ஜெயபிரதா

இந்திய நடிகை, அரசியல்வாதி
(ஜெயப்பிரதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜெய பிரதா (தெலுங்கு: జయప్రద) (பிறப்பு ஏப்ரல் 3, 1962) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி.

ஜெயபிரதா
இசை வெளியீட்டில் ஜெயபிரதா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2004
முன்னவர் நூர் பானு
தொகுதி ராம்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 3 ஏப்ரல் 1962 (1962-04-03) (அகவை 61)
அரசியல் கட்சி Rashtriya Lokmanch, உத்தரப்பிரதேசம்.
பணி நடிகை, அரசியல்வாதி
சமயம் இந்து

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஜெய பிரதா, இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் இராஜமுந்திரியில் ஒரு நடுத்தர-வர்க்க குடும்பத்தில் லலிதா ராணியாகப் பிறந்தார். அவருடைய தந்தை கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட பண முதலீட்டாளர். அவருடைய தாய் நீலவாணி ஜெயபிரதாவை இளம் வயதிலேயே இசை மற்றும் நாட்டிய வகுப்புகளில் சேர்த்துவிட்டார்.

தொழில் வாழ்க்கை தொகு

பதினான்கு வயதாக இருக்கும்போது அவர் தன்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தினார். பார்வையாளர்களில் ஒரு திரைப்பட இயக்குனரும் இருந்தார். அவர் ஜெயபிரதாவிற்கு தெலுங்கு திரைப்படமான பூமிகோசம்-இல் மூன்று நிமிட நடன ஆட்டத்தை வழங்கினார். அவருக்குத் தயக்கமாகவே இருந்தது ஆனால் அவருடைய குடும்பம் அதை ஏற்றுக்கொள்ளுமாறு உற்சாகப்படுத்தியது. அந்தத் திரைப்படத்திற்கு அவருக்கு வெறும் 10 ரூபாய்கள் வழங்கப்பட்டது ஆனாலும் தெலுங்கு திரைப்படத் துறையின் மிகப் பிரபலங்களுக்கு அந்தத் திரைப்படத்தின் மூன்று நிமிட காட்சிகள் போட்டுக்காட்டப்பட்டதும் இன்னும் அதிகமான வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார், வாய்ப்புகளும் குவியத்தொடங்கியது. மிகப்பெரும் இயக்குனர்கள் அவருக்குத் தரமான திரைப்படங்களில் நட்சத்திர கதாபாத்திரங்களை வழங்கினார்கள் அவரும் அவற்றை ஏற்றுக்கொண்டார். பெருவெற்றிகளுடன் அவர் 1976 ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமானார்: கே. பாலசந்தரின் அந்துலேனி கதா அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது; கே.விஸ்வநாத்தின் சிரி சிரி மூவாவில் அவர் ஒரு ஊமையான ஆனால் அருமையான நடனத் திறன் கொண்டவராக நடித்திருந்தார்; மற்றும் பெரிய முதலீட்டு புராண திரைப்படமான சீதா கல்யாணத்தில் அவர் ஏற்று நடித்த சீதை கதாபாத்திரம் அவருடைய பல்திறப் புலமையை உறுதிப்படுத்தியது. 1977 ஆம் ஆண்டில் அவர் அடவி இராமுடுவில் நடித்தார், இது அனைத்து பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையும் முறியடித்தது மேலும் அவருடைய நட்சத்திர நிலையை அது நிரந்தரமாக உறுதிப்படுத்தியது.[1] அவர் மீதும் அவருடைய உடன் நட்சத்திரமான என்.டி.ராமா ராவ் மீதும் படம்பிடிக்கப்பட்ட பாடல் "ஆரேசுக்கோபாயி பாரெசுக்குன்னானு" மிகப் பிரபலமாகியது[2]. அவர் தமிழ், மலையாள, கன்னடத் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அவை எல்லாவற்றிலும் வெற்றிப் படங்களைக் கொண்டிருந்தார்.

