ஜெயப்பிரதா
ஜெயப்பிரதா நகதா (Jaya Prada Nahata; தெலுங்கு: జయప్రద నహతా, பிறப்பு: லலிதா இராணி ராவ்; 3 ஏப்ரல் 1962) என்பவர் ஓர் இந்திய நடிகையும், அரசியல்வாதியும் ஆவார், இவர் 70களின் பிற்பகுதிகளிலும், 80-90களின் முற்பகுதிகளிலும் தெலுங்குத் திரைப்படத் துறையில் முதன்மையாகவும், தமிழ், இந்தி திரைத்துறைகளில் பங்காற்றியதற்காக அறியப்படுகிறார்.[8] ஜெயப்பிரதா தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம், பெங்காலி, மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்ததால், தனது திரைத் தொழில் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் திரையுலகத்தை விட்டு விலகினார். இவர் 2004 முதல் 2014 வரை உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.
ஜெயப்பிரதா நகதா | |
---|---|
2019 இல் ஜெயப்பிரதா | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 13 மே 2004[1] – 16 மே 2014[2][3] | |
முன்னையவர் | நூர் பானோ |
பின்னவர் | நேபால் சிங் |
தொகுதி | ராம்பூர் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 10 ஏப்ரல் 1996 – 9 ஏப்ரல் 2002 | |
முன்னையவர் | ஆர். கே. தவன் |
பின்னவர் | நந்தி எல்லையா |
தொகுதி | ஆந்திரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Lalita Rani[4] 3 ஏப்ரல் 1962[5] ராஜமன்றி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2019–தற்போது)[6] |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி (2004 வரை) சமாஜ்வாதி கட்சி (2004–2010) இராஷ்டிரிய லோக் தளம் (2014–2019) [7] |
துணைவர் | ஸ்ரீகாந்த் நகதா (தி. 1987) |
பிள்ளைகள் | 1(தத்தெடுத்தது) |
வேலை | நடிகை, அரசியல்வாதி |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஜெயப்பிரதா லலிதா இராணி ராவ் என்ற இயற்பெயரில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இராஜமன்றியில் தெலுங்கு மொழிப் பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராவ், தெலுங்குத் திரைப்பட நிதியாளராக இருந்தார். இவரது தாயார் நீலாவாணி ஒரு வீட்டு வேலை செய்பவர். இராஜமன்றியில் உள்ள தெலுங்கு வழிக்கல்வி பள்ளியில் பயின்றார், சிறு வயதிலேயே நடனம் மற்றும் இசை வகுப்புகளிலும் சேர்ந்தார்.
திரை வாழ்க்கை
தொகுஜெயப்பிரதா பதின்ம வயதில் இருந்தபோது, தனது பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடினார். பார்வையாளர்களில் இருந்த ஒரு திரைப்பட இயக்குநர் பூமி கோசம் (1974) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் மூன்று நிமிட நடனத்தை ஜெயப்பிரதா வழங்கினார். இவர் திரைப்படத்தில் தோன்றுவதற்கு தயங்கினார், ஆனால் இவளுடைய குடும்பம் இவரை ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தியது. படத்தில் நடித்ததற்காக வெறும் 10 ரூபாய் மட்டுமே சம்பளம், ஆனால் அந்த மூன்று நிமிட நடனம் தெலுங்குத் திரையுலகின் முக்கிய பிரமுகர்களிடம் காட்டப்பட்டது. பெரிய திரைப்பட தயாரிப்பாளர்கள் இவருக்கு தரமான படங்களில் நடிக்க வாய்ப்பளித்தனர், இவர் அவற்றை ஏற்றுக்கொண்டார்.
1976ல் பெரிய வெற்றிப் படங்களின் மூலம் மிகப்பெரிய நட்சத்திரமானார். இயக்குநர் கைலாசம் பாலசந்தர் இயக்கிய அந்துலேனி கதா திரைப்படத்தில் நாடகத் திறமையை வெளிப்படுத்தினார்; கே. விசுவநாத் இயக்கிய சிரி சிரி முவ்வா (1976) என்ற வண்ணத் திரைப்படத்தில் இவர் சிறந்த நடனத் திறன் கொண்ட ஊமைப் பெண்ணாக நடித்தார்; சீதா கல்யாணம் (1976) என்ற பெரிய நிதியை கொண்ட புராண திரைப்படத்தில் சீதையாக நடித்தார்.
