நொடி (கால அளவு)
அனைத்துலக முறை அலகுகள்(SI) குழுமத்தினரால் நிர்ணயித்தபடி, நேரத்தின் அடிப்படை அலகு, நொடி அல்லது வினாடி ஆகும். இதன் குறியீடு மற்றும் சுருக்கக் குறியீடு பின்வருமாறு:
குறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி).[1][2]
மணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம்.[3] சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது.[1][4]
நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு.[5] 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.[6]
வரையறை வரலாறு
தொகுஆரம்பகால நாகரிகங்கள்:
தொகுஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை.
- கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன.
- ஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.[7]
- கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது 1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது. இதன் துல்லியத் தன்மை 2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.[8]
- பாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு),[9] ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை.
சந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்:
தொகு- சிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.[10]
- 1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.[11]
- நவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல் (1⁄60 வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும் நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-tercja) மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-salise).
இயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்:
தொகு16 ஆம் நூற்றாண்டின் கடைசியில், நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின. இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது. இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது.
ஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf) சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம் 1570.[12]:417–418[13] 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம் உருவாக்கினார்.[14] 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.[12]:105}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.seconds.[12]:104
1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்[15] 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.[16] 1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார்.
1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரித்தானிய கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) "விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்" என ஒப்புக் கொண்டுள்ளனர்.[17]
ஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்:
புவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது.[18] குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன.
சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்:
தொகுபல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து இங்கிலாந்தின் டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர்.[19] இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.[20]
அவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.[19]
(SI வினாடி ஏற்கெனவே ஏற்கப்பட்டது. SI வினாடியானது, சராசரி சூரிய காலத்தின் வினாடி மதிப்பைக் காட்டிலும் சிறிது குறுகியதாக இருந்தது.[21][22])
சார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின் சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.[23]
முன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்:
தொகுலட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.[24]
கனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10−11 "ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது" என்பதைக் குறிக்கிறது. அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.[25]
நிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.[26][27]
Submultiples | Multiples | |||||
---|---|---|---|---|---|---|
Value | Symbol | Name | Value | Symbol | Name | |
10−1 எஸ் (s) | dஎஸ் (s) | deciவினாடி | 101 எஸ் (s) | daஎஸ் (s) | decaவினாடி | |
10−2 எஸ் (s) | cஎஸ் (s) | centiவினாடி | 102 எஸ் (s) | hஎஸ் (s) | hectoவினாடி | |
10−3 எஸ் (s) | mஎஸ் (s) | milliவினாடி | 103 எஸ் (s) | kஎஸ் (s) | kiloவினாடி | |
10−6 எஸ் (s) | µஎஸ் (s) | microவினாடி | 106 எஸ் (s) | Mஎஸ் (s) | megaவினாடி | |
10−9 எஸ் (s) | nஎஸ் (s) | nanoவினாடி | 109 எஸ் (s) | Gஎஸ் (s) | gigaவினாடி | |
10−12 எஸ் (s) | pஎஸ் (s) | picoவினாடி | 1012 எஸ் (s) | Tஎஸ் (s) | teraவினாடி | |
10−15 எஸ் (s) | fஎஸ் (s) | femtoவினாடி | 1015 எஸ் (s) | Pஎஸ் (s) | petaவினாடி | |
10−18 எஸ் (s) | aஎஸ் (s) | attoவினாடி | 1018 எஸ் (s) | Eஎஸ் (s) | exaவினாடி | |
10−21 எஸ் (s) | zஎஸ் (s) | zeptoவினாடி | 1021 எஸ் (s) | Zஎஸ் (s) | zettaவினாடி | |
10−24 எஸ் (s) | yஎஸ் (s) | yoctoவினாடி | 1024 எஸ் (s) | Yஎஸ் (s) | yottaவினாடி | |
பொதுவான முன்னொட்டுகள் தடித்த எழுத்துகளில் |
ஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும்.
ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 "Unit of time (second)". SI Brochure. BIPM. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 22, 2013.
- ↑ "Second".. Merriam Webster Learner's Dictionary.
- ↑ "Online Etymology Dictionary".
- ↑ "Base unit definitions: Second". physics.nist.gov. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 9, 2016.
- ↑ "அனைத்துலக முறை அலகுகள் (அனைத்துலக முறை அலகுகள்) (ஆங்கில மொழியில்)". தரங்கள், தொழினுட்பத்துக்கான தேசிய நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2012.
- ↑ "நேர அலகு மாற்றி (ஆங்கில மொழியில்)". ஈசி யுனிட்டுக் கன்வட்டர். Archived from the original on அக்டோபர் 31, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2012.
