வருண் கமல்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(வருண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வருண் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆண்டோனியின் ஒரு நாள் இரவில் (2015) என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் ஏ. எல். விஜய் மற்றும் பிரபுதேவா சம்பந்தப்பட்ட படங்களில் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். [1]

வருண்
பிறப்புவருண் ஐசரி கமலக்கண்ணன்
22 திசம்பர் 1992 (1992-12-22) (அகவை 31)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2015
உயரம்183cm

தொழில்

தொகு

இவர் நடிகர் ஐசரி வேலனின் பேரனும், தொழிலதிபர் ஐசரி கணேசின், மருமகனுமாவார். 2011 ஆம் ஆண்டில் ஸ்ரீமானின் தயாரிப்பு நிறுவனத்தின் படமான பரிமளா திரையரங்கம் என்ற படத்தில் விகாஷ் என்ற மேடை பெயரில் கதாநாயகனாக முதன்முதலில் நடித்தார். அப்படத்தில் கிஷோர், விவேக், சனுஷா, ஆர்யா உள்ளிட்டோர் விருந்தினர் தோற்றத்தில் நடித்தனர். ஆனால் அப்படம் தயாரிப்பு சிக்கல்களில் சிக்கியதால் திரையரங்குகளில் வெளிவரவில்லை. [2] பின்னர் வருண் ஏ. எல். விஜய்யின் மேற்பார்வையில் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றார். மேலும் தலைவா (2013) படத்தின் உருவாக்கத்தில் பணியாற்றினார். தான் தயாரிக்கும் தனது அடுத்த படத்தில் நடிக்குமாறு வருணை விஜய் கேட்டுக்கொண்டார், ஒரு நாள் இரவில் (2015) என்ற பரபரப்பூட்டும் அப்படத்தை பிரபல திரைப்பட தொகுப்பாளரான ஆண்டோனி இயக்க வருண் நடித்தார். [3] அப்படத்தில் முப்பது வயது தானி ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடிக்க வருண் தன் எடையை பதினைந்து கிலோகிராம் வரை கூட்டினார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், அனுமோள், யூகி சேது ஆகியோர் நடித்தனர். [4] இந்த படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை. ஆனால் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [5] [6]

கற்பனை பரபரப்பூட்டும் திரைப்படமான போகனில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி ஆகியோருடன் இணைந்து நடித்த வருண் அதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்தார், அதற்காக இவர் உடல் எடையைக் கூட்டினார். [5] வருண் பிரபு தேவா தயாரிக்கும் படமான சம் டைம்சில் படத்தின் வழியாக மீண்டும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். இரண்டாவது முன்னணி நடிகராக நெருப்புடா படத்திலும், விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். மேலும் ஏ. எல். விஜய் இயக்கிய வனமகன் படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயிஷா ஆகியோருடன் இணைந்து நடித்தார். [7]

சம்யுக்தா ஹெக்டேவுடன் 2019 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை நாடக திரைப்படமான பப்பி படத்தில் வருண் நாயகனாக அறிமுகமானார். பிரபு தேவா தயாரிக்கும் வினோதன் படத்தில் வருண் இரண்டாவதாக முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் இவருடன் இணைந்து வேதிகா மற்றும் சலோனி லுத்ரா ஆகியோர் நடிக்கவிருக்கிறனர்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2013 தலைவா விஸ்வாவின் நண்பர்
2015 ஒரு நாள் இரவில் சூரி
2017 போகன் காவல் ஆய்வாளர் சத்யா
2017 வனமகன் விக்கி
2017 நெருப்புடா தனா
2018 சம் டைம்ஸ் விவேக்
2019 எல்.கே.ஜி. கொலையாளி சிறப்புத் தோற்றம்
2019 கோமாளி நாகராஜ்
2019 பப்பி பிரபு
2020 சீறு வியாசர்பாடி மல்லி
2021 குட்டி ஸ்டோரி ஆடம்
2021 ஜோசுவா இமை போல் காக்க யோசுவா படப்பிடிப்பு

தொலைக்கட்சி

தொகு
ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் குறிப்புகள்
2021 பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளராக நடப்பில்

குறிப்புகள்

தொகு

 

  1. "Isari Velan's grandson in Victor's debut film - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  2. RANGARAJAN, MALATHI. "Carving a unique niche". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  3. "Sathyaraj sir treated me like his son on sets: Varun Kamal". deccanchronicle.com. 22 November 2015. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  4. "Newcomer Varun talks about working in Oru Naal Iravil". behindwoods.com. 18 November 2015. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  5. 5.0 5.1 "Oru Naal Iravil (aka) Night Show review". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  6. "Review : Oru Naal Iravil". sify.com. Archived from the original on 22 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  7. "Varun on his next film with director Vijay and Jayam Ravi". behindwoods.com. 7 September 2016. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_கமல்&oldid=3531344" இலிருந்து மீள்விக்கப்பட்டது