1977 இல், அடவி ராமுடு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார், இது நுழைவு சீட்டு விற்பனையக சாதனைகளை முறியடித்தது.[9] ஜெயப்பிரதா மற்றும் இணை நடிகர் என். டி. இராமராவ் பாடிய "ஆரேசுகோபாய் பரேசுகுன்னானு" பாடல் படு வெற்றி அடைந்தது. விஜய் ஆனந்து தயாரித்த சனாதி அப்பன்னா திரைப்படத்தில் ராஜ்குமாருடன் இணைந்து விஜய் ஆனந்து நடிக்க வைத்து கன்னட திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். 1983 இல் கவிரத்ன காளிதாசா, 2000 இல் சப்தவேதி போன்ற வெற்றி திரைப்படங்களில் ராஜ்குமாருடன் நடித்தார்.
1981 ஆம் ஆண்டில், 47 நாட்கள் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார், இதில் விமர்சனம் ரீதியாக பாராட்டப்பட்டார். அதே நேரத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் கைலாசம் பாலச்சந்தரின் 47 ரோஜுலு என்ற தெலுங்குத் திரைப்படத்தை தயாரித்தார், தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்தார். இவர் இந்தி மொழியை கற்ற பின்னர், இயக்குநர் கே. விசுவநாத் இந்தி படங்களில் நடிக்க மீண்டும் வைத்தார், காம்ச்சோர் என்ற இந்தி திரைப்படத்தில் இவர் முதன்முறையாக இந்தியை சரளமாக பேசினார்.[10] கமல்ஹாசன் நடித்த சாகர சங்கமம் திரைப்படத்தில் இவரும் நடித்தார், இது இவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது, 1983 இல் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்றது. இவர் தொடர்ந்து இந்தி படங்களில் பணியாற்ற முடிந்தது, இரண்டு பிலிம்பேர் பரிந்துரைகளைப் பெற்றார்.
ஜெயப்பிரதா அமிதாப் பச்சன் மற்றும் ஜீதேந்திரா ஆகியோருடன் மட்டும் வெற்றிக் குழுவை அமைக்கவில்லை, இவரது உடனடி திரைப் போட்டியாளரான ஸ்ரீதேவியுடனும் ஒரு வெற்றிக் குழுவை உருவாக்கினார், ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்துள்ளார், அவர்களது வெற்றி திரைப்படங்கள் தேவதா என்ற தெலுங்குத் திரைப்படம், தேவதா திரைப்படம் தோஃபா (1984) என்ற பெயரில் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. 1985 ஆம் ஆண்டில், மம்முட்டி, சாலினி, அம்பிகா நடிப்பில் ஜோசி இயக்கிய இநியும் கத துடரும் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார்.
இயக்குநர் சத்யஜித் ராய் உலகின் மிக அழகான பெண்களில் ஒருவர் என்று ஜெயப்பிரதாவை வர்ணித்தார்.[11] இவர் வங்காள படங்களில் நடித்திருந்தாலும், ராய் படத்திற்கென்று இதுவரை பணியாற்றவில்லை. (ஒரு படத்திற்காக ராய் தன்னை மனதில் வைத்திருந்ததாக ஜெயப்பிரதா கூறினார், ஆனால் அவரது நோய் மற்றும் அடுத்தடுத்த மரணம் அவர்களை ஒத்துழைக்கத் தடுத்தது).[12]
ஜெயப்பிரதா 1990களின் முற்பகுதியில் முக்கியமாக அமிதாப் மற்றும் ஜீதேந்திராவுக்கு சோடியாக கதாநாயகியாக தொடர்ந்து நடித்தார். சில குறிப்பிடத்தக்க கன்னட திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 1994 முதல், இவர் திரைப்படப் பணிகளைக் குறைத்துக்கொண்டார், சக நடிகர் என். டி. ராமராவ் அழைப்பின் பேரில் அரசியல் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு காட்டினார்.
2000 ஆம் ஆண்டில், சிபி மலையில் இயக்கி மோகன்லால் நடித்த தேவதூதன் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து மிகவும் நல்ல பிரபலமான விமர்சனங்களைப் பெற்றது ஆனால் திரைப்பட நுழைவு சீட்டு விற்பனையகத்தில் தோல்வியடைந்தது. இது ஹோம் மீடியாவில் வெளியானபோதும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோதும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றது. இவர் கடைசியாக ராஜ்குமாருடன் சப்தவேதி படத்தில் நடித்தார். 2002 ஆம் ஆண்டில், ஆதார் திரைப்படத்தில் விருந்தினராக நடித்ததன் மூலம் மராத்தி திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்தார்.[13] இதுவரை எட்டு மொழிகளில் நடித்துள்ள இவர் 30 வருட திரையுலக வாழ்க்கையில் 300 படங்களை முடித்துள்ளார். 2004 இல், நடிகர் குஞ்சாக்கோ போபனின் அம்மாவாக ஈ சிநேகதீரது என்ற மலையாளப் படத்தில் நடித்தார்.