- ↑ Toomer, G. J. (1998). Ptolemy's Almagest. Princeton, New Jersey: Princeton University Press. pp. 6–7, 23, 211–216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-00260-6.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|authorlink=
and|author-link=
specified (help) - ↑ O Neugebauer (1975). A history of ancient mathematical astronomy. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-06995-X.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help) - ↑ See page 325 in O Neugebauer (1949). "The astronomy of Maimonides and its sources". Hebrew Union College Annual 22: 321–360.
- ↑ al-Biruni (1879). The chronology of ancient nations: an English version of the Arabic text of the Athâr-ul-Bâkiya of Albîrûnî, or "Vestiges of the Past". Sachau C Edward. pp. 147–149.
{{cite book}}
: More than one of|author=
and|last=
specified (help); More than one of|authorlink=
and|author-link=
specified (help) - ↑ R Bacon (2000) [1928]. The Opus Majus of Roger Bacon. BR Belle. University of Pennsylvania Press. p. table facing page 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85506-856-8.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help); Unknown parameter|nopp=
ignored (help) - ↑ 12.0 12.1 12.2 Landes, David S. (1983). Revolution in Time. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-76802-7.
- ↑ Willsberger, Johann (1975). Clocks & watches. New York: Dial Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8037-4475-7. full page color photo: 4th caption page, 3rd photo thereafter (neither pages nor photos are numbered).
- ↑ Helaine Selin (சூலை 31, 1997). Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Westen Cultures. Springer Science & Business Media. p. 934. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-4066-9.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help) - ↑ Greg Jenner (சனவரி 29, 2015). A Million Years in a Day: A Curious History of Everyday Life. Orion. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-297-86979-5.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help) - ↑ Jessica Chappell (October 1, 2001). "The Long Case Clock: The Science and Engineering that Goes Into a Grandfather Clock". Illumin 1: 1. http://illumin.usc.edu/184/the-long-case-clock-engineering-behind-a-grandfather-clock/.
- ↑ Jenkin, ed. (1873). Reports of the committee on electrical standards. British Association for the Advancement of Science. p. 90.
- ↑ "Leap Seconds". Time Service Department, United States Naval Observatory. Archived from the original on மே 27, 2012. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 22, 2015.
- ↑ 19.0 19.1 W Markowitz, RG Hall, L Essen, JVL Parry; Hall; Essen; Parry (1958). "Frequency of cesium in terms of ephemeris time". Physical Review Letters 1 (3): 105–107. doi:10.1103/PhysRevLett.1.105. Bibcode: 1958PhRvL...1..105M. http://www.leapsecond.com/history/1958-PhysRev-v1-n3-Markowitz-Hall-Essen-Parry.pdf.
- ↑ S Leschiutta (2005). "The definition of the 'atomic' second". Metrologia 42 (3): S10–S19. doi:10.1088/0026-1394/42/3/S03. Bibcode: 2005Metro..42S..10L.
- ↑ DD McCarthy, C Hackman, R Nelson; Hackman; Nelson (2008). "The Physical Basis of the Leap Second". Astronomical Journal 136 (5): 1906–1908. doi:10.1088/0004-6256/136/5/1906. Bibcode: 2008AJ....136.1906M. https://archive.org/details/sim_astronomical-journal_2008-11_136_5/page/1906. "... the SI second is equivalent to an older measure of the second of UT1, which was too small to start with and further, as the duration of the UT1 second increases, the discrepancy widens.".
- ↑ In the late 1950s, the caesium standard was used to measure both the current mean length of the second of mean solar time (UT2) (7009919263183000000♠9192631830 cycles) and also the second of ephemeris time (ET) (7009919263177000000♠9192631770±20 cycles), see L Essen (1968). "Time Scales". Metrologia 4 (4): 161–165. doi:10.1088/0026-1394/4/4/003. Bibcode: 1968Metro...4..161E. http://www.leapsecond.com/history/1968-Metrologia-v4-n4-Essen.pdf.
- ↑ See page 515 in RA Nelson et al. (2000). "The leap second: its history and possible future". Metrologia 38 (6): 509–529. doi:10.1088/0026-1394/38/6/6. Bibcode: 2001Metro..38..509N. http://www.cl.cam.ac.uk/~mgk25/time/metrologia-leapsecond.pdf.
- ↑ AD Ludlow et al. (2006). "Systematic study of the 87Sr clock transition in an optical lattice". Physical Review Letters 96 (3): 033003. doi:10.1103/PhysRevLett.96.033003. Bibcode: 2006PhRvL..96c3003L.
- ↑ "Optical Frequency - Research Projects". பெப்பிரவரி 28, 2006. Archived from the original on சனவரி 25, 2009.
- ↑ R Wynands, S Weyers; Weyers (2005). "Atomic fountain clocks". Metrologia 42 (3): S64–S79. doi:10.1088/0026-1394/42/3/S08. Bibcode: 2005Metro..42S..64W.
- ↑ "NIST-F1 Cesium Fountain Atomic Clock". NIST. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 19, 2009.