தசாவதாரம் (2008 திரைப்படம்)

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தசாவதாரம் (Dasavathaaram), 2008 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் அசினும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

தசாவதாரம்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஆஸ்கார் ரவிச்சந்திரன்
கதைகமல் ஹாசன்
கிரேசி மோகன்
சுஜாதா
திரைக்கதைகமல் ஹாசன்
வசனம்கமல் ஹாசன்
இசைஹிமேஷ் ரேஷாமியா
நடிப்புகமல் ஹாசன்
அசின்
மல்லிகா ஷெராவத்
ஒளிப்பதிவுரவி வர்மன்
படத்தொகுப்புஏ. சிறீகர் பிரசாத்
சண்டைப் பயிற்சிபி. தியாகராயன்
யூப் கட்டானா
கனல் கண்ணன்
நடன அமைப்புபிருந்தா, பிரச்சன்னா
விநியோகம்ஆஸ்கார் பிலிம்ஸ்
வெளியீடு2008
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 60 crore[1]
மொத்த வருவாய்200 கோடி [2]

பாத்திரங்கள்

கமலின் பத்து பாத்திரங்கள்

கதைக்கோப்பு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கமல் பத்து பாத்திரங்களில் நடிக்கிறார். அவர்கள் அனைவரும் 2004 சுனாமியோடு எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை. கதையில் வரும் கமலின் பத்து பாத்திரங்களும் ஒழுங்கின்மை கோட்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பட்டாம்பூச்சி விளைவு ஆகியவற்றைக் கொண்டு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மையக் கதை ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர் கண்டுபிடித்த உயிரிப் பேரழிவுக் கிருமி தீய சக்திகளுக்குக் கைமாறும் தருவாயில் அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற அதை அறிவியலாளர் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அறிவியலாளரைப் பிடித்து அந்த உயிரியல் அழிவியை எடுக்க சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் தீவரவாதிகளால் அனுப்பப்படுகிறார். அதற்கிடையில் அறிவியலாளர் எவ்வாறு அந்த அழிவியை நழுவவிடுகிறார், பின் தொடர்கிறார், யார் யாரை சந்திக்கிறார், இறுதியில் 2004 சுனாமிக்கும் அந்த அழிவிக்கும் என்ன தொடர்பு எனபதுவே கதையின் சாரம்.

சிறப்புக் காட்சிகள்

12ம் நூற்றாண்டில் சோழ அரசன், கோவிந்தராசர் சிலையுடன் ரங்கராஜ நம்பியைப் பிணைத்து நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று வீசும் காட்சிகள், இறுதியில் சுனாமி காட்சிகள் போன்ற சிறப்பு காட்சிகள் அமெரிக்க வல்லுனர் பிறையன் ஜென்னிங்க்ஸ் மேற்பார்வையில் சென்னை வரைகலை, நுட்பக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன.

பாடல்கள்

No. பாடல் பாடகர்கள் நீளம் (நிமிடம்:நொடி) பாடலாசிரியர் நடிப்பு
1 உலக நாயகனே வினித் சிங் 5:34 வைரமுத்து கே. எஸ். ரவிக்குமார் நடனம்.
2 கல்லை மட்டும் கண்டால் ஹரிஹரன் குழுவினர் 5:28 வாலி கமல் 12ஆம் நூற்றாண்டு இரங்கராஜன் நம்பியாகவும் நெப்போலியன் இரண்டாம் குலோத்துங்க சோழனாகவும்.
3 ஓ...ஓ...சனம் கமல் ஹாசன், மகாலக்ஷ்மி ஐயர் 5:31 வைரமுத்து அவதார் சிங் (கமல்) தனது மனைவி ரஞ்சிதாவுடன் (ஜெயபிரதா) ஒரு இசை நட நிகழ்ச்சியில்
4 முகுந்தா முகுந்தா கமல் ஹாசன், சாதனா சர்கம் 6:32 வாலி அசின், விஷ்ணுவின் அவதார பெருமைகளைப் பாட வயதான பெண் கதாபாத்திரத்தில் கமல்,
5 கா கருப்பனுக்கும் சாலினி சிங் 5:06 வைரமுத்து மல்லிகா செராவத் இரவு கேளிக்கை விடுதியில் நடனம்
6 ஓ...ஓ...சனம்
(மீளிசை)
ஹிமேஷ் ரேஷாமியா, மகாலக்ஷ்மி ஐயர் 3:47 வைரமுத்து படத்தில் இடம் பெறாத கூடுதல் பாட்டு

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "இது கமல்ஹாசனின் 'டென் மேன் ஷோ!'... ஒன்றுக்குப் பத்தாக வரும் கமல்களுக்குத் தீனி போடுவதிலேயே பெரும் கவனத்தைச் செலவிட்டதாலோ என்னவோ, கதை லாஜிக்கிலும் திரைக்கதை மேஜிக்கிலும் கிராஃபிக்ஸ் நேர்த்தியிலும் ஆங்காங்கே சறுக்கல்கள். நம்பியின் நடிப்பாளுமை, சமூகப் போராளியான வின்சென்ட் பூவராகனின் புயல் கோபம், பத்து கேரக்டர்களுக்கும் விதவிதமான குரல் மாற்றம் என கமலின் உழைப்பு... சம காலத் தமிழ் சினிமாவின் பிரமிப்பு!" என்று எழுதி 43/100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "Dasavatharam, a 60 crore budget film!". filmibeat (in ஆங்கிலம்). 2011-07-08. Retrieved 2025-06-02.
  2. "Dasavathaaram should collect 200 crores: Kamal Haasan". Hindustan Times. 3 August 2015. https://m.hindustantimes.com/regional-movies/five-non-hindi-films-that-smashed-records-at-the-box-office/story-0BtaVxS8AxqGm7ZHbvLLFK.html. 
  3. "சினிமா விமர்சனம்: தசாவதாரம்". விகடன். 2008-06-25. Retrieved 2025-06-02.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசாவதாரம்_(2008_திரைப்படம்)&oldid=4285435" இலிருந்து மீள்விக்கப்பட்டது