இவருக்கு சென்னையில் சொந்தமாக ஜெயப்பிரதா திரையரங்கு என்ற பெயரில் ஒரு திரையரங்கு உள்ளது.[14]
2011 இல், மோகன்லால், அனுபம் கெர் ஆகியோருடன் இணைந்து பிரணாயம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் இவர் "கிரேசு" என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், இது விமர்சன ரீதியான பாராட்டுகளையும் பல விருதுகளையும் வென்றது.[15] 2012 இல், கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா என்ற கன்னடத் திரைப்படத்தில் துணிச்சலான கிட்டூர் சென்னம்மாவின் வரலாற்றுப் பாத்திரத்தை ஏற்று நடித்தார், இது திரைப்பட நுழைவு சீட்டு விற்பனையகத்தில் 100 நாட்கள் வரை ஓடியது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு22 பிப்ரவரி 1986 இல், இவர் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகாட்டாவை மணந்தார், ஸ்ரீகாந்த் ஏற்கனவே சந்திரா என்ற பெண்ணை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றிருந்தார்.[16] இந்த திருமணம் பல சர்ச்சைகளை கிளப்பியது, குறிப்பாக ஸ்ரீகாந்த் தனது மனைவியை விவாகரத்து செய்யாததால், ஜெயப்பிரதாவை மணந்த பிறகு முதல் மனைவியுடன் ஒரு குழந்தை இருந்தது.[16]
அரசியல் வாழ்க்கை
தொகு1994 ஆம் ஆண்டு அதன் நிறுவனர் என். டி. ராமராவ் அழைப்பின் பேரில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார், கட்சியில் விரைவாக உயர்ந்தார். அந்த நேரத்தில் இவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஊகங்கள் இருந்தன, ஆனால் ராமராவ் இவருக்கு ஒரு சீட் வழங்கிய போதிலும், தனது தேர்தலில் அறிமுகமாகாமல் இருக்க விரும்பினார்.
இவர் 1994 இல் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார் [17] 1994 இல் ராவ் முதலமைச்சராக பதவியேற்றதும், ராவ் தனது மருமகன் நாரா சந்திரபாபு நாயுடுவை வருவாய்த்துறை அமைச்சராக நியமித்தார். ஆட்சி அமைத்த உடனேயே, சந்திரபாபு நாயுடு, பெரும்பான்மையான தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாயுடுவை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கச் செய்து, நாயுடு தனது மாமனாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் நாயுடு பக்கம் சென்றதால், தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு அணிக்கு மாறியது. இந்த காலகட்டத்தில், ஜெயப்பிரதாவும் கட்சியின் சந்திரபாபு நாயுடு அணியில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவைக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார். ஜெயப்பிரதா தெலுங்கு தேசம் மகளிர் அணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
கட்சித் தலைவர் நா. சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். இவர் 2004 பொதுத் தேர்தலின் போது உத்திர பிரதேசத்தில் உள்ள ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 85000 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, இவர் ராம்பூரில் உள்ள ஸ்வார் பகுதியில் பெண்களுக்கு பொட்டுக்கள் விநியோகித்ததால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தேர்தல் ஆணையத்தால் அறிக்கை அனுப்பப்பட்டது.[18] 11 மே 2009 அன்று, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான் தனது நிர்வாணப் படங்களை விநியோகிப்பதாக ஜெயப்பிரதா குற்றம் சாட்டினார்.[19] 30,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயப்பிரதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[சான்று தேவை]
