எர்னெசுட்டு வில்லியம் பிரவுன்

எர்னெசுட்டு வில்லியம் பிரவுன் (Ernest William Brown, 29 நவம்பர் 1866 – 22 சூலை 1938) ஓர் ஆங்கிலேயக் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் தன் வாழ்நாலின் பெரும்பகுதியை அமெரிக்காவிலேயே கழித்தார். இவர் இயல்பாக 1923 இல் அமெரிக்க குடிமகனாகவும் ஆனார்.[1][2]

எர்னெசுட்டு வில்லியம் பிரவுன்
Ernest William Brown
பிறப்பு(1866-11-29)29 நவம்பர் 1866
அல், இங்கிலாந்து
இறப்பு22 சூலை 1938(1938-07-22) (அகவை 71)
நியூஏவன், கனெக்டிகட்
குடியுரிமைபெரிய பிரித்தானியா
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஆங்கிலேயர்
துறைகணிதவியல்
வானியல்
கல்வி கற்ற இடங்கள்கிறிஸ்து கல்லூரி, கேம்பிரிட்சு
ஆய்வு நெறியாளர்ஜார்ஜ் ஓவார்டு டார்வின்
அறியப்படுவதுநிலாக் கோட்பாடு
வான்பொருள் இயக்கவியல்
பின்பற்றுவோர்வாலசு ஜான் எக்கர்ட்
விருதுகள்அரசு பதக்கம் (1914)
ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம் (1937)
அரசு கழக உறுப்பினர் (1897)

இவரது வாழ்நாள் பணி நிலா இயக்கமும் நிலாக் கோட்பாடும் ஆகும், இவர் மிகவும் துல்லியமான நிலாப் பட்டியல்களைத் தொகுத்தார். இவர் கோள்களின் இயக்கங்களையுமாய்வு செய்தார். திராயிய குறுங்கோள்களின் வட்டணைகளையும் கணக்கிட்டார்.

வாழ்வும் பணியும்

தொகு

பிரவுன் இங்கிலாந்தில் இருக்கும் கிங்சுடன் அல் எனும் இடத்தில் பிறந்தார். இவர் வில்லியத்துக்கும் மார்ட்டின் எனப்பட்ட எம்மாவுக்கும் பிரந்த நால்வரில் இரண்டாமவர். இவரது த்ந்தையார் முதலில் உழவராக இருந்து பின்னர் மரவணிகரானார். இவரது தாயாரும் தம்பியும் 1870 இல் காய்ச்சலில் இறந்தனர். அப்போது இவருக்கு 4 அகவையும் ஆகவில்லை. இவரும் இரு அக்காவும் தங்கையும் மணமாகாத அத்தையால் ஐந்து ஆண்டுகள் (தந்தைக்கு மறுமணம் ஆகும்வரை) வளர்க்கப்பட்டனர்.[1][3]

கல்வியும் தொடக்கநிலைப் பணியும்

தொகு

இவர் எர்ட்போர்டுசயரில் இருக்கும் டாட்டெரிட்ஜ் பார்க் பள்ளியில் கல்வி பயின்றார், இது இப்போது டோர்செட் அவுசு பள்ளியின் ஒருபகுதியாக உள்ளது. Hull and East Riding College பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம். பள்ளி முடிந்த்தும், இவர் கேம்பிரிட்ஜ் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு இவர் தகவுறு முதல்வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் கேபிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே ஆறாம் விரேங்கிலர் கணித்த் தகுதியுடன் 1887 இல் பட்டம் பெற்றார்.[4][5] அங்கேயே இவர் பட்டமுதுவர் கல்வியும் ஜார்ஜ் ஓவர் டார்வின் வழிகாட்டுதலின்கீழ் தொடர்ந்துள்ளார். 1888 ஆம் ஆண்டு கோடையில் டார்வின் இவரை நிலாக் கோட்பாடு சார்ந்த ஜார்ஜ் வில்லியம் கில்லின் ஆய்வைப் படிக்கச் சொன்னார் . இது பிரவுனின் முழு வாழ்நாள் ஆய்வுப் போக்கையும் தீர்மானித்தது.

இவர் 1889 இல் கிறிஸ்து கல்லூரியின் ஆய்வுறுப்பினர் ஆக்கப்பட்டார். மேலும் அதே ஆண்டில் இவர் அரசு வானியல் கழக உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இவர் தன் முதுவர் பட்ட்த்தை 1891 இல் பெற்ரார். பின் கேம்பிரிட்ஜில் இருந்து வெளியேறி, பென்சில்வேனியாவில் இருக்கும் ஏவர்போர்டு கல்லூரியில் கணிதவியல் பயிற்றுநராகச் சேர்ந்தார். இங்கு இவர் படிப்படியாக உயர்ந்து 1893 இல் கணிதவியல் பேராசிரியர் ஆனார். என்றாலும் இவர் ஒவ்வோராண்டு கோடையிலும் கேம்பிரிட்ஜுக்கு வந்து இவரது முன்னாள் பயிற்றுநரான டார்வினுடன் தங்குவார்.[6]

தகைமை

தொகு

விருதுகள்

தொகு

இவர் பெயர் இடப்பட்டவை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Schlesinger, Frank; Brouwer, Dirk. National Academy of Sciences - Biographical Memoirs, Ernest William Brown (PDF). Vol. 21. p. 243.
  2. Charles Galton Darwin (1940). "Ernest William Brown. 1866-1938". Obituary Notices of Fellows of the Royal Society 3 (8): 18–66. doi:10.1098/rsbm.1940.0003. 
  3. "Ernest W. Brown". NNDB. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
  4. "Ernest William Brown". MacTutor History of Mathematics archive. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
  5. "Brown, Ernest William (BRWN875EW)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  6. Hockey, Thomas; et al. (eds.). Biographical Encyclopedia of Astronomers. Springer Reference. p. 174. {{cite book}}: Explicit use of et al. in: |editor-last= (help)

—வெளி இணைப்புகள்==