ரவி வர்மன்
எஸ். இரவி வர்மன் (S. Ravi Varman) (பிறப்பு: 9 மே 1972) ஓர் இந்திய ஒளிப்பதிவாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் , எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய இந்திய மொழிப் படங்கள் எடுத்துள்ளார். இயல்பான உருவகிப்பு, கவிதைத் தர வடிவமைப்பிற்கான அறிவைப் பெற்றுள்ள ரவி வர்மன் மலையாளத் திரைப்படங்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் மாஸ்கோவின் காவிரி என்ற பெயரில் தமிழில் ஒரு காதல் திரைப்படம் இயக்கியுள்ளார். மேலும் பிரித்தானையப் தமிழ் பாடலாசிரியர் எம்.ஐ.ஏ எழுதிய "Bird Flu" பாடலுக்காக இசைக் காணொலியைம் படம்பிடித்துள்ளார். பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்ததற்காக இவருக்கு 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.[1]
இரவி வர்மன் | |
---|---|
2011 இல் இரவி வர்மன் | |
பிறப்பு | 9 மே 1972 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | ஒளிப்பதிவாளர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1999—தற்பொழுதுவரை |
இளமை வாழ்க்கை
தொகுரவி வர்மன் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் அருகே உள்ள பொய்யுண்டார்குடிக்காடு என்ற கிராமத்தில் பிறந்தார்.[2] வர்மன் இளம் வயதிலேயே தனது தாயை இழந்தவர். இவரின் தாய் இறப்பதற்கு சற்று முன்பு இவர்களின் இல்லத்தின் அருகாமையில் நிகழ்ந்த ஒரு திருமண விழாவில் பங்கு கொண்ட பொழுது, தற்செயலாக இவருடைய தாயின் உருவம் ஒரு புகைப்படக் கலைஞரால் புகைப்படமாக எடுக்கப்பட்டது. இவர் புகைப்பட அரங்கத்திற்குச் சென்று, தனது தாயாரின் புகைப்படத்தைப் பெரிதாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், "காட்சி அமைப்புப் பிழை" என்றால் என்னவென்பதை அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகே அறிந்து கொண்டார். தனது தாயாரின் இறுதிப் புகைப்படம் சரிவர அமையாததால் அதில் ஒரு உத்வேகம் ஏற்பட்டு, புகைப்படம் எடுக்கும் திறனை மேம்படுத்திக் கொள்வதில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதோடு, திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் விருப்பத்தையும் வளர்த்துக் கொண்டார். திரைத்துறையை தனது எதிர்காலமாக தேர்ந்தெடுக்காத அந்த நேரத்திலேயே புகைப்படத்துறையில் நிபுணத்துவம் பெற்றார்.
தொழில்
தொகு1999 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மலையாள படங்களில் பணிபுரிந்த பிறகு, 2003ல் பாலிவுட் படமான "யே தில்" என்பதில் பணியாற்றினார். பின்னர் தெலுங்கு திரைப்படமான "ஜாய்" திரைப்படத்தில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து இந்தி திரைப்படத்துறையில் பல வாய்ப்புகளான அர்மானன், பீ பஸ்தார், ராம்ஜி லண்டன்வால்', பீர் மிலேங்கே போன்ற படங்களும், அத்துடன் இந்திய ஆங்கில திரைப்படமான ஃபைவ் ஃபைவ் ஃப்போர் போன்ற படங்களும் கிடைத்தன.
தமிழராக இருந்த போதிலும், 2002 வரை இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியவில்லை. சுசி கணேசனின் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் முதற்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கிய அந்நியன், கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு கே. எஸ்.ரவிக்குமாரின் தசாவதாரம் மற்றும் பிரபு தேவாவின் வில்லு போன்ற தமிழ்த் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பிரபலமான இயக்குநர்களுடனும் பணிபுரிந்தார். திரைப்படங்களில் பணியாற்றியதைத் தொடர்ந்து இவர் 500 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்கள், இசைத் தொகுப்புகள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தையும் மீறி, இலக்கியத்திற்கான இவரது இயல்பான திறனானது, 'யாவரும் கேளீர்' என்ற இணையவழி பத்திரிக்கையை தமிழ் ஸ்டூடியோ என்ற நிறுவனத்திற்கென படைக்கத் தோன்றியது.
விருதுகளும் பாராட்டுகளும்
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகு- 23rd EME France Film Festival Best Cinematographer Award for சந்தம் (மலையாளம்) (2000)
- Filmfare Best Cinematographer Award for அந்நியன் (திரைப்படம்) (2006)
- Tamil Nadu State Film Award for Best Cinematographer for வேட்டையாடு விளையாடு (2007)
- Vikitan Best Cinematography Award (South) for வேட்டையாடு விளையாடு (2007)
- ITFA Best Cinematographer Award for தசாவதாரம் (2008 திரைப்படம்) (2009)
- Star Guild Awards for Best Cinematography for பர்ஃபி! (2012)
- Screen Awards for Best cinematography for பர்ஃபி! (2012)
- TOIFA Awards for Best Cinematography for பர்ஃபி! (2012)
- IIFA Awards for Best Cinematography for பர்ஃபி! (2012)
- Zee Cine Awards for Best cinematography for கோலியோன் கி இராஸ்லீலாஈராம்-லீலா (2014)
- விஜய் விருதுகள் for Best Cinematography for காற்று வெளியிடை (2017)
- SIIMA Award for Best Cinematography for காற்று வெளியிடை (2017)
மேற்கோள்கள்
தொகு- ↑ "தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/india/2024/Aug/16/national-awards-for-ponniyin-selvan. பார்த்த நாள்: 16 August 2024.
- ↑ varman.asp "ravi varman". Chennai Online. Archived from the original on 2010-02-22. பார்க்கப்பட்ட நாள் 2011-05-25.
{{cite web}}
: Check|archive-url=
value (help)
- http://archives.chennaionline.com/interviews/ravivarma.asp பரணிடப்பட்டது 2010-02-22 at the வந்தவழி இயந்திரம்
- http://archives.chennaionline.com/interviews/ravivarma1.asp
- "RAVI VARMAN - The Director, Cinematographer - Sunday special Interview on Dasavatharam Cinematographer Ravi Varman". Behindwoods.com. Retrieved 2011-11-07.