இவர் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர் சிங்கிற்கு வெளிப்படையான ஆதரவை வெளிப்படுத்திய பிறகு, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கட்சியின் மதச்சார்பற்ற வெளிப்பாடை சேதப்படுத்தியதற்காகவும் ஜெயப்பிரதா 2 பிப்ரவரி 2010 அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[20] அமர் சிங், ஜெயப்பிரதாவுடன் இணைந்து தனது சொந்த அரசியல் கட்சியை 2011 இல் தொடங்கினார், 2012 சட்டமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 இடங்களில் 360 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால், இத்தேர்தலில் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பின்னர் இவர், அமர் சிங்குடன் 10 மார்ச் 2014 அன்று இராஷ்டிரிய லோக் தளத்தில் சேர்ந்தனர்,[21] அதன் பிறகு 2014 பொதுத் தேர்தலில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட ஜெயப்பிரதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது,[22][23] அத்தேர்தலில் தேர்தலில் தோல்வியடைந்தார்.[24][25]
26 மார்ச் 2019 அன்று தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[6]
வரவேற்பு
தொகுஜெயப்பிரதா இந்திய திரைப்படத்துறையில் ஒரு சிறந்த அழகான நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[26] 2022 இல், அவர் அவுட்லுக் இந்தியாவின் 75 சிறந்த பாலிவுட் நடிகைகள்" பட்டியலில் இடம்பிடித்தார்.[27] 1980களிலும் 1990களிலும் இந்தி, தெலுங்கு படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார். 1984 முதல் 1991 வரை பாக்சு ஆபிசு இந்தியாவின் சிறந்த நடிகைகள்" பட்டியலில் இடம்பிடித்தார்.[28]
நடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி |
---|---|---|---|
1974 | பூமி கோசம் | செல்லி சந்திரம்மா | தெலுங்கு |
1975 | நாகு சுவதந்த்ரம் வச்சிண்டி | ||
1976 | மன்மத லீலை | கண்ணகி | தமிழ் |
அந்துலேனி கதா | சரிதா | தெலுங்கு | |
ஸ்ரீ ராஜேசுவரி விலாசு காபி கிளப் | ராஜேசுவரி | ||
சிரி சிரி முவ்வா | ஐமா | ||
சீதா கல்யாணம் | சீதை | ||
மாங்கல்யானிகி மறுமுடி | |||
1977 | பத்ரகாளி | காயத்திரி | |
அடவி ராமுடு | பத்மா | ||
சீதா ராம வனவாசம் | சீதா | ||
குருக்ஷேத்திரம் | உத்தரன் | ||
அந்தமே ஆனந்தம் | பத்மா | ||
ஏனாதி பந்தம் ஏனாதிடோ | |||
சாணக்கிய சந்திரகுப்தா | ஆசா | ||
யமகோலா | சாவித்திரி | ||
சனாதி அப்பண்ணா | பாசந்தி | கன்னடம் | |
ஈதாரம் மனிசி | தெலுங்கு | ||
ஜீவிதா நௌகா | |||
தொங்கலக்கு டொங்கா | சுனிதா | ||
மா இத்தாரி கதா | சீதா | ||
சக்ரதாரி | மஞ்சு | ||
1978 | அதானி கண்டே கனுடு | ||
ஏஜென்ட் கோபி | |||
தொங்கலா வேட | |||
ராம கிருஷ்ணுலு | ஜெயா | ||
தேவதாசு மல்லி புத்தாடு | சாந்தி | ||
மேலு கொழுப்பு | சுசீலா | ||
ராஜபுத்திர ரகசியம் | பிரியதர்சினி | ||
