சி. வி. குமார்

இந்தியத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர்

சி. வி. குமார் (எ) சி. விஜயகுமார் எனபவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரரும் ஆவார். இவரது திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் நிறுவனத்தின் கீழ் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றித் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

சி. வி. குமார்
பிறப்புசி. விஜயகுமார்
ஏப்ரல் 14, 1979 (1979-04-14) (அகவை 44)
திருமங்கலம் (மதுரை), தமிழ்நாடு
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்,
திரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2012 முதல்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பிறந்த சி. வி. குமார் (பி. ஏப்ரல் 14, 1979; இயற்பெயர்: சி. விஜயகுமார்) [1][2], பள்ளிப் படிப்பை, மதுரை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியலும்[1], சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டயமும், இயங்குபடம், ஒலி வடிவமைப்பு மற்றும் படத்திற்கு கதை எழுதுவது எப்படி என மதுரை அரினா அனிமேஷன் மூலம் பயின்றவர். இவரது தந்தை, சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததால், இந்தியாவின் எல்லா சுற்றுலா தளங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு 2010ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ் சென்ற போது அங்கிருக்கும் திரைப்படங்கள், தயாரிப்பு நிறுவன நுனுக்கங்களைக் கண்டு, தானும் அது போன்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, படங்கள் தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்து, திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை 2010ம் ஆண்டு தொடங்கினார்[3]. மேலும், நவீன் சந்திரா நாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் மாயவன் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார்.

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படத்தின் பெயர் மொழி குறிப்புகள்
தயாரிப்பளராக
2012 அட்டகத்தி தமிழ் சிறந்த அறிமுக தயாரிப்பாளருக்கான சீமா விருதுகள்
பீட்சா தமிழ் -
2013 சூது கவ்வும் தமிழ் -
பீட்சா 2 தமிழ் -
2014 தெகிடி தமிழ் -
முண்டாசுப்பட்டி தமிழ் -
சரபம் தமிழ் -
எனக்குள் ஒருவன் தமிழ் படப்பிடிப்பில்
மாயவன் தமிழ் படப்பிடிப்பில்
இறுதி சுற்று தமிழ்,
இந்தி
படப்பிடிப்பில்
வினியோகஸ்தராக
2013 கல்யாண சமையல் சாதம் தமிழ்
இயக்குனராக
2014 மாயவன் தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 https://www.facebook.com/vijayvyoma/about?section=education
  2. "No guts to produce high budget movies". vikatan. September 2013. Archived from the original on 18 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
  3. "ஓர் புதிய கோணம்". தி இந்து. 27 June 2013. பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._குமார்&oldid=3553718" இலிருந்து மீள்விக்கப்பட்டது