திருத்தம் (திரைப்படம்)

2007 திரைப்படம்

திருத்தம் (Thirutham) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் பரபரப்புத் திரைப்படமாகும். பொன்ராமன் இயக்கிய இப்படத்தில் ஹரிகுமார், பிரியங்கா நாயர், மான்சி பிரிதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் இதில் நாசர், ஆதித்யா, எம். எசு. பாசுகர், சுஜா வருணே, பிரியா, விஜய் பாபு, பாரதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சுனி ஹரி தயாரித்த இப்படத்திற்கு, பிரவீண் மணி இசை அமைத்துள்ளார். படமானது 14 செப்டம்பர் 2007 அன்று வெளியானது.[1]

திருத்தம்
இயக்கம்பொன்ராமன்
தயாரிப்புசுனி ஹரி
கதைபொன்ராமன்
இசைபிரவீண் மணி
நடிப்பு
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புபி. எஸ். வாசு
சலீம்
கலையகம்போப்ரோ பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 14, 2007 (2007-09-14)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

போப்ரோ பிலிம்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட திருத்தம் படத்தின் வழியாக பொன்ராமன் இயக்குநராக அறிமுகமானார். தூத்துக்குடி (2006) படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெயில் படப் புகழ் பிரியங்கா நாயர், புதுமுகம் மான்சி பிரிதம் ஆகியோர் படத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டனர். ஜீவா ஒளிப்பதிவை மேற்கொண்டார். தூத்துக்குடி படத்துக்குப் பிறகு, ஹரிகுமாரும் இசை அமைப்பாளர் பிரவீன் மணி என இருவரும் இந்த படத்தில் ஒன்றாக பணியாற்றினர்.[2][3][4][5]

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் பிரவீண் மணி அமைத்தார். இசைப்பதிவில் ஐந்து பாடல்கள் உள்ளன.[6][7] ரெடிப்.காமின் சரஸ்வதி சீனிவாஸ் பாடல்களுக்கு 5 நட்சத்திரங்களில் 2 நட்சத்திர மதிப்பீட்டை அளித்தார்.[8]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பாதை தெரிகிறது"  திப்பு 4:37
2. "படவா கைய புடிடா"  ஜாசி கிஃப்ட், அனுராதா ஸ்ரீராம் 4:12
3. "லாபம் யோகம்"  கார்த்திக் 4:05
4. "காதல் கண்மணியே"  உண்ணிமேனன், சித்ரா 4:06
5. "சிடுமூஞ்சி தேவதையே"  சீனிவாஸ், கல்யாணி 3:47
மொத்த நீளம்:
20:47

வெளியீடு

தொகு

இந்த படம் 14 செப்டம்பர் 2007 அன்று வேறு ஐந்து படங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது.[9]

கோலிவுட்டுடே.நெட் ஹரிகுமாரின் நடிப்பைப் பாராட்டியதுடன், இந்தப் படத்தை "நல்ல கதைக்களத்துடன் கூடிய சராசரி படம்" என்று அழைத்தது.[10] ஒரு விமர்சகர் படத்தில் முன்னணி ஜோடியின் நடிப்பைப் பாராட்டினார். அதேசமயம் படத்தின் திரைக்கதையை விமர்சித்தார்.[11] மற்றொரு விமர்சகர் எழுதினார், "ஹரி பெரும்பாலான பாத்திரங்களை நன்கு ஏற்று நடிக்கிறார்", மேலும் இந்த படத்தை "சராசரிக்குக்கும் கீழே" என்று மதிப்பிட்டார். இந்த படத்திற்கு நான் அவநில்லை (2007), மன்மதன் (2004), கல்யாணராமன் (1979) ஆகியவற்றுடன் ஒற்றுமைகள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.[12]

குறிப்புகள்

தொகு
 1. "Jointscene : Tamil Movie Thirutham". jointscene.com. Archived from the original on 24 September 2009. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
 2. "A different look - Harikumar". indiaglitz.com. 12 September 2007. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
 3. "Thirutham Heading towards release". kollywoodtoday.net. 2 July 2007. Archived from the original on 29 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. "Prakash Raj's Mayilu". behindwoods.com. 26 July 2007. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
 5. "Gals galore in 'Ellam Avan Seyal'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 1 December 2008. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
 6. "Thirutham (2007) - Pravin Mani". mio.to. Archived from the original on 31 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "Thirutham Songs". mymazaa.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
 8. Saraswathy Srinivas (25 June 2007). "Thirutham has average music". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
 9. "Thank God it's Friday". behindwoods.com. 14 September 2007. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
 10. "Review - Thirutham". kollywoodtoday.net. 17 September 2007. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. "THIRUTHAM Review" (in Tamil). koodal.com. Archived from the original on 7 January 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 12. "Thirutham - Tamil Movie Review". cinefundas.com. Archived from the original on 29 November 2009. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தம்_(திரைப்படம்)&oldid=3688452" இலிருந்து மீள்விக்கப்பட்டது