ராதாகிருஷ்ணா | ராதா | ||
1979 | சர்கம் | ஏமா பிரதான் | இந்தி |
உலியா ஆலினா மேவு | பூவி | கன்னடம் | |
நினைத்தாலே இனிக்கும் | சோனா | தமிழ் | |
அந்தமைனா அனுபவம் | சோனா | தெலுங்கு | |
லோக் பார்லோக் | சாவித்திரி | தமிழ் | |
ரங்கூன் ரவுடி | இந்து/ரஜனி | தெலுங்கு | |
தொங்கலக்கு சவால்[29] | ரேகா | ||
கொட்ட அல்லுடு | |||
ஸ்ரீ திருப்பதி வெங்கடேசுவர கல்யாணம் | பத்மாவதி தேவி | ||
மண்டே குண்டேலோ | |||
1980 | சால்லென்ஞ்ச்சு ராமுடு | அருணா | |
சூப்பர்மேன் | ஜெயா | ||
புச்சி பாபு | புச்சி | ||
பந்தோடு குண்டம்மா | |||
தக்கார் | கங்கா | இந்தி | |
அல்லரி பாவா | தெலுங்கு | ||
சீதா ராமுலு | சீதா | ||
சர்க்கசு ராமுடு | |||
சந்திப்ரியா | சந்திபிரியா | ||
ராகிலே இருதயலு[30] | சீதாலு | ||
செசினா பாசலு | |||
தர்ம சக்கரம் | |||
சன்னாயி அப்பண்ணா | |||
1981 | ஸ்ரீவாரி முச்சட்லு | ராதா | |
டாக்ஸி டிரைவர் | ராணி/ஜெயா | ||
ரகசிய கூடாச்சாரி | |||
47 நாட்கள் | வைசாலி | தமிழ் | |
47 ரோஜுலு | வைசாலி | தெலுங்கு | |
ஊருக்கி மொனகாடு | ரேகா | ||
ஜடகாடு | |||
ராகிலே ஜ்வாலா | வாணி | ||
அக்னி பூலு | ருக்மணி | ||
பிரேமா மந்திரம் | மதுர ரஞ்சனி | ||
கிரிஜா கல்யாணம் | கிரிஜா | ||
தீபாராதனா | |||
1982 | மதுர சுவப்னம் | ||
காம்ச்சோர் | கீதா சங்கவி | இந்தி | |
பாவ்ரி | காயத்ரி | இந்தி | |
தளி கொடுக்குள அனுபந்தம் | தெலுங்கு | ||
பகாபட்டின சிம்மம் | |||
மேகசந்தேசம் | பத்மா | ||
ஜகன்னாத ரதசக்கரலு[31] | ராதா | ||
தில்-இ-நாடன் | ஆசா | இந்தி | |
சுவயம்வரம் | தெலுங்கு | ||
நீவுறு காப்பின நிப்பு | ரேகா | ||
தேவதா | ஜானகி | ||
கிருஷ்ணார்ஜுனுலு | |||
பிரளய ருத்ருது[32] | ஜெயா | ||
1983 | சாகர சங்கமம் | மாதாவி | |
நிஜம் செபிதே நேரமா | ராஜனி | ||
கயாமத் | கீதா | இந்தி | |
மாவாலி | நிசா வர்மா | இந்தி | |
முண்டடுகு | பத்மா | தெலுங்கு | |
கவிரத்ன காளிதாசா | வித்யாதரே மற்றும் சகுந்தலா | கன்னடம் | |
அடவி சிம்காலு | லலிதா | தெலுங்கு | |
புலி பெப்புலி | சீதா | ||
சிறிபுரம் மொனகாடு | |||
அமரஜீவி | லலிதா | ||
மெயின் ஆவாரா ஹூன் | பேலா | இந்தி | |
பிரஜ ராஜ்யம் | தெலுங்கு | ||
1984 | சர்தார்[33] | விஜயா | |
தோஃபா | ஜான்கி | இந்தி | |
தாண்டவ கிருஷ்ணுடு | வாணி | தெலுங்கு | |
தர்ம் அவுர் கானூன் | சாந்தா | இந்தி | |
யுத்தம் | தெலுங்கு | ||
மேரா ஃபைசுலா | நிஷா தவான் | இந்தி | |
சராபி | மீனா | ||
மக்ஸாத் | ராணி | ||
நய கதம் | பிஜிலீ | ||
ஹைஸியாத் | சீதா | ||
ஆவாசு | அனு | ||
பங்காரு கபுரம்[34] | ஜெயா | தெலுங்கு | |
சம்பூர்ண பிரேமயானம் | பிரேமா | ||
சங்கீதா சாம்ராட் | ராதா | ||
நாயக்குலகு சவால் | சைதன்யா | ||
1985 | பாடால் பைரவி | ராஜ்குமாரி இந்துமதி சிங் | இந்தி |
மகா சங்கராமம் | தெலுங்கு | ||
மகா மனிசி | |||
சூர்ய சந்திரா | பூஜை | ||
சஞ்சோக் | யசோதா மற்றும் ஆசா | இந்தி | |
ஹோசியார் | ராதா | ||
ஜபர்தசுத் | மாலா சைகல் | ||
இனியும் கதா துதாரும் | நிம்மி | மலையாளம் | |
ஹகீகத் | பாரதி | இந்தி | |
சூர் சங்கம் | |||
மேரா சாத்தி | ராகினி | ||
1986 | கிருஷ்ணா கரடி | தெலுங்கு | |
