கழுகு 2

2019 திரைப்படம்

கழுகு 2 (Kazhugu 2) என்பது 2019ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை பரப்பரப்பூட்டும் திரைப்படம் ஆகும். சத்யசிவா எழுதி இயக்கிய இப்படத்தில் கிருஷ்ணா சேகர் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது 2012 ஆம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இதை மதுக்கூர் பிலித்ஸ் பதாகையின் கீழ் சிங்காரவேலன் தயாரித்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.[1] படம் ஆகஸ்ட் 1, 2019 அன்று வெளியானது.[2] இப்படத்தின் இந்தி தொழியாக்கப் பதிப்பு 22 சூன் 2020 அன்று தின்சாக் தொலைக்காட்சி அலைவரிசையில் அஸ் எ சதீர் சோர் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது.

கழுகு 2
இயக்கம்சத்யசிவா
தயாரிப்புமனோபாலா
திரைக்கதைசத்யசிவா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகிருஷ்ணா குலசேகரன்
பிந்து மாதவி
காளி வெங்கட்
ஒளிப்பதிவுராஜா பட்டாச்சார்ஜி
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
வெளியீடுஆகத்து 1, 2019 (2019-08-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

இக்கதையானது இரண்டு சின்ன திருடர்களான ஜானி ( கிருஷ்ணா ), அவனது கூட்டாளியான காளி ( காளி வெங்கட் ) ஆகியோரைச் சுற்றி நடக்கிறது. தோட்ட மேளாளார் அவர்களை வேட்டைக்காரர்கள் என்று நினைத்து தொட்டத்தில் தொழிலாளர்களுக்கு இடஞ்சலாக உள்ள செந்நாய்களை விரட்ட அவர்களை அழைத்து வருகிறார். வந்த இடத்தில் மேலாளரின் மகளை ஜானி காதலிக்கிறான். அடுத்து என்ன நடக்கிறது என்பது படத்தின் எஞ்சிய பகுதியாகும்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சத்தியசிவா இயக்கிய இப்படத்தை 2018 ஆம் ஆண்டில் திருப்பூர் பி. ஏ. கணேசன் தயாரிப்பதாக அறிவித்தார். கழுகு 2 படப்பிடிப்பானது சூலை 3 ஆம் தேதி தொடங்கியது.[3]

இசை தொகு

இந்த படத்தின் அனைத்து பாடல்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். சத்தியசிவாவின் இதற்கு முந்தைய படமான கழுகு படத்திற்கும் அவரே இசை அமைத்திருந்தார். சகலகலா வள்ளி என்ற பாடலுக்கு யாசிகா ஆனந்த் ஆடினார். அதில் அவரைத் தவிர 300 நடனக் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர்.[4][5]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சகலகலா வல்லி"  பிந்து மாதவி, யுவன் சங்கர் ராஜா  
2. "ஏலமல காத்து"  எம். எம். மானசி  

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுகு_2&oldid=3659754" இருந்து மீள்விக்கப்பட்டது