மனீஷாஜித்
மனீஷாஜித் (Manishajith) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார்.[1][2][3]
தொழில்
தொகுமனீஷாஜித் கம்பீரம் (2004) படத்தின் வழியாக அறிமுகமானார். அதில் இவர் சரத் குமாரின் மகளாக நடித்தார்.[4] கிட்டத்தட்ட நாற்பது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சஞ்சீவ் நடித்த நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.[5] 2015 ஆம் ஆண்டு, விந்தை படத்தில் முன்னாள் குழந்தை நட்சத்திரமான மகேந்திரனுடன் நடித்தார். அடுத்து கம்மர்கட்டு என்ற திகில் படத்தில் நடித்தார்.[6][7] டாஸ்மாக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாகக் கொண்ட திறப்பு விழா, மற்றும் ஜெகன் நடித்த எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல உள்ளிட்ட குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட பல படங்களில் நடித்தார்.[8][9] 2020 ஆம் ஆண்டில் உயிரே என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்; படப்பிடிப்புத் தளத்தில் இவர் மயக்கமடைந்த நிகழ்வுக்குப் பிறகு இவருக்கு பதிலாக ஸ்ரீ கோபிகா தொடரில் நடித்தார்.[10][11] இவரது வரவிருக்கும் படங்களில் தொலைக்காட்சி தொகுப்பாளர் அசாருடன் கடலை போட பொண்ணு வேணும் படம் அடங்கும்.[12]
திரைப்படவியல்
தொகு- குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாவிட்டாதவை, அனைத்தும் தமிழ் படங்களாகும்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2004 | கம்பீரம் | முத்துசாமியின் மகள் | குழந்தை நட்சத்திரம் |
2013 | நண்பர்கள் கவனத்திற்கு | வெண்ணிலா | |
2015 | கமர கட்டு | ||
விந்தை | காவ்யா | ||
2016 | இளைய தலைமுறை | ||
2017 | திறப்பு விழா | ரெஹானா என குறிப்பிடப்பட்டுள்ளது | |
2019 | வகிபா | ||
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல | |||
2020 | பிழை | ||
அல்டி | மேரி | ||
2021 | எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா | கனிமொழி |
- தொலைக்காட்சி
ஆண்டு | படம் | பங்கு | தொலைக்காட்சி |
---|---|---|---|
2020-2021 | உயிரே | பவித்ரா | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karthiik plays a koothu artiste in his next film - Times of India". The Times of India.
- ↑ "Uyire: Manishajith to play Pavithra yet again - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
- ↑ "வெள்ளித்திரை கை கொடுக்காததால்... சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை! யார் தெரியுமா". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
- ↑ "Working with Azhar was a fun experience: Manishajith - Times of India". The Times of India.
- ↑ "Child artist Maneeshajit turns heroine - Times of India". The Times of India.
- ↑ Raghavan, Nikhil (March 28, 2015). "Etcetera: Cop comedy" – via www.thehindu.com.
- ↑ "Kamara Kattu Movie Review {1.5/5}: Critic Review of Kamara Kattu by Times of India" – via timesofindia.indiatimes.com.
- ↑ Subramanian, Anupama (May 6, 2017). "A film on Tasmac protests". Deccan Chronicle.
- ↑ Subramanian, Anupama (December 19, 2018). "Manishajith takes the glam route". Deccan Chronicle.
- ↑ "Actress Shree Gopika replaces Manishajith in 'Uyire' - Times of India". The Times of India.
- ↑ "Uyire fame actress Manishajith falls unconscious on the shooting sets - Times of India". The Times of India.
- ↑ Subramanian, Anupama (May 15, 2019). "Child artiste blossoms into heroine". Deccan Chronicle.