |
இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு
தொகுஆண்டு | தமிழ் | பிற மொழிகள் | குறிப்புகள் |
---|---|---|---|
2004 | வானம் வசப்படும் | இணை இசை இயக்குநராக வரவு | |
2006 | சாக்கோ ராண்டமான் ( மலையாளம் ) | ||
2006 | சித்திரம் பேசுதடி | ||
2008 | அஞ்சாதே | சினேகம் (தெலுங்கு) | |
2008 | பஞ்சாமிர்தம் | ||
2009 | நாடோடிகள் | சம்போ சிவ சம்போ (தெலுங்கு) | |
2010 | சிந்து சமவெளி | ||
2010 | அழகான பொண்ணுதான் | ஹைஸ்கூல் (தெலுங்கு) | |
2010 | அகம் புறம் | ||
2010 | விருத்தகிரி | ||
2010 | நேட்டி சரித்ரா (தெலுங்கு) | ||
2011 | ஆடு புலி | ||
2011 | தூங்கா நகரம் | ||
2011 | அகராதி | ||
2011 | போராளி | சங்கர்ஷனா (தெலுங்கு) | |
2011 | மார்கண்டேயன் | ||
2012 | சாருலதா | சாருலதா (தெலுங்கு, கன்னடம்) | |
2013 | ரங்ரெஸ் (இந்தி) படம் | இரண்டு பாடல்கள் மற்றும் பின்னணி இசை மட்டும். நாடோடிகளின் இந்தி மறுஆக்கம் | |
2016 | அட்டி [4] |
குறிப்புகள்
தொகு- ↑ S. R. Ashok kumar (24 January 2011). "Hitting the high notes". The Hindu. Archived from the original on 7 February 2023. பார்க்கப்பட்ட நாள் 20 May 2024.
- ↑ "Sundar C Babu's mom passes away – Tamil Movie News". IndiaGlitz. Archived from the original on 7 April 2011. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
- ↑ "வாள மீனு பிறந்த கதை!". Kalki. 23 April 2006. p. 80. பார்க்கப்பட்ட நாள் 17 March 2024.
- ↑ "IndiaGlitz - 'Anjaadhe' music director makes a comeback - Tamil Movie News". Archived from the original on 26 July 2014.