ஜார்ஜ் டார்வின்

ஆங்கில வானியலாளர், கணிதவியலாளர் (*1845 – †1912)
(ஜார்ஜ் ஓவார்டு டார்வின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் ஜார்ஜ் ஓவார்டு டார்வின் (Sir George Howard Darwin), (9 ஜூலை 1845 – 7 திசம்பர் 1912)[1] ஓர் ஆங்கிலேய வழக்கறிஞரும் வானியலாளரும் கணிதவியலாளரும் பாத் ஆணை வீரக் கட்டளைத் தளபதியும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.

சர் ஜார்ஜ் ஓவார்டு டார்வின்
சர் ஜார்ஜ் ஓவார்டு டார்வின்
பிறப்புஜார்ஜ் ஓவார்டு டார்வின்
(1845-07-09)9 சூலை 1845
டவுனவுசு, டவுனே, கெண்ட், இங்கிலாந்து
இறப்பு7 திசம்பர் 1912(1912-12-07) (அகவை 67)
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல், கணிதவியல்
கல்வி கற்ற இடங்கள்புனித ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
டிரினிடி கல்லூரி, கேம்பிரிட்ஜ்
Academic advisorsஎட்வார்டு ஜான் உரூத்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்எர்னெசுட்டு வில்லியம் பிரவுன்
ஈ.டி. விட்டேகர்
விருதுகள்சுமித் பரிசு (1868)
அரசு பதக்கம் (1884)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1892)
கோப்ளே பதக்கம் (1911)
கையொப்பம்

வாழ்க்கை

தொகு
 
மார்க் கெர்டிலர் வரைந்த சர் ஜார்ஜ் ஓவார்டு டார்வின் நெய்வணத் திரை ஓவியம், 1912.
 
சீமாட்டி ஜார்ஜ டார்வின், சிசிலியா பியூக்சு, 1889

ஜார்ஜ் டார்வின் கெண்டில் உள்ள டவுனவுசில் சார்லசு டார்வினுக்கும் எம்மா டார்வினுக்கும் இரண்டாவது மகனாகவும் ஐந்தாவது குழந்தையாகவும் பிறந்தார். இவர் தன் 11 ஆம் அகவை முதல் சார்லசு பிரிச்சர்டு கீழ் கிளாபாம் இலக்கணப் பள்ளியில் கல்வி பயின்று, 1863 இல் கேம்பிரிட்ஜ் புனித ஜான் கல்லுரியில் சேர்ந்தார். பிறகு, இவர் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரிக்கு விரைவிலேயே மாறினார்.[2] இங்கு இவரது பயிற்றுநராக எடுவின் ஜான் உரூத் இருந்தார். இவர் 1868 இல் இரண்டாம் விராங்கிலராகப் பட்டம் பெற்றார். இவர் சுமித்து பரிசை இரண்டாம் நிலையில் வென்றார்; கல்லூரி ஆய்வுறுப்பினராகவும் அமர்த்தப்பட்டார். இவர் 1872 இல் சட்டப் பிரிவில் கல்விபெற அமர்த்தப்பட்டாலும் திரும்பவும் அறிவியல் பிரிவுக்கு வந்துவிட்டார்.[2] இவர்1879 இல் அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1884 இல் அதன் அரசு பதக்கத்தையும் 1911 இல் கோப்ளே பதக்கத்தையும் வென்றார்.[3] இவர் "ஓத முன்கணிப்பு" எனும் தலைப்பில் 1891 இல் பேக்கரிய உரையாற்றினார்.

இவர் 1883 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானியல், செய்முறை மெய்யியல் புளூமியப் பேராசிரியராக ஆனார். இவர் சூரியன், நிலா, புவி இடையிலான ஓத விசைகளை ஆய்வு செய்து நிலா உருவாக்கத்துக்கான பிளவுக் கோட்பாட்டை முன்மொழிந்தார்.[4]

இவர் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் 1892 இல் அக்கழகத்தின் பொற்பதக்கத்தை வென்றார். இவர் 1899 இலிருந்து 1901 வரை அரசு வானியல் கழகத் தலைவராகப் பணியாற்றினார். அரசு வானியல் கழகம் 1984 இல் ஒரு பரிசு விரிவுரைத் தகைமையை நிறுவி, அதற்கு ஜார்ஜ் டார்வின் விரிவுரித் தகைமை என இவரது நினைவாகப் பெயரிட்டது.

