வரைகலை (graphics) குறித்த ஒரு மேற்பரப்பில் ஆக்கப்படும் விழிப்புலன்சார் காட்சியமைப்பு ஆகும். இங்கு மேற்பரப்பாக காகிதம், சுவர், துணி, கணினித்திரை என பலவேறுபட்ட பரப்புக்கள் கொள்ளப்படலாம். ஒளிப்படங்கள், ஓவியங்கள், கோட்டுஓவியங்கள், வரைபுகள், வரைபடங்கள், கேத்திரகணித உருவமைப்புக்கள், உலகப்படங்கள், பொறியியல் வரைபுகள், மற்றும் பல்வேறுபட்ட உருவங்கள் வரைகலைக்கான உதாரணமாக அமைகின்றன.[1][2]

இன்றைய உலகில் வரைகலையானது எங்கும் பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்த விடயம் ஒன்றை தெளிவாக விளக்குவதற்கும். திறன்வாய்ந்த தொடர்பாடலுக்கும் உதவுகின்றது. ஒவ்வொரு துறையிலும் தனியே எழுத்துக்களினூடான விளக்கத்தை தவிர்த்து குறுகிய இடத்தில் அதிக விளக்கத்தை கொடுப்பதறகு வரைகலைகள் பயன்படுத்தப்படுகின்றன. வரைகலைகள் எழுத்துக்கள், வரைபடங்கள், ஒளிப்படங்கள் , வண்ணங்கள் என்பவற்றின் தொகுப்பாக உருவாக்கப்படுகின்றன. வரைகலைகளை ஆக்கும் கலைஞர் வரைகலைஞர் ஆவார். இவர் மேற்குறித்த மூலங்களை ஆக்கி ஒழுங்குமுறையில் இணைத்து கருத்து வெளிப்பாட்டை உருவாக்குகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Appel, Arthur (1968). "Some techniques for shading machine renderings of solids". Proceedings of the April 30--May 2, 1968, spring joint computer conference on - AFIPS '68 (Spring). p. 37. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1145/1468075.1468082. S2CID 207171023.
  2. Heller, Steven and Chwast, Seymour (2011). Graphic Style: From Victorian to New Century. Abrams.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைகலை&oldid=4102799" இலிருந்து மீள்விக்கப்பட்டது