தந்திர பாபராயுடு | ஜோதிர்மாய் | ||
சிங்காசன் | அலக்நந்தா தேவி | இந்தி | |
சிம்ஹாசனம் | அலக்நந்தா தேவி | தெலுங்கு | |
வேட்டா | |||
ஆக்ரீ ராசுதா | மேரி டி'கோசுடா | இந்தி | |
சுவராக் சே சுந்தர் | லட்சுமி சௌத்ரி | ||
முத்தாத் | பாரதி | ||
பியார் கே தோ பால் | கீதா | ||
ஐசா பியார் கஹான் | சரிதா | ||
உக்ர நரசிம்மம் | ஜோதி | தெலுங்கு | |
1987 | அவுலாத் | யசோதா | இந்தி |
மஜால் | சந்தியா | ||
தேனே மனசுலு | ருக்மணி | தெலுங்கு | |
விசுவநாத நாயக்குடு | கலாவதி | ||
இன்சாஃப் கவுன் கரேகா | சிதாரா தேவி | இந்தி | |
சிந்தூர் | லட்சுமி | ||
1988 | மர்டன் வாலி பாத் | ஆசா | |
சம்சாரம் | பத்மாவதி | தெலுங்கு | |
கங்கா தேரே தேஷ் மே | டாக்டர். ஆசா | இந்தி | |
கங்கா ஜமுனா சரசுவதி | சரசுவதி | ||
கர் கர் கி கஹானி | சீதா | ||
கலியுக கர்ணுடு | லட்சுமி | தெலுங்கு | |
1989 | ஜாதுகர் | மீனா | இந்தி |
மெயின் தேரா துஷ்மன் | ஜெயா | ||
சௌதென் கி பேட்டி | ருக்மணி | ||
எலான்-இ-ஜங் | ரீமா | ||
ஆத்தா மெச்சினா அல்லுடு | ஜெயா | தெலுங்கு | |
கானூன் கி ஆவாசு | ஜாங்கி ராய் | இந்தி | |
பராய கர் | |||
ஹம் பீ இன்சான் ஹைன் | ராதா | ||
கரானா | நைனா | ||
சுமங்கலி | தெலுங்கு | ||
1990 | மஜ்பூர் | சாரதா | இந்தி |
ஜக்மி ஜமீன் | ராதா | ||
ஆஜ் கா அர்ஜுன் | கௌரி | ||
தானேதார் | சுதா | ||
ஏகலவ்யா | கன்னடம் | ||
நியாய் அன்ய் | ராம கண்ணா | இந்தி | |
1991 | இந்திரஜீத் | சாந்தி தேவி | |
வீர்தா | சாலு | ||
பஃரிஷ்தாய் | |||
1992 | மா | மம்தா | |
தியாகி | திருமதி பார்வதி தயாள் | ||
ஆத்ம பந்தனா | சாந்தி | கன்னடம் | |
1993 | இன்சானியத் கே தேவ்தா | இந்தி | |
மணிகண்டன மஹிமே | கமலா | கன்னடம் | |
ஏழை ஜாதி | தமிழ் | ||
தர்திபுத்ரா | இந்தி | ||
கல்-நாமேற்கோள்கள்ய ரவி கபூர் | |||
1994 | இன்சானியத் | ||
ஜீவிதா கைதி | பார்கவி | தெலுங்கு | |
சௌராஹா | பூஜை | இந்தி | |
1995 | ஹிமபதா | நயனா | கன்னடம் |
பாப்பி தேவதா | ரோசி | இந்தி | |
1996 | பெல்லால ராஜ்யம் | பார்வதி | தெலுங்கு |
1997 | ஜீவன் யுத் | ராணி | இந்தி |
பிரேமா கீதே | ராதா | கன்னடம் | |
லாவ் குசு | சீதா | இந்தி | |
1998 | ஆமி சேய் மேயே | வங்காளம் | |
1999 | ஹப்பா | விஷ்ணுவின் மனைவி | கன்னடம் |
2000 | தேவதூதன் | ஏஞ்சலினா இக்னேசியசு / அலீனா | மலையாளம் |
ஆதார் | மராத்தியம் | ||
சப்தவேதி | வத்சலா | கன்னடம் | |
2002 | சந்திரவம்சம் | தர்ம ராஜுவின் மனைவி | தெலுங்கு |
2003 | ஸ்ரீ ரேணுகாதேவி | ஜோகம்மா | கன்னடம் |
2004 | காக்கி | ஜெய ஸ்ரீவஸ்தவ் | இந்தி |
ஈ சிநேகதீரது | லட்சுமி | மலையாளம் | |
2006 | ததாஸ்து | டாக்டர் நிதா | இந்தி |
2007 | ஈ பந்தனா | நந்தினி | கன்னடம் |
மகாரதி | சாமுண்டேசுவரி | தெலுங்கு | |
தேகா | சந்தியா ஜோசி/சந்தியா தேசாய் | இந்தி | |
2008 | தசாவதாரம் | ரஞ்சிதா சிங் | தமிழ் |
2009 | சேஷ் சங்கத் | வங்காளம் | |
ராஜ் தி சோமேன் | கன்னடம் | ||
2010 | தி டிசயர் | கௌத்மியின் தாய் | இந்தி-ஆங்கிலம்
சீன மொழி |
2011 | பிராணாயம் | மலையாளம் | |
2012 | கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா | கிட்டூர் சென்னம்மா | கன்னடம் |
