அசின் (நடிகை)
அசின் தொட்டும்கல் (ஆங்கில மொழி: Asin, மலையாளம்: അസിന് തോട്ടുങ്കല്), (பிறப்பு அக்டோபர் 26, 1985[1]) பரவலாக அசின் என்ற பெயரால் அறியப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.
அசின் தொட்டும்கல் | |
---|---|
2012-இல் அசின் | |
இயற் பெயர் | அசின் தொட்டும்கல் |
பிறப்பு | அக்டோபர் 26, 1985[1] கொச்சி, கேரளம், இந்தியா |
தொழில் | நடிகை, விளம்பர அழகி |
நடிப்புக் காலம் | 2001 - 2015 |
துணைவர் | ராகுல் சர்மா (2016-இன்று வரை) |
இணையத்தளம் | http://www.asinonline.com |
2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
"கஜினி" (2005), "வரலாறு" (2006), "போக்கிரி" (2007), "வேல்" (2008), "தசாவதாரம்" (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான "கஜினி"யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால் பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். தற்போது இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அறிமுகம்
தொகுசத்யன் அந்திக்காடின் மலையாளத் திரைப்படமான நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா (2001) படத்தில், 15 ஆவது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார்.
பின்னர் ஓராண்டு காலம் படிப்பில் கவனத்தைச் செலுத்திய அசின், அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்..
அவரது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக, தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.[2] அதே ஆண்டில், சிவமணி, என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு க்கு இணையாக இவர் நடித்ததற்கு சந்தோசம் சிறந்த நடிகை விருது|சந்தோசம் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.[2]
அதனையடுத்து இவர் நடித்த, லட்சுமி நரசிம்மா மற்றும் கர்சனா ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களும், வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இவரது இடத்தை வலுப்படுத்தியது.
தமிழ் மொழியில் அசினின் முதல் படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். இது அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி படத்தின் தழுவல் திரைப்படமாகும்.
குடும்பம்
தொகுகேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு சைரோ மலபார் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் யோசப்பு தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர். தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை யோசப்பு தொட்டும்கல் பல தொழில்நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். தற்போது அவர் மகளின் திரைப்படங்களில் அவருக்கு உதவியாக உள்ளார். அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அசினுடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினார். இருப்பினும் அவரது தனது மருத்துவத் தொழிலை தொடர்கிறார்.
தனது பெயரின் பொருள் "தூய்மையானது, களங்கமில்லாதது" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து 'அ' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு "இல்லாதது" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார்.[3]
திருமணம்
தொகுசனவரி 18, 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rediff Entertainment Bureau (25 October 2005). "Asin's 23rd birthday plans". Rediff. பார்க்கப்பட்ட நாள் 10 October 2007.
- ↑ 2.0 2.1 Thottumkal, Asin (24 December 2008). "Awards". AsinOnline.com. பார்க்கப்பட்ட நாள் December 24, 2008.
- ↑ Ahmed, afsana (11 May 2009). "Salman's very supportive: Asin". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
- ↑ "நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நடந்தது: நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து". தி இந்து தமிழ் (சனவரி 19 2016)