சத்யசிவா

தமிழக திரைப்பட இயக்குநர்

சத்யசிவா (Sathyasiva) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். கழுகு (2012) படத்தின் மூலம் அறிமுகமான இவர், சிவப்பு (2015). சவாலே சமாளி (2015) கழுகு 2 (2018) ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சத்யசிவா
பணிஇயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2012-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சிவரஞ்சணி

தொழில்

தொகு

சத்யசிவா இயக்குனராக அறிமுகமான கழுகு (2012) படமானது மலைப் பாறை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மீட்பவன் குறித்த ஒரு கதை ஆகும். அப்படத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்தனர். படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிஃபி.காம் இன் விமர்சகர் ஒருவர் கூறுகையில், கழுகு ஒரு "யதார்த்தமான காதல் பரபரப்பூட்டும் திரைப்படம், அது உங்கள் கவனத்தை ஈர்க்கும். அதன் கதாபாத்திரங்களிலிருந்து நம்பகமான நகம் கடிக்கவைக்கும் திரைக்கதை, புதிய களத்தில் இது ஈர்க்கக்கூடிய ஒரு படமாக அமைகிறது ".[1] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 5 இல் 3.5 மதிப்பெண்ணைக் கொடுத்தது, மேலும் அது "தொடக்கத்திலிருந்து முடிவுவைர படம் ஈர்த்து வைக்கிறது" என்று கூறியது.[2] அதேபோல், தி இந்து பத்திரிகையின் மாலதி ரங்கராஜம் எழுதுகயில்: "இளம் திரைப்படப் படைப்பாளிகள் ஒரே மாதிரியான விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நம்பிக்கையைத் தருகிறது. எஸ். சத்தியசிவா இந்த வகையில் சமீபத்தியவர்". இயக்குனர் சத்யசிவா "கவனிக்க வேண்டிய இயக்குனர்" என்று விமர்சகர் மேலும் குறிப்பிட்டார்.[3]

கழுகு வெளியானதைத் தொடர்ந்து, சத்யசிவா உடனடியாக தனது அடுத்த படமாக 2012 ஏப்ரலில் அந்தி மழை மேகம் படத்தின் பணிகளைத் துவக்கினார், அது தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணிபுரியும் இலங்கை அகதிகளின் வாழ்க்கையை சுற்றிவரும் கதையாகும்.[4] பின்னர் அந்த படத்துக்கு சிவப்பு (2015) என பெயரை மாற்றினார். காதல், கோபம், வறுமை, வன்முறை, கம்யூனிசம் ஆகிய கருப்பொருள்களையும் இந்த பெயர் குறிக்கிறது என்பதை வெளிப்படுத்தினார் இயக்குனர்.[5] 2012 ஆகத்தில் தயாரிப்பு பணிகள் தொடங்கின, தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா மற்றும் ரூபா மஞ்சாரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டனர், ஆனால் சில காரணங்களினால் ஏற்பட்ட தாமதங்களினால் படமானது 2015 அக்டோபரில் தான் திரையரங்கில் வெளியானது, அது இவரது மூன்றாவது படமாக ஆனது.. மது அம்பாட்டின் ஒளிப்பதிவோடு நடிகர்களின் நடிப்பையும் விமர்சகர்கள் பாராட்டினர், படம் சராசரி விமர்சனங்களைப் பெற்றது.

சிவப்பு படம் சிக்கலில் இருந்த காலகட்டத்தில் சத்யசிவா விக்ரம் பிரபு, நஸ்ரியா நசீம், ராஜ்கிரண் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் தலபாக்கட்டி என்ற படத்தின் முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்கினார். அது மலையாள திரைப்படமான உஸ்தாத் ஹோட்டலின் மறுஆக்கம் ஆகும். இந்த படத்தின் பணிகள் 2013 இன் பிற்பகுதியில் துவக்கப்பட்டன என்றாலும் பின்னர் கைவிடப்பட்டது. சத்தியசிவா பின்னர் அசோக் செல்வன் மற்றும் பிந்து மாதவி நடிக்க சவாலே சமாளி (2015) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை உருவாக்கினார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வணிக ரீதியாக மோசமாக தோல்வியுற்றது.[6][7] சத்தியசிவா தற்போது ஜீவாவுடன் 1942 ஆம் ஆண்டை பின்னணியாக கொண்ட பெயரிடப்படாத ஒரு போர் படத்தில் பணியாற்றி வருகிறார்.[8]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் குறிப்புகள்
2012 கழுகு
2015 சவாளே சமாளி
சிவப்பு
2019 கழுகு 2
2020 மடை திறந்து
2021 பெல் பாட்டம் (தமிழ்)

குறிப்புகள்

தொகு

 

  1. "Movie Review:Kazhagu". Sify.com. Archived from the original on 2013-12-31. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Kazhugoo movie review: Wallpaper, Story, Trailer at Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
  3. Malathi Rangarajan (2012-03-17). "Arts / Cinema : Dark knights". The Hindu. Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
  4. "Andhi Mazhai Megam is Kazhugu director's next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-05-02. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Sivappu Movie touches upon a sensitive issue". Kollywoodtoday.net. 2013-05-31. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  6. "Savaale Samaali: A dialogue-heavy average comedy". The Hindu. 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  7. "Savaale Samaali Movie Review, Trailer, & Show timings". Timesofindia.indiatimes.com. 2015-09-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  8. "Jiiva's next with Sathyasiva will be a period flick". Behindwoods.com. 2015-10-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யசிவா&oldid=3742316" இலிருந்து மீள்விக்கப்பட்டது