பாலக்காடு சிறீராம்

இந்திய திரைப்பட பாடகர்

பாலக்காடு ஸ்ரீராம் (Palakkad Sreeram, பிறப்பு: 16, பிப்ரவரி, 1972) என்பவர் ஒரு இந்திய திரைப்பட பாடகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். படையப்பாவில் வெற்றிக் கொடி கட்டு, ஸ்லம்டாக் மில்லியனரில் லிக்விட் டேன்ஸ்சும் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும். [1]

பாலக்காடு சிறீராம்
Palakkad Sreeram Singer.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கே. எல். சிறீராம்
பிறப்பு16 பெப்ரவரி 1972 (1972-02-16) (அகவை 50)
பாலக்காடு
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)புல்லாங்குழல்
இசைத்துறையில்1996 - தற்போது வரை

குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கைதொகு

ஸ்ரீராம் 16 பிப்ரவரி 1972 அன்று ஒரு தமிழ் ஐயர் குடும்பத்தில் கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின், ஆலத்தூர் அருகே உள்ள காவச்சேரி கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜெயலட்சுமி, கே. எஸ். லட்சுமி நாராயணன் ஆகியோர் ஆவர். இவர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் இசையில் சாதிக்க சென்னைக்குச் சென்றார். [2] பாடகரும், இசையமைப்பாளருமான பேபி என்பவரை மணந்தார். [3] இந்த இணையருக்கு பாரத், அனகா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஸ்ரீராமுக்கு "ஸ்வரர்ணவம்" என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோ உள்ளது. [4]

தொழில்தொகு

ஸ்ரீராம் சிறு வயதிலிருந்தே தனது தாயிடமும், சுந்தரேஸ்வர பகவதரிடமும் இசை கற்கத் தொடங்கினார். இவருக்கு இசைக்கருவிகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. [5] தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல திரைப்படப் பாடல்கள் பாடிய [6] ஸ்வரர்ணவம் என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருக்கும் இவர், மலையாள படங்களான மஹமேகா பிரவுகல் மற்றும் மெல்விலாசம் செரியானு ஆகிய இரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். திருமணமான உடனேயே 1995 இல் சென்னை சென்றார். இவர் தானாகவே புல்லாங்குழல் கற்றுக்கொண்டார். 1996 ஆம் ஆண்டில் திரையுலகில் புல்லாங்குழல் கலைஞராக அறிமுகமானார். [7] [8]

திரைப்படவியல்தொகு

ஆண்டு படம் மொழி பாடல் குறிப்புகள்
1998 உயிரே தமிழ் தைய்ய தைய்யா தில் சேவின் தமிழ் மறுஆக்கமான, உயிரே
1999 படையப்பா தமிழ் மின்சாரப் பூவே பெண் பூவே
வெற்றிக் கொடி கட்டு ரஜினிகாந்த்
தாஜ்மகால் தமிழ் திருப்பாச்சி அருவாள
2002 இவன் தமிழ் உலகமே நீ
2003 சாமி தமிழ் திருநெல்வேலி அல்வாடா
2004 சத்ருவ் தெலுங்கு
வெங்கி
மன்மதன் தமிழ் வானமென்ன
2009 ஸ்லம்டாக் மில்லியனர் இந்தி லிக்விட் டான்ஸ் ஆஸ்கார் விருது பெற்ற படம்
2012 அட்டகத்தி தமிழ் பொடி வெச்சி புடிப்பேன்
மதுபான கடை சமரசம் உலாவும் தனிப் பாடகர்
தல்சமயம் ஓரு பெங்குட்டி மலையாளம் ஓ திங்கல் பக்ஷி
2013 அத்தாரிண்டிகி தாரேதி தெலுங்கு தேவ தேவம்
வல்லினம் தமிழ் வல்லினல்
2014 பூஜை தமிழ் ஒடி ஓடி தனிப் பாடகர்
மகாலட்சுமி கட்டாக்ஷம் தெலுங்கு கானானா கான் கானிதா
2015 கே.எல் 10 பத்து மலையாளம் என்தானு கல்பே
தி ரிப்போர்டர் நீ என் கதரே
வர்மதியே
சவாலே சமாளி தமிழ் சவாலே சமாளி தனிப் பாடகர்
2016 வல்ல தேசம் தமிழ் மேகம் கலைவதில்லை தனிப்பாடகர்
2017 மாம் - மலையாளம் மலையாளம் குக்கே கான்
2018 கான்டெஸா (படம்) மலையாளம் தக்கா தக்கா தனிப் பாடகர்
2020 அனாமிகாவின் ஆத்மா மலையாளம் க்ரீஸ்ஜ்மேம் சாகி

குறிப்புதொகு

  1. "All you want to know about #PalakkadSriram". FilmiBeat (ஆங்கிலம்). 2020-08-08 அன்று பார்க்கப்பட்டது.
  2. cris (2018-01-10). "Baby wants more jobs for artistes". Deccan Chronicle (ஆங்கிலம்). 2020-08-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Baby Sreeram has a penchant for aesthetics". https://www.thehindu.com/entertainment/music/baby-srirams-penchant-for-aesthetics/article30809617.ece. 
  4. "SREERAM". nm.carolagrey.de. 2020-08-08 அன்று பார்க்கப்பட்டது.
  5. Suryanarayan, Renuka (2017-03-30). "Noteworthy for its novelty". https://www.thehindu.com/entertainment/music/palakkad-sreeram-showed-his-skills-in-vocals-on-the-flute-and-keyboard/article17743610.ece. 
  6. "Palakkad Sreeram". www.bbc.co.uk. 2020-08-08 அன்று பார்க்கப்பட்டது.
  7. s, venkadesan (2014-09-09). "Palghat K.L. Sreeram says music is his mentor". Deccan Chronicle (ஆங்கிலம்). 2020-08-08 அன்று பார்க்கப்பட்டது.
  8. K.ganapathi (2018-06-14). "Full of tonal vigour". https://www.thehindu.com/entertainment/music/palakkad-kl-sreeram-showcased-his-musical-acumen-at-a-concert-in-palakkad/article24143470.ece. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்காடு_சிறீராம்&oldid=3192811" இருந்து மீள்விக்கப்பட்டது