இவருக்கு "இயக்கவியல், இயற்கை கணிதவியல், வானியல்" எனும் தலைப்பில்1908 இல் உரோம் நகரில் நடந்த பன்னாட்டு கணிதவியல் பேராயத்தில் உரி நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டது.[5] இவர் கேம்பிரிட்ஜ் மெய்யியல் கழகத் தலைவராக அதன் 1912 ஆம் ஆண்டு பேராயத்தில் தூய(அடிப்படை), பயன்பாட்டுக் கணிதவியலின் பண்புகள் பற்றி ஓர் அறிமுகவுரை வழங்கியுள்ளார்.[6]

இவர் மகன் இலியனார்டு, மகள் குவென் இராவெரத் ஆகிய இருவருடன் டிரம்பிங்டன் விரிவுக் கல்ல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்; இவரது மனைவியான சீமாட்டி மவுடு டார்வின் கேம்பிரிட்ஜ் கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார்; இவரது உடன்பிறப்புகளாகிய சர் பிரான்சிசு டார்வினும் சர் ஒரேசு டார்வினும் அவர்களின் மனைவியரும் கேம்பிரிட்ஜ் அசென்சன் பாரிழ்சு புதைகாட்டிலும் அடக்கம் செய்யப்பட்டனர்.

குடும்பம்

தொகு

டார்வின், பிலடெல்பியாவைச் சேர்ந்த து புய் அவர்களின் மகளான மார்த்தா மவுடு து புய் அவர்களை 1884 இல் மணந்துகொண்டார்; இவரது மனைவி மற்ற 11 உறுப்பினர்களுடன் சீமாட்டிகள் விருந்துண் கழகத்தில் உறுப்பினராக இருந்தார். மவுடு 1947 பிப்ரவரி 6 இல் இறந்தார். இருவருக்கும் பின்வரும் மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் பிறந்தனர்:

 • குவேன் இரேவராத் (1885–1957), ஓவியர்.
 • சார்லசு கால்ட்டன் டார்வின் (1887–1962) இவர் இயற்பியலாளரும் பயன்முறைக் கணிதவியலாளரும்ஆவார்.
 • மார்கரெட் எலிசபெத் டார்வின் (1890–1974) இவர் சர் ஜியோப்ரி கீய்ன்சை மணந்துகொண்டார்.
 • வில்லியம் இராபர்ட் டார்வின் (1894–1970)
 • இலியோனார்டு டார்வின் (1899–1999)

டார்வின் நூல்கள்

தொகு

கட்டுரைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. GRO Register of Deaths: DEC 1912 3b 552 CAMBRIDGE – George H. Darwin, aged 67
 2. 2.0 2.1 "Darwin, George Howard (DRWN863GH)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
 3. "Library and Archive Catalogue". Royal Society. பார்க்கப்பட்ட நாள் 29 December 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 4. Britannica.com: Sir George Darwin
 5. "ICM Plenary and Invited Speakers since 1897". அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை. Archived from the original on 2017-11-08. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
 6. Hobson, E. B. and A. E. H. Love, eds. (1913). Proceedings of the Fifth International Congress of Mathematicians (Cambridge, 22-28 August 1912). Cambridge: Cambridge University Press. pp. 33–36. {{cite book}}: |last1= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
 7. 7.0 7.1 Ernest William Brown (1909). "Review: Scientific Papers, by George Howard Darwin". Bull. Amer. Math. Soc. 16 (2): 73–78. doi:10.1090/s0002-9904-1909-01862-2. http://www.ams.org/journals/bull/1909-16-02/S0002-9904-1909-01862-2/. 
 8. "Review: Scientific Papers. Vol. I by Sir George Howard Darwin". The Athenaeum (4196): 386. March 28, 1908. https://books.google.com/books?id=XSI5AQAAIAAJ&pg=PA386. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_டார்வின்&oldid=3538963" இலிருந்து மீள்விக்கப்பட்டது