வல்லினம் (திரைப்படம்)
வல்லினம் என்பது 2014ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதை ஆசுக்கார் இரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதில் நகுல், மிருதுளா, சகன் போன்றோர் நடித்துள்ளனர்.[1]
வல்லினம் | |
---|---|
இயக்கம் | அறிவழகன் |
தயாரிப்பு | ஆசுக்கார் இரவிச்சந்திரன் |
இசை | தமன் |
நடிப்பு | நகுல் மிருதுளா |
ஒளிப்பதிவு | பாசுக்கரன் |
வெளியீடு | பிப்ரவரி, 2014 |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுதிருச்சியில் ஒரு கல்லூரியில் படிக்கும் கிருஷ்ணா (நகுல்), கூடைப்பந்து விளையாடும்போது அவன் நண்பன் சிவா (கிருஷ்ணா) எதிர்பாராத விதமாக இறந்து போய்விட, இனிமேல் கூடைப்பந்தைத் தொடுவதில்லை என்று முடிவெடுக்கிறான். கல்லூரியையும் மாற்றிச் சென்னைக்கு வந்துவிடுகிறான். கல்லூரியில் புதிய நண்பர்களோடு ஒரு பெண்ணின் (மிருதுளா) நட்பும் கிடைக்கிறது. அந்தக் கல்லூரி கிரிக்கெட்டில் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதால் கல்லூரியில் கிரிக்கெட் விளையாட்டே முன்னால் நிற்கிறது. கூடைப்பந்தாட்டம் முதலான விளையாட்டுக்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. அவற்றை ஆடுபவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
இதைப் பார்க்கும் கிருஷ்ணா மீண்டும் கூடைப்பந்து விளையாட முடிவெடுக்கிறான். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் குழு, கூடைப்பந்தாட்டக் குழு இரண்டுக்குமிடையே பிரச்சனை வருகிறது. கூடைப்பந்து அணிக்குக் கல்லூரி நிர்வகத்தின் ஆதரவு கிடைக்கவில்லை. அவர்கள் பந்தய விளையாட்டு ஆட எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிரிக்கெட் அணியினர் கோப்பை வென்றதால்தான் கல்லூரியில் ஆதிக்கத்துடன் இருக்கிறார்கள், தாங்களும் கோப்பையை வென்றால்தான் ஆதிக்கம் பெற முடியும் என்பதை உணர்ந்த கூடைப்பந்து அணி, கோப்பையை வெல்லும் முனைப்புடன் போராடுகிறது. இந்தச் சவாலை அந்த அணி சமாளிக்கும் விதத்தை இயக்குநர் விளக்கியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "வல்லினம்". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)