நினைவில் நின்றவள் (2014 திரைப்படம்)

நினைவில் நின்றவள் (Ninaivil Nindraval) ஸ்ரீசபரி மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் அகஸ்திய பாரதி இயக்கியத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் அஸ்வின் சேகர், கீர்த்தி சாவ்லா மற்றும் காயத்ரி வெங்கடகிரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஅமைப்பாளர் டி. இமான் இசையமைத்தார். 2008 ஆம் ஆண்டு துவங்கிய இந்த திரைப்படம், குறிப்பிடத்தக்க ஒரு சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டு ஜனவரி 31, 2014 அன்று வெளியிடப்பட்டது.[1]

நினைவில் நின்றவள்
இயக்கம்அகஸ்திய பாரதி
தயாரிப்புஸ்ரீ சபரி மூவீஸ்
திரைக்கதைஎஸ். வி. சேகர்
இசைடி. இமான்
நடிப்புஅஸ்வின் சேகர்
கீர்த்தி சாவ்லா
காயத்திரி வெங்கடகிரி
ஒளிப்பதிவுஎன். இரவி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்ஸ்ரீ சபரி மூவீஸ்
வெளியீடு31 சனவரி 2014 (2014-01-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

ஏப்ரல் 2008 இல் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு தொடங்கியது. இது நடிகர் அஸ்வின் சேகரின் இரண்டாவது படமாகும். கீர்த்தி சாவ்லா மற்றும் காயத்ரி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அகஸ்திய பாரதி இயக்கியுள்ளார்.[2] செப்டம்பர் 2008 இல் வெளியீட்டுத் தேதி திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் ஒரு சில காரணங்களால் படம் தாமதம் ஆனது.[3]

இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் இசையினை ஜூலை 2011 இல் ஒரு நிகழ்ச்சியில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் முதல் பிரதியை வெளியிட்டார். பாக்கெட் நாவல் புத்தகத்தின் வெளியீட்டாளர் ஜி. அசோகன் முதல் பிரதியைப் பெற்றார். [4] இருப்பினும் இந்தத் திரைப்படம் வெளியிடப்படுவது மேலும் தாமதமாகிவிட்டது. படத்தின் இயக்குனர் அகஸ்திய பாரதி படம் முடிவடைவதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டில் இறந்தார்.[5]

இப்படம் ஜனவரி 2014 இல் திரையிடப்பட்டது, எஸ். வி. சேகர் திரைப்படத்தை வெளியிட உதவினார்.[6] "நினைவில் நிரைவில்" என்ற பெயரில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டது, ஆனால் இறுதியில் 'நினைவில் நின்றவள்' என்ற பெயரில் வெளியானது.[7]

வெளியீடுதொகு

இந்த படம் 2014 ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்டது. பொதுவாக நேர்மறையான விமர்சனதையே பெற்றது.[8]

ஒலிப்பதிவுதொகு

இந்த படத்தில் டி. இமான் இசையமைக்க பாடல்களை வாலி எழுதியுள்ளார். இசை ஜூலை 2011 இல் வெளியிடப்பட்டது.

குறிப்புகள்தொகு

  1. "Ashwin in Ninaivil Nindraval". 2008-05-21. 2014-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Stargazing — CHEN". 2008-05-30. Archived from the original on 2008-06-02. https://web.archive.org/web/20080602013027/http://www.hindu.com/fr/2008/05/30/stories/2008053050510400.htm. பார்த்த நாள்: 2016-08-09. 
  3. "Ashwin in Ninaivil Nindraval". 2008-08-03. 2016-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Double delight — Coimbatore". 2011-07-12. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/double-delight/article2219632.ece. பார்த்த நாள்: 2016-08-09. 
  5. "S Ve Shekhar announces Rs 1 lakh for late director Agasthiya Bharathi's family". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Double delight — Coimbatore". தி இந்து. 2011-07-12. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/double-delight/article2219632.ece. பார்த்த நாள்: 2016-08-09. 
  7. [1]
  8. "Ninaivil Nindraval is a Thriller Weaved Around a 'Rare' Plot". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2014-02-01. Archived from the original on 2016-08-19. https://web.archive.org/web/20160819223341/http://www.newindianexpress.com/entertainment/reviews/Ninaivil-Nindraval-is-a-Thriller-Weaved-Around-a-Rare-Plot/2014/02/01/article2030765.ece. பார்த்த நாள்: 2016-08-09.