முனீஷ்காந்த் ராமதாஸ்

தமிழ்த் திரைப்பட நடிகர்

முனீஷ்காந்த் ராமதாஸ் (Munishkanth) ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார். முண்டாசுப்பட்டி, 10 எண்றதுக்குள்ள மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முனீஷ்காந்த் ராமதாஸ்
பிறப்புராமதாசு
30 சூன் 1985 (1985-06-30) (அகவை 39)[சான்று தேவை]
வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்முனீஷ்காந்த்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009-முதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்முண்டாசுப்பட்டி (2014)
மரகத நாணயம் (2017)
ராட்சசன் (2018)
வாழ்க்கைத்
துணை
தேன்மொழி (m-2018)

தொழில்

தொகு

இவர் 2002 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். தமிழ் திரைப்படத்துறையில் நடிகராகவேண்டும் என்ற கனவோடு வந்தார். ஆனால் சிறு சிறு வேடங்களே கிடைத்தது. பின் இரண்டாண்டுகள் தங்கத்தட்டான் வேலைக்கு மலேசியா நாட்டிற்கு சென்றார், சென்னை திரும்பியதும் குறும்படம் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வடபழனி முருகன் கோவிலில் பல நாட்கள் தனது வாழ்நாளைக்கழித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குனர் என்ற குறும்படம் திரையிடும் நிகழ்ச்சில் பங்குபெற்றார்.[1] தனது நண்பரான காளி வெங்கட் மூலம் ராமின் வெற்றிப்படைப்பான முண்டாசுப்பட்டி குறும்படத்தின் முனீஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தார்.

மேலும் அவர் தமிழ் திரைப்படத்துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கலானார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய கடல் (2013), சி. வி. குமார் அவர்களின் சூது கவ்வும் (2013), மற்றும் பீட்சா II: வில்லா (2013) முதலிய படங்களில் நடித்தார். 2014 ஆம் ஆண்டு தனது நண்பரான காளி வெங்கட் மூலம் ராமின் வெற்றிப்படைப்பான முண்டாசுப்பட்டி குறும்படத்தின் முனீஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தார். இதன் பிறகே இவர் முனீஷ்காந்த் ராமதாஸ் என அழைக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. ‘Mundasupatti’ Muniskanth: Came to be Villain; Became Comedian — Interview, Ramdoss. YouTube. 28 July 2014. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
  2. Baradwaj Rangan. "Mundasupatti: Light, camera, action". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
  3. "A Face to The Voice: The RJ Balaji Interview". Silverscreen.in. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
  4. "‘I washed cars for a living’". The New Indian Express. 28 June 2017. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/jun/28/i-washed-cars-for-a-living-1621945.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனீஷ்காந்த்_ராமதாஸ்&oldid=3768388" இலிருந்து மீள்விக்கப்பட்டது