பிரியங்கா நாயர்

இந்திய நடிகை

பிரியங்கா நாயர் (Priyanka Nair) (பிறப்பு 30 சூன் 1985) இந்திய விளம்பர நடிகையான இவர் மலையாளத் திரையுலகில் முக்கியமாக பணியாற்றுகிறார்.[1] இவர் 2006 ஆம் ஆண்டில் வெளியான வெயில் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2] பூமி மலையாளம், விலபங்கல்கப்புரம் மற்றும் ஜலாம் ஆகிய படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.[3]

பிரியங்கா நாயர்
பிறப்பு30 சூன் 1985 (1985-06-30) (அகவை 39)
வாமனபுரம், திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
  • திரைப்பட நடிகை
  • விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2000 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இலாரன்சு ராம் (தி. 2012)
பிள்ளைகள்1

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரியங்கா தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான இலாரன்சு ராம் என்பவரை என்பவரை]] 23 மே 2012 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.[4] இவர்களுக்கு முகுந்த் ராம் என்ற ஒரு மகன், 18 மே 2013 அன்று பிறந்தார்.[5] இந்த இணை 2015 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது.[6]

தொழில்

தொகு

பிரியங்கா தனது மேல்நிலைக் கல்வியை முடித்து திருவனந்தபுரத்தின் மார் இவானியோசு கல்லூரியில் இயற்பியல் பயின்றார்.[7] இந்த காலகட்டத்தில், ஊமக்குயில், மேகம், ஆகாசதூது போன்ற மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் பகுதிநேர நடிப்பில் இருந்தார்.[8] தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை "நேர விரயம்" என்று கருதினார். மேலும் ஒருபோதும் படங்களில் நடிக்க விரும்பவில்லை. மாறாக ஒரு விரிவுரையாளராக விரும்பினார்.

இயக்குநர் சங்கர் தயாரித்திருந்த இயக்குநர் வசந்தபாலன் இயக்கியிருந்த வெயில் (2006) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார. அதில் இவர் பசுபதியுடன் நடித்திருந்தார்.[9] இவரது முதல் மலையாளத் திரைப்படம் கிச்சாமணி எம்பிஏ (2007), ஒரு இவருக்கு துணை வேடமாக இருந்தது. அடுத்த ஆண்டில் இவர் டி. வி. சந்திரனின் விலபங்கல்கப்பூரம் என்ற படத்தில் சுஹாசினியுடனும், பிஜு மேனனுடன் நடித்தார். இதில் இவரது நடிப்பு இவருக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.[10] ரெடிப்.காம் 2009 ஆம் ஆண்டின் சிறந்த மலையாள நடிகை என்று பெயரிட்டது.[11] இவிடம் ஸ்வர்கமணு என்ற படத்தில் மோகன்லாலுக்கு இணையாக தோன்றிய பின்னர் இவர் பிரபலமடைந்தார். பிரியங்கா தனது இராயல் என்ஃபீல்ட் புல்லட் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை விரும்புகிறார்.[12]

குறிப்புகள்

தொகு
  1. "Mathrubhumi - Kerala News, Malayalam News, Politics, Malayalam Movies, Kerala Travel". mathrubhumi.com. Archived from the original on 13 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
  2. "Mathrubhumi - Kerala News, Malayalam News, Politics, Malayalam Movies, Kerala Travel". mathrubhumi.com. Archived from the original on 19 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
  3. "State Film Awards (2000–12)". Kerala State Chalachitra Academy. Archived from the original on 7 July 2015. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
  4. "Actress Priyanka Nair is now married". The Times of India. Archived from the original on 2013-11-13. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
  5. "Malayalam News, Kerala News, Latest Malayalam News, Latest Kerala News, Breaking News, Online News, Malayalam Online News, Kerala Politics, Business News, Movie News, Malayalam Movie News, News Headlines, Malayala Manorama Newspaper, Breaking Malayalam News,". ManoramaOnline. Archived from the original on 10 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "'Veyil' Actress Priyanka Nair Files Divorce Plea Against Tamil Film-Maker Lawrence Ram". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.
  7. "Destination Tinsel town". The Hindu. Archived from the original on 19 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "The Hindu : Metro Plus Thiruvananthapuram / Cinema : STAR trek". hindu.com. Archived from the original on 19 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Kerala actress Priyanka says no to skin show". IBNLive. Archived from the original on 27 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Kerala State Film Awards announced". Sify. Archived from the original on 22 October 2011. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
  11. "Top Malayalam actresses of 2009". Rediff. 30 December 2009. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.
  12. "Mathrubhumi - Kerala News, Malayalam News, Politics, Malayalam Movies, Kerala Travel". mathrubhumi.com. Archived from the original on 24 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_நாயர்&oldid=4172026" இலிருந்து மீள்விக்கப்பட்டது