2013 | ரஜ்ஜோ | ஜாங்கி தேவி | இந்தி |
2018 | கினார் | இந்திரா | மலையாளம் |
கேணி | தமிழ் | ||
சரபா | பார்வதம்மா | தெலுங்கு | |
2019 | சுவர்ண சுந்தரி | தெலுங்கு | |
2023 | இராமச்சந்திர பாஸ் அண்ட் கோ | சல்மா ராம் | மலையாளம் |
விருதுகள்
தொகு- சிறந்த நடிகைக்கான நந்தி விருது – அந்துலேனி கதா (1976)
- சிறப்பு விருது – சிரி சிரி முவ்வா & அந்துலேனி கதா (1976) [35]
- சிறந்த நடிகை - தெலுங்கு – சாகர சங்கமம் (1983)
- வாழ்நாள் சாதனையாளர் விருது – தெற்கு (2007) [36]
ஆண்டு | திரைப்படம் | வகை | மொழி | விளைவு |
---|---|---|---|---|
1979 | சர்கம்[37] | சிறந்த நடிகை | இந்தி | பரிந்துரை |
1984 | சராபி | பரிந்துரை | ||
1985 | சஞ்சோக் | பரிந்துரை |
தென்னிந்திய பிலிம்பேர் விருது
தொகுஆண்டு | திரைப்படம்/பணி | வகை | மொழி | விளைவு |
---|---|---|---|---|
1976 | அந்துலேனி கதா | சிறந்த நடிகை | தெலுங்கு | பரிந்துரை |
சிரி சிரி முவ்வா | பரிந்துரை | |||
அந்துலேனி கதா, சிரி சிரி முவ்வா | சிறப்பு விருது[35] | வெற்றி | ||
1979 | நினைத்தாலே இனிக்கும் | சிறந்த நடிகை | தமிழ் | பரிந்துரை |
1980 | சந்திபிரியா | சிறந்த நடிகை | தெலுங்கு | பரிந்துரை |
1981 | 47 ரோஜுலு | பரிந்துரை | ||
1982 | மேகசந்தேசம் | பரிந்துரை | ||
1983 | சாகர சங்கமம் | வெற்றி | ||
1984 | சம்பூர்ண பிரேமாயணம் | பரிந்துரை | ||
2000 | தேவதூதன் | சிறந்த நடிகை (மலையாளம்) | மலையாளம் | பரிந்துரை |
2007 | தெலுங்குத் திரைப்படத் துறையில் ஒட்டுமொத்த பங்களிப்பு | வாழ்நாள் சாதனையாளர் விருது | தெலுங்கு | வெற்றி |
2011 | பிராணயம் | சிறந்த நடிகை (மலையாளம்) | தெலுங்கு | பரிந்துரை |
2012 | கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா | சிறந்த துணை நடிகை (கன்னடம்) | கன்னடம் | பரிந்துரை |
- மற்ற விருதுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statistical Report On Gen Elections, 2004 To The 14th Lok Sabha" (PDF). Election Commission Of India. 13 May 2004. Archived (PDF) from the original on 13 July 2018. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
- ↑ "General Election To Lok Sabha Trends & Result 2014, Uttar Pradesh – Bijnor". Election Commission Of India. 16 May 2014. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 16 May 2014.
- ↑ "General Election To Lok Sabha Trends & Result 2014, Uttar Pradesh – Rampur". Election Commission Of India. 16 May 2014. Archived from the original on 28 June 2014. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
- ↑ "సినిమాల కోసం పేరు మార్చుకున్న స్టార్ హీరోయిన్లు". Sakshi (in தெலுங்கு). 30 September 2020. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
- ↑ "Detailed Profile – Smt. P. Jaya Prada Nahata – Members of Parliament (Lok Sabha) – Who's Who". archive.india.gov.in. Archived from the original on 30 June 2016. பார்க்கப்பட்ட நாள் 29 May 2016.
