சில சமயங்களில் (திரைப்படம்)
சில சமயங்களில் (Sometimes) 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்சன். தயாரிப்பு ,ஐசரி கே. கணேஷ் , பிரபுதேவா, மற்றும் ஏ. எல். விஜய், இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி, மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் தோன்றியிருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு சமீர் தாஹீர்.
சம் டைம்ஸ் | |
---|---|
இயக்கம் | பிரியதர்சன் |
தயாரிப்பு | ஐசரி கே. கணேஷ் ஏ. எல். விஜய் பிரபுதேவா ராதிகா சௌத்ரி |
கதை | பிரியதர்சன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரகாஷ் ராஜ் சிரேயா ரெட்டி அசோக் செல்வன் |
ஒளிப்பதிவு | சமீர் தாஹீர் |
படத்தொகுப்பு | பீனா பால் |
கலையகம் | திங் பிக் ஸ்டுடியோஸ் பிரபு தேவா ஸ்டுடியோஸ் |
விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
வெளியீடு | 1 மே 2018 |
ஓட்டம் | 92 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்தப் படம் நெற்ஃபிளிக்சில் 2018 மே 1 அன்று வெளியிடப்பட்டது. 74 வது கோல்டன் குளோப் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும், ஆனால் விருதிற்கு பரிந்துரைக்கப்படவில்லை.[2]
நடிகர்கள்
தொகு- பிரகாஷ் ராஜ் - கிருஷ்ணமூர்த்தி
- சிரேயா ரெட்டி -தீபா
- அசோக் செல்வன் - பாலமுருகன்
- வருண் - விவேக்
- நாசர் - மருத்துவர்
- எம். எசு. பாசுகர் - ராகவன்
- அஞ்சலி ராவ்
- சண்முகராஜன் - காவல் துறை உயர் அதிகாரி கருணாகரன்
- பாண்டியர்
- "சைவம் ரவி"
- அக்ஷ்ரிதா கிங்கினி
தயாரிப்பு
தொகு"தீ தனா தன்" படம் வெளியான 2009 டிசம்பருக்குப் பின் இயக்குநர் பிரியதர்சன் எயிட்சு என்றப் படத்தில் இந்தி நடிகர் ஆமிர் கானுடன் பணியாற்றப் போவதாக அறிவித்தார்.[3] இந்த இணை கதையை பற்றி விவாதித்து திட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தது ,இயக்குநர் பிரியதர்சன் 2011 பிப்ரவரியில் தான் இன்னும் கதையை விரிவாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.[4] இருப்பினும், இயக்குனர் கதை விவாதத்தை முழுமையாக முடிக்க முடியாததால் மே 2012 ல், ஆமீர் கான் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோர் இந்த திட்டத்தை கைவிட்டனர்.[5] இயக்குநர் இந்தி நடிகர் அக்ஷய் குமாரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மறுபரிசீலனை செய்ய நினைத்தார், ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.[6]
2015 ஜூலையில் , பிரியதர்ஷன், அதற்கு பதிலாக தமிழ் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சிரேயா ரெட்டி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிப்பார்கள் என்று அறிவித்தார். சந்தோஷ் சிவன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், பீனா பால் மற்றும் சாபு சிரில் ஆகியோர் முறையே படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குனராக தேர்வு செய்யப்பட்டனர். தனது முன்னாள் உதவியாளரான இயக்குனர் ஏ. எல். விஜயின் "தி பிக் ஸ்டுடியோஸ்" 2 கோடி ரூபாய்க்கு இந்தத் திரைப்படத்தை எடுத்துத் தருவதாக ஒப்பந்தம் செய்தார். நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தாங்கள் பெற்றுவரும் ஊதியத்தை விடக் குறைவாகவே பெறுவார்கள் என்வும் அறிவிக்கப்பட்டது.[7] பிரபுதேவா பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைந்து இப்ப்டத்தை தயாரிப்பதாக அறிவித்தார். "திங் பிக் ஸ்டுடியோஸ்" படத்தின் முக்கிய தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்.[8] இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா பின்னணி இசையை மேற்கொண்டார்.[9] இந்த படத்தில் பாடல்கள் இல்லை தமிழ் சினிமாவுக்கு இது குறிப்பிடத்தக்க அரிதானதாகும்.[10][11]
ஆகஸ்ட் 2015 ல் பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்க "சில நேரங்களில்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.[12] இருபத்தி ஐந்து நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடைந்தது. தயாரிப்பு முடிவடைந்த பிறகு, "சில சமயங்களில்" என்ற பெயரில் இந்தப் படம் மீண்டும் பெயர் மாற்றப்பட்டதாக அமலா பால் அறிவித்தார்.[13] சர்வதேச பார்வையாளர்களுக்காக, இந்த திரைப்படம் "சம் டைம்ஸ்" என்ற தலைப்பில் இருந்தது.[14]
வெளியீடு
தொகு"சம் டைம்ஸ்" நெற்ஃபிளிக்சில் 2018 மே 1 அன்று வெளியானது. இத்திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படவில்லை.[1]
இதையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Priyadarshan's Sila Samayangalil: No theatrical release, Netflix premiere on May 1". இந்தியா டுடே. 30 April 2018. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/sila-samayangalil-will-have-its-netflix-premiere-on-may-1-1223237-2018-04-30.
- ↑ T, Thanveer (19 September 2016). "UPCOMING TAMIL FILM ENTERS FINAL ROUND OF GOLDEN GLOBE AWARDS!". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
- ↑ "Priyadarshan plans film on AIDS with Aamir Khan". The Hindu. 4 December 2009. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
- ↑ "Priyadarshan to work with Aamir on AIDS film | bollywood". Hindustan Times. 16 February 2011. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
- ↑ The author has posted comments on this article (1 May 2012). "Aamir Khan to act in Priyadarshan's AIDS film?". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
{{cite web}}
:|author=
has generic name (help) - ↑ "Akshay Kumar to act in Priyadarshans AIDS film? - NDTV Movies". Movies.ndtv.com. 27 August 2012. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
- ↑ "Priyadarshan to make a film on Aids!". Sify. 7 July 2015. Archived from the original on 10 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Prabhu Deva studios launch three movies". Sify. Archived from the original on 14 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ilaiyaraaja to compose music for Priyan film". Sify. 15 October 2015. Archived from the original on 24 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://www.youtube.com/watch?v=pWMWlnXctlI
- ↑ Kaushik, L M (2 May 2018). "Priyadarshan's Sila Samayangalil: What Works, What Doesn't - Film Companion". Film Companion. Archived from the original on 2 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 2 May 2018.
- ↑ "Priyadarshan`s next film titled, `Sila Nerangalil`?". Sify. 19 August 2015. Archived from the original on 19 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Priyadarshan teams up with Ilaiyaraaja". The Hindu. 14 October 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
- ↑ Rajendran, Sowmya (1 May 2018). "'Sila Samayangalil' review: An engaging drama on HIV/AIDS, out on Netflix". The News Minute. https://www.thenewsminute.com/article/sila-samayangalil-review-engaging-drama-hivaids-out-netflix-80506.