துப்பாக்கி முனை

2018 தமிழ்த் திரைப்படம்

துப்பாக்கி முனை (Thuppakki Munai) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திகில் திரைப்படம் ஆகும்.[1][2] இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா மோட்வானி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தினேஷ் செல்வராஜ் எழுதி, இயக்கி கலைப்புலி எஸ். தாணுவால் தயாரிக்கப்பட்டது. எல். வி. முத்து கணேஷ் இசையமைப்பு மற்றும் ராசமதி ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் டிசம்பர் 14, 2018 அன்று வெளியானது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சியானது செப்டம்பர், 2018 அன்று வெளியிடப்பட்டது.[3]

துப்பாக்கி முனை
இயக்கம்தினேஷ் செல்வராஜ்
தயாரிப்புஎஸ். தாணு
கதைதினேஷ் செல்வராஜ்
இசைஎல். வி. முத்து கணேஷ்
நடிப்புவிக்ரம் பிரபு
ஹன்சிகா மோட்வானி
எம். எசு. பாசுகர்
வேல ராமமூர்த்தி
ஒளிப்பதிவுராசமதி
கலையகம்வி கிரியேசன்சு
வெளியீடு14 டிசம்பர் 2018
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

கதைச் சுறுக்கம்

தொகு

மும்பையில் உதவி ஆணையராக இருக்கும் பிர்லா போஸ் (விக்ரம் பிரபு) ஒரு நேர்மையான காவலாளியான இவர் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். 33 என்கவுன்ட்டர்கள் செய்துவிட்டு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஒரு தவறான புரிதலால் தன் அம்மா, காதலி இருவரையும்விட்டு பிரிகிறார். இந்த நிலையில், ராமேசுவரத்தில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு அவரிடம் தரப்படுகிறது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிகாரைச் சேர்ந்த ஆசாத் (மிர்ஷி ஷா) என்பவரை என்கவுன்ட்டர் செய்யும் வேலையும் அவருக்கு கொடுக்கப்படுகிறது. அதன் பின்பு உண்மை குற்றவாளிகள் வேறு சிலர் என்பதை அறிகிறார். பிறகு ஆசாதை இவ்வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கிறாரா? உண்மை குற்றவாளிகளை என்ன செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.

பாடல் வரிகள்

தொகு

இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

  • யார் இவன் - எல். வி. முத்து, கார்த்தி
  • பூவென்று - சிறீராம் பார்த்தசாரதி

மேற்கோள்கள்

தொகு
  1. "துப்பாக்கி முனை விமர்சனம்".மாலைமலர் (டிசம்பர் 14, 2018)
  2. ""சுட்டுத் தள்ளிட்டா எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுமா?!" - 'துப்பாக்கி முனை' விமர்சனம்". விகடன் (டிசம்பர் 14, 2018)
  3. "துப்பாக்கி முனை". தினமலர் (டிசம்பர் 14, 2018)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்பாக்கி_முனை&oldid=3660238" இலிருந்து மீள்விக்கப்பட்டது