ஆசம் கான்

இந்திய அரசியல்வாதி

ஆசம் கான் (Azam Khan) (பிறப்பு: 14 ஆகஸ்டு 1948), இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத்தலைவர்களில் ஒருவரும், உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக 9 சூன் 1980 முதல் 28 அக்டோபர் 1995 வரை செயல்பட்டவர்.[1][2] இவர் இராம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 9 முறை உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் சமாஜ்வாதி கட்சி ஆண்ட உத்தரப் பிரதேச அரசில் மூத்த அமைச்சராக விளங்கியவர்.

முகமது ஆசம் கான்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்நைபால் சிங்
தொகுதிஇராம்பூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 பிப்ரவரி 2002
முன்னையவர்அப்ரோஸ் அலி கான்
தொகுதிஇராம்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
9 சூன் 1980 – 28 அக்டோபர் 1995
முன்னையவர்மன்சூர் அலி கான்
பின்னவர்அப்ரோஸ் அலி கான்
தொகுதிஇராம்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஆகத்து 1948 (1948-08-14) (அகவை 76)[1]
இராம்பூர், இராம்பூர் மாவட்டம், ஐக்கிய மாகாணம்
தற்போதைய உத்தரப் பிரதேசம்)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி[1]
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா கட்சி
ஜனதா தளம்
லோக் தளம் &
மதச்சார்பற்ற ஜனதா கட்சி
துணைவர்தசீன் பாத்திமா[1]
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்[2]
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலராக இருந்த ஆசம் கான் 17 மே 2009 அன்று பதவியிலிருந்து விலகினார். [3] 2009 மக்களவைத் தேர்தலில் ஆசாம் கான், ஜெயப்பிரதாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஆபாசமாக பேசியதால் சர்ச்சைக்குள் சிக்கினார், மேலும் 30,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயப்பிரதாவிடம் தோற்றார். [4] இதனால் ஆசாம் கான் 24 மே 2009 அன்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.[5] இருப்பினும் சமாஜ்வாதி கட்சி ஆசாம் கானை 4 திசம்பர் 2010-இல் மீண்டும் கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டது.[6] 2019 மக்களவைத் தேர்தலில் ஆசாம் கான் இராம்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சி சார்பாக மக்களைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

பிணக்குகள்

தொகு

மக்களவையில் முத்தலாக் மசோதா மேல் நடைபெற்ற விவாதத்தின் போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் ரமா தேவியைப் பார்த்து ஆசம் கான், ஆபாசச் சொற்களால் பேசியதை கண்டித்த அனைத்து கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள், ஆசாம் கானை, சபையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என குரல் எழுப்பினர்.[8] ஆசாம் கானும் தனது தவறை உணர்ந்து மக்களவையில் நிபந்தனையற்ற மன்னிப்ப்புக் கோரினார். [9] [10]

சட்டமனற உறுப்பினர் பதவி பறிப்பு

தொகு

சமாஜ்வாதி கட்சியின் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஆசம் கான், கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ள ஆசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.[11]

சிறை தண்டனை

தொகு

2019 முதல் ஆசம்கான், அவரது மனைவி மற்றும் மகன் மீது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடைபெற்ற போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில் 18 அக்டோபர் 2023 அன்று 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.[12]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Member Profile". U.P. Legislative Assembly website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/37.pdf. பார்த்த நாள்: 27 July 2019. 
  2. 2.0 2.1 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=1985. பார்த்த நாள்: 27 July 2019. 
  3. "Azam Khan resigns as SP gen secy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Azam-Khan-resigns-as-SP-gen-secy/articleshow/4544405.cms. பார்த்த நாள்: 12 February 2013. 
  4. Bhatt, Virenda Nath (10 May 2009). "Rampuri knives out: Yadav tears into Khan". Express India. http://archive.indianexpress.com/news/rampuri-knives-out-yadav-tears-into-khan/457002/. 
  5. "SP expels Azam Khan for six years", The Hindu. 25 May 2009
  6. "Azam Khan returns to SP". இந்தியன் எக்சுபிரசு. 5 December 2010. http://archive.indianexpress.com/news/azam-khan-returns-to-sp/720565/0. 
  7. https://m.timesofindia.com/city/bareilly/sp-bsp-rld-combine-names-azam-khan-as-candidate-from-rampur/articleshow/68552951.cms
  8. ANI (25 July 2019). "Uproar in Lok Sabha over SP MP Azam Khan's comment on BJP MP Rama Devi(in the chair) , he said 'Aap mujhe itni acchi lagti hain ki mera mann karta hai ki aap ki aankhon mein aankhein dale rahoon'. Ministers ask Khan to apologize" (Tweet).
  9. மன்னிப்பு கேட்டார் எம்.பி. ஆசம் கான்..
  10. "பாஜக பெண் எம்.பி.யை ஆபாசமாக வர்ணித்த சமாஜ்வாடி எம்.பி. பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்". Archived from the original on 2019-07-30. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
  11. எம்.எல்.ஏ. பதவி இழந்தார் அசம் கான் - தகுதி நீக்கம் செய்த உ.பி. பேரவை செயலாளர்
  12. Azam Khan, his wife and son given 7-year jail term in 2019 fake birth certificate case
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசம்_கான்&oldid=3812739" இலிருந்து மீள்விக்கப்பட்டது