- ↑ 6.0 6.1 "Jaya Prada, veteran Bollywood actor and Samajwadi Party leader, joins BJP". newsnation.in. 26 March 2019. Archived from the original on 26 March 2019. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
- ↑ "Ajit Singh gives RLD tickets to Amar Singh, Jaya Prada from UP". India Today. 10 March 2014. Archived from the original on 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.
- ↑ [1] பரணிடப்பட்டது 15 ஏப்பிரல் 2019 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Adavi Ramudu: 29 years passed but the magic still remains.
- ↑ Rediff.com: The best of Rakesh Roshan பரணிடப்பட்டது 14 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ – Mahima: Small Is Beautiful Too – Bollywood Hindi Tamil Telugu Indian Music Videos and News பரணிடப்பட்டது 14 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ A woman of today.
- ↑ "Jaya Prada forays into Marathi films" பரணிடப்பட்டது 4 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம், Indiatimes.com, 24 May 2002
- ↑ "Jaya Prada in troubled waters" பரணிடப்பட்டது 6 செப்டெம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம், Idlebrain.com, 4 September 2003
- ↑ . 12 May 2006. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/grace-keeps-pace/article3218123.ece.
- ↑ 16.0 16.1 A dream come true.
- ↑ Rediff On The NeT: Jaya Prada faces her first big test பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Jayaprada issued notice for violating poll code பரணிடப்பட்டது 10 சூலை 2017 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Azam circulating nude posters of mine: Jaya பரணிடப்பட்டது 12 மே 2009 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Front Page : Amar Singh, Jayaprada expelled from SP பரணிடப்பட்டது 20 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "2014 LS polls: Amar Singh, Jaya Prada join Rashtriya Lok Dal". 10 March 2014. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.
- ↑ "Ajit Singh gives RLD tickets to Amar Singh, Jaya Prada from UP". Archived from the original on 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.
- ↑ "RLD gives ticket to Amar Singh, Jaya Prada". 11 March 2014 இம் மூலத்தில் இருந்து 11 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140311195200/http://www.thehindu.com/news/national/other-states/rld-gives-ticket-to-amar-singh-jaya-prada/article5773812.ece.
- ↑ "General Election To Lok Sabha Trends & Result 2014, Uttar Pradesh – Bijnor". Election Commission Of India. 16 May 2014. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 16 May 2014.
- ↑ "Mixed Luck for Film Stars at LS Polls". The New Indian Express. 16 May 2014. Archived from the original on 28 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
- ↑ "Heroines who ruled a million hearts in the '80s and earlier 90s". Indian Express இம் மூலத்தில் இருந்து 28 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160628234730/https://indianexpress.com/photos/entertainment-gallery/heroines-who-ruled-million-hearts-in-the-80s-2881459/lite/.
- ↑ "75 Bollywood Actresses Who Ruled The Silver Screen With Grace, Beauty And Talent". Outlook India. Archived from the original on 16 August 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2022.
- ↑ "Top Actresses". Box Office India. Archived from the original on 4 January 2012. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
- ↑ "Dongalaku Saval (1979)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
- ↑ "Ragile Hrudayalu (1980)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
- ↑ "Jagannatha Radhachakralu 1982 Telugu Movie Cast Crew,Actors,Director, Jagannatha Radhachakralu Producer,Banner,Music Director,Singers & Lyricists". MovieGQ (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
- ↑ "Pralaya Rudrudu (1982)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
- ↑ "Sardar (1984)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 14 April 2023.
- ↑ "Bangaru Kapuram (1984)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2 June 2023.
- ↑ 35.0 35.1 "The Times of India Directory and Year Book Including Who's who". 1979. Archived from the original on 12 October 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
- ↑ Happy Days makes a sweep at Filmfare – Latest News in Telugu Movies பரணிடப்பட்டது 18 ஆகத்து 2008 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ http://www.totaltollywood.com/news/Happy-Days-makes-a-sweep-at-Filmfare_2333.html
- ↑ Nahata, Shrimati Jayaprada.
- ↑ 'You need spirit to survive in politics' பரணிடப்பட்டது 12 அக்டோபர் 2020 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Jaya Prada honoured.
வெளி இணைப்புகள்
தொகு
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜெயப்பிரதா
- பாலிவுட் கங்காமா இணையதளத்தில் ஜெயப்பிரதா