ஈசா (திரைப்படம்)

ஈசா (Eesa) 2009 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் லக்சனா நடிப்பில், பால கணேசா இயக்கத்தில், ஜே. ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், ஹரன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4][5][5][6]

ஈசா
இயக்கம்பால கணேசா
தயாரிப்புஜே. ஜெயகிருஷ்ணன்
கதைபால கணேசா
இசைஹரன்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். பி. பாலகணேஷ்
படத்தொகுப்புபி. எஸ். வாசு
கலையகம்ஜேகே கிரியேஷன்ஸ்
வெளியீடுஆகத்து 7, 2009 (2009-08-07)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

சுடலீஸ்வரன் என்ற ஈசா (விக்னேஷ்) தன் மனைவி செல்வி (லட்சனா) ஒரு சிறிய குடிசையில் வசிக்கிறான். தங்கமலை அண்ணாச்சியின் (தூத்துக்குடி எம். ராஜேந்திரன்) தூத்துக்குடியில் உள்ள உப்பளத்தில் ஈசா வேலை பார்த்துக்கொண்டு தன் மனைவியுடன் அங்கு தங்கியுள்ளான். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் அவர்கள் தங்கியுள்ள இடத்தின் அருகில் அண்ணாச்சி மற்றும் அவரது ஆட்கள் ஒரு அரசு ஊழியரையும் அவர் மனைவியையும் கொல்கின்றனர். அதைக் காணும் செல்வி அவர்களைக் கண்டிக்கிறாள். தான் கண்டதை காவல் நிலையத்தில் சென்று சொல்லப்போவதாக செல்வி கூற, அதிர்ச்சியடையும் அண்ணாச்சி அவளைக் கொல்லச் சொல்கிறார். தன் மனைவியைக் காணாமல் தேடிவரும் ஈசா அவள் இறந்துகிடப்பதைக் கண்டு கதறி அழுகிறான். இதனால் மனநிலை பாதிக்கப்படும் அவன் அவளின் உடலைத் தன் குடிசையில் வைத்து பாதுகாக்கிறான். அவள் இன்னும் உயிரோடு இருப்பதாகவே கருதிக் கொள்கிறான்.

தன் மனைவியின் இறப்புக்குக் காரணமானவர்களை ஒவ்வொருவராகக் கொன்று தன் குடிசையில் புதைக்கிறான். தன் ஆட்கள் ஒவ்வொருவராக இறப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் அண்ணாச்சி, அதற்குத் தன் எதிரிகள்தான் காரணம் என்று கருதி அவரின் எதிரிகளைக் கொல்கிறார். ஆனால் அந்தக் கொலைகளைச் செய்வது ஈசா என்று தெரிந்து காவல்துறையில் புகாரளிக்கிறார். அண்ணாச்சியை ஈசா எப்படி பழிதீர்த்தான் என்பது மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம், வாசுதேவநல்லூர் மற்றும் அறந்தாங்கியில் நடைபெற்றது.[7]

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் ஹரன். பாடலாசிரியர்கள் நா. முத்துக்குமார், யுகபாரதி மற்றும் மதுரகவி.[8] இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வு சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. ஏ. ஆர். ரகுமான், தங்கர் பச்சான், ஜீவா மற்றும் கரண் தலைமையில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை இசையமைப்பாளர் ஹரனின் தந்தை ஸ்ரீதர் வாசித்துத் தெரியப்படுத்தினார்.[9]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஆகாயம் முகேஷ், பெரிய கறுப்புத் தேவர் 6:26
2 ஒரு முறை ஹரிஷ் ராகவேந்திரா , பாம்பே ஜெயஸ்ரீ 4:29
3 உன்னாலதான் நரேஷ் ஐயர் 5:04
4 வெட்டருவா உதித் நாராயண், ஹரன் 5:00
5 யாரடி நீ கென்னடி, ஹரன் 6:07

மேற்கோள்கள் தொகு

  1. "ஈசா". http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=850&user_name=bbalaji&review_lang=english&lang=tamil. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "ஈசா" இம் மூலத்தில் இருந்து 2010-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101221202807/http://thiraipadam.com/cgi-bin/movie.pl?id=850&lang=tamil. 
  3. "ஈசா". https://www.indiaglitz.com/esa-tamil-movie-review-10178. 
  4. "ஈசா" இம் மூலத்தில் இருந்து 2022-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220120042906/https://www.sify.com/movies/eesa-review-tamil-pclxlgeiffieb.html. 
  5. 5.0 5.1 "ஈசா". http://www.nowrunning.com/movie/reviews/moviereview.aspx?movie=5363&rid=2275. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "ஈசா". http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/eesa.html. 
  7. "படப்பிடிப்பு". http://www.behindwoods.com/tamil-movie-previews/preview-1/eesa.html. 
  8. "பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2018-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180914082228/http://mio.to/album/Eesa+(2009). 
  9. "பாடல் வெளியீடு". http://www.sify.com/movies/ar-rahman-releases-eesa-audio-news-tamil-kkfrXDjggegsi.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசா_(திரைப்படம்)&oldid=3707539" இருந்து மீள்விக்கப்பட்டது