அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை

அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை (International Congress of Mathematicians-ICM) என்பது கணிதம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் கணித அறிஞர்கள் ஒன்றுகூடி கருத்தாடி, கட்டுரைகள் படிக்கின்ற மிகப்பெரிய மாநாடாகும். இப்பேரவை அனைத்துலக கணித ஒன்றியத்தினால் (International Mathematical Union) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இப்பேரவைக் கூட்டத்தின் போது சிறந்த கணித அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

கியார்கு கேன்ட்டர்
ஃபெலிக்ஸ் கிளைன்

வரலாறு

தொகு

உலக அளவில் சிறந்து விளங்கும் கணித அறிஞர்களை ஒன்று கூட்டி இது போன்ற பேரவை நடத்த வேண்டும் என 1890 -இல் முதல் குரல் எழுப்பியவர்கள் ஃபெலிக்ஸ் கிளைன்(Felix Klein) மற்றும் கியார்கு கேன்ட்டர் என்ற கணித அறிஞர்கள் ஆவர்.[1][2] 1893 -இல் சிகாகோவில் கணித அறிஞர்கள் ஒன்று கூடிய ஒரு பேரவையில் கிளைன் எழுச்சியூட்டக்கூடியவகையில் உரையாற்றி உலகிலுள்ள கணித அறிஞர்கள் ஒன்று கூட வேண்டுகோள் விடுத்தார்.

முதல் அனைத்துலகக் கணித அறிஞர்கள் பேரவை ஆகத்து - 1897 -ஆம் ஆண்டு சூரிச்சில் கூட்டப்பட்டது. 16 நாடுகளில் இருந்து 208 அறிஞர்கள் ஒன்றுகூடி வெவ்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார்கள். பல்வேறு கருத்துகள் குறித்து வாதித்தனர். அன்றைய கால கட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய கணித அறிஞர்கள் லூகி கிரெமோனா, பெலிக்ஸ் கிளைன், கோட்டா மிட்டாக் லெஃப்லெர், ஆன்ட்ரோ மார்க்கோவ் ஆகியோர் இப்பேரவையில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவார்கள்.[2]

வழங்கப்படும் பரிசுகள்

தொகு

இப்பேரவையின் போது சிறந்த கணித அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று விதமான சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவை:
ஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medals) நெவன் லின்ன பரிசு (Nevanlinna Prize) கௌசுப் பரிசு (Gauss Prize)

நிகழ்வுகள்

தொகு

ஒவ்வொரு பேரவையின் போதும், பேரவைக்கான நிகழ்ச்சி நிரல்கள் வெளியிடப்பட்டு, கணிதத்தில் பல்வேறு தலைப்புகளிலும், பொது விருப்பத்திற்குரிய தலைப்புகளிலும் ஆய்வுரைகள் அளிக்கப்படுகின்றன. சிறந்த கணித அறிஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பேரவை நடைபெற்ற ஆண்டுகள்-நாடுகள்- இடங்களின் பட்டியல்

தொகு
Year City Country
2014 சியோல்   தென்கொரியா
2010 ஐதராபாத்து   இந்தியா
2006 மாட்ரிட்   ஸ்பெயின்
2002 பெய்ஜிங்   சீனா
1998 பெர்லின்   ஜெர்மனி
1994 சூரிச்   சுவிட்சர்லாந்து
1990 கியோட்டோ   ஜப்பான்
1986 பெர்க்லீ   அமெரிக்க ஐக்கிய நாடுகள்
1982 (met during 1983) வார்சா   போலந்து
1978 ஹெல்சிங்க்கி   பின்லாந்து
1974 வான்கூவர்   கனடா
1970 நைஸ்   பிரான்சு
1966 மாஸ்கோ   சோவியத் யூனியன்
1962 ஸ்டாக்ஹோம்   ஸ்வீடன்
1958 எடின்பரோ   பிரித்தானியா
1954 ஆம்ஸ்டர்டாம்   நெதர்லாந்து
1950 கேம்பிரிஜ்   அமெரிக்க ஐக்கிய நாடுகள்
1936 ஓஸ்லோ   நார்வே
1932 சூரிச்   சுவிட்சர்லாந்து
1928 போலோக்னா   இத்தாலி
1924 டொரான்டோ   கனடா
1920 ஸ்ட்ராஸ்பர்க்   பிரான்சு
1912 கேம்ப்ரிட்ஜ்   பிரித்தானியா
1908 ரோம்   இத்தாலி
1904 ஐடல்பர்கு   செருமானிய ராச்சியம்
1900 பாரிசு   பிரான்சு
1897 சூரிச்   சுவிட்சர்லாந்து

உசாத்துணை

தொகு

முனைவர் கே. சீனிவாசராவ் எழுதிய கட்டுரை, அறிவியல் ஒளி, ஆகத்து 2010 இதழ்

வெளியிணைப்புகள்

தொகு
  1. THE INTERNATIONAL MATHEMATICAL UNION AND THE ICM CONGRESSES. பரணிடப்பட்டது 2021-02-23 at the வந்தவழி இயந்திரம் www.icm2006.org. Accessed December 23, 2009.
  2. 2.0 2.1 A. John Coleman. "Mathematics without borders": a book review. CMS Notes, vol 31, no. 3, April 1999, pp. 3-5