விந்தை (திரைப்படம்)

2015 திரைப்படம்

விந்தை (Vindhai) என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். லாரா இயக்கி இப்படத்தில் மகேந்திரன், மனீஷாஜித் ஆகியோர் நடித்ததுள்ளனர்.

விந்தை
இயக்கம்லாரா
தயாரிப்புஆர். எல். ஏசுதாஸ்
கதைலாரா
இசைவி. வில்லியம்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுஇரதிஷ் கண்ணனா
படத்தொகுப்புநாதிபுயல்
கலையகம்அன்னை புதுமை மாதா பிலிம்ஸ்
வெளியீடு22 மே 2015 (2015-05-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படத்தை இதற்கு முன்பு வர்ணம் (2011) என்ற படத்தை இயக்கிய லாரா இயக்கியுள்ளார்.[2] சிறைக்கு அனுப்பப்படும் ஓர் இளம் தம்பதியினரைப் பற்றிய படம் இது ஆகும்.[3] முன்னாள் குழந்தை நட்சத்திரங்களான மகேந்திரன், மனிஷாஜித் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வெளியீடு

தொகு

டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றை அளித்து எழுதியது, "இந்த படத்தின் கதையானது எழுத்தில் நல்லதாக இருக்கும். ஆனால் எழுத்தை திரைப்படத் தயாரிப்பாக மாற்றியது மிகவும் மோசமானதாக உள்ளது " என்றது.[1] மாலை மலர் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவை விமர்சித்தது, அதே நேரத்தில் மனிஷாஜித் மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோரின் நடிப்பைப் பாராட்டியது.[4]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Vindhai Movie Review {1/5}: Critic Review of Vindhai by Times of India" – via timesofindia.indiatimes.com.
  2. Kumar, S. r Ashok (May 19, 2015). "Some comic relief" – via www.thehindu.com.
  3. Raghavan, Nikhil (March 28, 2015). "Etcetera: Cop comedy" – via www.thehindu.com.
  4. "விந்தை". maalaimalar.com. May 22, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தை_(திரைப்படம்)&oldid=4146567" இலிருந்து மீள்விக்கப்பட்டது