சவாலே சமாளி (2015 திரைப்படம்)
சவாலே சமாளி (Savaale Samaali) என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவை-நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அசோக் செல்வன், பிந்து மாதவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1], நாசர், ஜெகன் , கருணாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் அருண் பாண்டியன் தயாரிக்க, தமன் இசையமைத்தார். படத்தின் பணிகள் 2014 சூன் மாதத்தில் கெக்க பொக்க என்ற தற்காலிகப் பெயரில் துவங்கியது.[2][3][4] பின்னர் 4 செப்டம்பர் 2015 அன்று படம் வெளியானது.[சான்று தேவை]
சவாலே சமாளி | |
---|---|
இயக்கம் | சத்யசிவா |
தயாரிப்பு | அருண் பாண்டியன் கவிதா பாண்டியன் எஸ். என். இராஜராஜன் |
கதை | முருகதாஸ் |
இசை | தமன் (இசையமைப்பாளர்) |
நடிப்பு | அசோக் செல்வன் பிந்து மாதவி நாசர் ஜெகன் கருணாஸ் |
ஒளிப்பதிவு | செல்வகுமார் |
படத்தொகுப்பு | அகமது |
கலையகம் | கே புரொடக்சன்ஸ் டி போக்கஸ் |
வெளியீடு | செப்டம்பர் 4, 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அசோக் செல்வன் - கார்த்திக்
- பிந்து மாதவி - திவ்யா
- ஜெகன் - பில்லா
- கருணாஸ் - கருணாகரன்
- நாசர் - சமுத்திரக்கனி
- சுவாதி - பூஜா
- எம். எசு. பாசுகர் - இளங்கோவன்
- ஊர்வசி - அவராகவே
- மனோபாலா அவராகவே
- நிரோஷா - அஞ்சலி
- வாசு விக்ரம் - கார்த்திக்கின் தந்தை
- பரவை முனியம்மா - கார்த்திக்கின் பாட்டி
- ஷாமிலி சுகுமார் பில்லாவுக்கு முடிவான மணமகள்
- பிரீத்தி தாஸ் - தொலைக்காட்சி அலுவலக வரவேற்பாளர்
- பாரதி கண்ணன் - கூத்து நடிகர்
- கூல் சுரேஷ் - கூத்து நடிகர்
- சுபகீதா - கூத்து நடிகை
- நிரஞ்சனி - சிரேயா
- அழகு - அழகு
- வையாபுரி
- சிசர் மனோகர்
- நெல்லை சிவா
- அனந்த் கே. ஜெயச்சந்திரன்
- அருண் பாண்டியன் விருந்தினர் தோற்றத்தில்
- ஐசுவரியா "நல்லவனா கெட்டவனா" பாடலில் சிறப்புத் தோற்றம்
தயாரிப்பு
தொகுஅசோக் செல்வன், பிந்து மாதவி ஆகியோர் நடிக்க சத்தியசிவா இயக்கும் படத்தை அருண் பாண்டியன் தயாரிப்பதாக 2014 மே மாதம் அறிவிக்கப்பட்டது.[5] இப்படத்தின் தயாரிப்பு பணிகள் 2014 சூனில் தொடங்கியது. சத்தியசிவாவின் படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, தெகிடி (2014) இன் வெற்றிக்கு பிறகு 40 க்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்ததாக அசோக் செல்வன் தெரிவித்தார்.[6]
இசை
தொகுஇந்த படத்திற்கு தமன் இசையமைத்தார். அவர் இசையமைப்பில் சினேகன் எழுதிய ஐந்து பாடல்கள் இடம்பெற்றன.[7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "எத்தனை கவிஞன்" | கார்த்திக் | 4:40 | |||||||
2. | "சவாலே சமாளி" | பாலக்காடு சிறீராம் | 4:23 | |||||||
3. | "பெண்ணே பெண்ணே" | எஸ். பி. பி. சரண் | 4:36 | |||||||
4. | "நல்லவனா கெட்டவனா" | அந்தோணிதாசன், எல். ஆர். ஈஸ்வரி | 5:24 | |||||||
5. | "யாரோ யாரோ" | எம். எம். மானசி | 4:33 | |||||||
மொத்த நீளம்: |
23:36 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bindu Madhavi's Next is Savaale Samaali". 23 September 2014.
- ↑ "Bindu Madhavi to pair with Ashok Selvan first - Times of India". The Times of India.
- ↑ balachandran, logesh (27 May 2014). "'Thegidi' hero Ashok Selvan pairs up with Bindu Madhavi in his next". Deccan Chronicle.
- ↑ Rao, Subha J. (22 September 2014). "What's in a name? Quite a lot!" – via www.thehindu.com.
- ↑ "Ashok Selvan's next locked after Thegidi". www.behindwoods.com.
- ↑ "From thriller to laughter". 5 July 2014 – via www.thehindu.com.
- ↑ "Savaale samaali songs". tamilsonglyrics. 31 March 2015. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.