சூரியன் சட்டக் கல்லூரி

2009 திரைப்படம்

சூரியன் சட்டக் கல்லூரி (Suriyan Satta Kalloori) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். பவன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான கஜ்னி, மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், இதில் ராதாரவி, பவன், எம். எசு. பாசுகர், கஞ்சா கறுப்பு, ஆரத்தி, காதல் சுகுமார், சாம்ஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். சிவசக்தி பாண்டியன் தயாரித்த இப்படத்திற்கு, தேவாவின் இசை அமைத்தார். படம் 25 செப்டம்பர் 2009 அன்று வெளியிடப்பட்டது.[1]

சூரியன் சட்டக் கல்லூரி
இயக்கம்ஆர். பவன்
தயாரிப்புசிவசக்தி பாண்டியன்
கதைஆர். பவன் (உரையாடல்)
திரைக்கதைஆர். பவன்
இசைதேவா
நடிப்புகஜ்னி
மித்ரா குரியன்
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புஎஸ் சூரஜ்கவே
கலையகம்எஸ். எஸ். மூவி மேக்கர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 25, 2009 (2009-09-25)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

காதல் கோட்டை (1996) மற்றும் வெற்றிக் கொடி கட்டு (2000) போன்ற படங்களைத் தயாரித்த சிவசக்தி பாண்டியன், அறிமுக இயக்குநர் ஆர். பவன் இயக்கிய சூரியன் சட்டக் கல்லூரி என்ற படத்தை தயாரிப்பதன் மூலமாக நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் படம் தயாரிக்கத் துவங்கினார்.[2] படத் தயாரிப்பாளர் காஜா மொகைதீனின் மகன் புதுமுகம் கஜ்னி, மலையாள நடிகை மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பவன், ராதாரவி, எம். எசு. பாசுகர், கஞ்சா கறுப்பு, ஆர்த்தி போன்ற நடிகர்கள் பிற வேடங்களில் நடித்தனர். யூ. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, தேவா இசை அமைத்தார். படத்தொகுப்பை எஸ். சூரஜ்கவே மேற்கொண்டார்.[3][4][5]

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா அமைத்தார். ரீரிகார்டிங் முடிக்க தேவா 21 நாட்கள் எடுத்துக்கொண்டார்.[6] 2009 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில், கபிலன், ஆர். பவன் எழுதிய ஐந்து பாடல்கள் இருந்தன.[7]

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள் காலம்
1 "கலாய் கலாய் கலாக்கிறாய்" உதித் நாராயண், ஜனனி பரத்வாஜ் கபிலன் 5:28
2 "குரு பிரம்மா குரு விஷ்ணு" ஹரிஹரன், சாதனா சர்கம் 4:46
3 "காதல் பண்ணப் போரியா" தேவா 4:06
4 "மசாக்கி மசாக்கி" நிர்தியா 4:46
5 "தீக தீக தீக்கனா" சின்னப்பொண்ணு ஆர்.பவன் 4:43

வெளியீடு

தொகு

இந்த படம் 25 செப்டம்பர் 2009 அன்று நான்கு படங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது.[8]

வணிகம்

தொகு

இந்தத் திரைப்படம் சென்னை மண்டலத்தில் சராசரிக்கும் குறைவான வசூலைத் துவக்கியது.[9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jointscene : Tamil Movie Suriyan Satta Kalloori". jointscene.com. Archived from the original on 24 September 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  2. "Producer Sivasakthi Pandian is back". kollywoodtoday.net. 6 September 2008. Archived from the original on 7 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Three in one go!". indiaglitz.com. 11 March 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  4. "Sooriyan Satta Kallori". ayngaran.com. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  5. "சிவசக்தி பாண்டியனின் சூரியன் சட்டக்கல்லூரி!" [Sivasakthi Pandian's Sooriyan Satta Kalloori] (in Tamil). filmibeat.com. 6 September 2008. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Deva takes 21 days to complete RR for Sooriyan Satta Kalloori" (in Tamil). filmibeat.com. 5 February 2004. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Suriyan Satta Kallori (2009) - Deva". mio.to. Archived from the original on 19 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Five Tamil films this Friday!". சிஃபி. 23 September 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  9. "Suriyan Satta Kaloori - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 28 September 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  10. "Suriyan Satta Kaloori - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 5 October 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியன்_சட்டக்_கல்லூரி&oldid=4146559" இலிருந்து மீள்விக்கப்பட்டது