திரைப்பட தொழில் வாழ்க்கை தொகு

கே. விஸ்வநாத், சிரி சிரி மூவா (1976) திரைப்படத்தை இந்தி திரைப்படமாக சர்கம் என மீண்டும் எடுத்து, 1979 ஆம் ஆண்டில் ஜெயபிரதாவை பாலிவுட்டில் அறிமுகம் செய்துவைத்தார். அந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து மிகக் குறுகிய காலத்தில் அங்கேயும் ஒரு நட்சத்திரமானார். அவர் சிறந்த நடிகைக்கான முதல் ஃபிலிம்ஃபேர் நியமனத்தைப் பெற்றபோதிலும் அவர் இந்தி பேச முடியாத காரணத்தால் அவருடைய வெற்றியை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.[3] இயக்குநர் விஸ்வநாத் அவரை இந்தி திரைப்படங்களில் மீண்டும் அறிமுகப்படுத்த மேலும் மூன்று ஆண்டுகள் ஆனது, அவர் எடுத்த வெற்றிப்படமான காம்சோர் (1982) திரைப்படத்தில் ஜெயபிரதா முதல்முறையாக சரளமாக இந்தி பேசினார்.[4] இப்போது அவர் நிரந்தரமாக இந்தி திரைப்படங்களில் பணி செய்ய முடிந்தது மற்றும் சிறந்த நடிகைக்கான மேலும் இரு ஃபிலிம்ஃபேர் நியமனங்களைப் பெற்றார், அவை பிரகாஷ் மெஹ்ராவின் ஷராபி (1984) திரைப்படத்தில் அமிதாப் பச்சன் அவர்களின் காதலியாக நடித்ததற்காகவும் மற்றொன்று கே. விஸ்வநாத் அவர்களின் சன்ஜோக்கில் (1985 திரைப்படம்) கடினமான இரட்டை வேட கதாபாத்திரத்திற்காகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய பாலிவுட் திரைப்பட தொழிலுடன், கே. விஸ்வநாத்தின் தெலுங்கு வெற்றிப் படமான சாகர சங்கமம் (1983) போன்று பாராட்டு பெற்ற தென்னக திரைப்படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் பல ரசிகர்களைப் பெற்றார், பாமரர்கள் மட்டுமல்லாது தலைசிறந்த இந்திய இயக்குநர் சத்யஜித் ரேவையும் ரசிகராகப் பெற்றிருந்தார், இவர் ஜெயபிரதாவை உலகின் அழகான பெண்மணிகளில் ஒருவரெனக் கூறியிருந்தார்.[5]. அவர் பெங்காலி திரைப்படங்களில் நடித்திருந்தபோதிலும் என்றும் ரேயின் படங்களில் நடிக்கவில்லை. (ஒரு திரைப்படத்திற்கு ரே அவரை தன் மனதில் எண்ணி வைத்திருந்ததாக ஜெயபிரதா கூறினார், ஆனால் ரேயின் உடல்நிலை சீர்கேடும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அவரின் மரணமும் அவர்கள் இருவரும் இணைந்து பணி புரிவதைத் தடுத்தது.)[6]

ஜெய பிரதா ஒரு வெற்றிகரமான கூட்டணியை ஏற்படுத்தியிருந்தார், அது அமிதாப் பச்சன் மற்றும் ஜீதெந்திரா உடன் மட்டுமல்லாது அவருடைய உடனடி திரை எதிரியான ஸ்ரீதேவியுடனும் கூட இருந்தது, அவருடன் இவர் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்துள்ளார். அவர்களுடைய தெலுங்கு வெற்றிப்படமான தேவதா (திரைப்படம்) (1982), இதில் இருவரும் ஒருவருக்காக மற்றவர் பெரும் தியாகங்களைச் செய்யும் சகோதரிகளாகத் தோன்றினர், இது இந்தியில் வெற்றிப்படமான தோஹ்ஃபா (1984) என மீண்டும் எடுக்கப்பட்டது. திரைப்படங்களுக்குச் செல்பவர்களில் பாரம்பரிய பழமைப்பற்றாளர் பிரிவினர்கள், இந்தத் திரைப்படங்களால் ஜெயபிரதாவை பெரிதும் நேசித்தனர். அவர் தன்னுடைய புதிய வாழ்க்கைத் தொழிலை ஒரு அரசியல்வாதியாக துவக்கியதும் அவருக்கு பெரிதும் கைகொடுத்து உதவக்கூடிய பிம்பமாக அது இருந்தது.

2002 ஆம் ஆண்டில் ஆதார் என்னும் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் தோன்றி மராத்தி திரைப்பட துறைக்குள் நுழைந்தார்.[7] இதுவரை அவர் ஏழு மொழிகளில் நடித்து தன்னுடைய 30-ஆண்டு திரைப்பட தொழிலில் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் அவர் பண்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

சென்னையில் சொந்தமாக ஜெயபிரதா என்னும் திரையரங்கையும் கொண்டிருக்கிறார்.[8]

சொந்த வாழ்க்கை தொகு

1986 ஆம் ஆண்டில் அவர் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவைத் திருமணம் செய்துகொண்டார், இவர் ஏற்கெனவே சந்திராவைத் திருமணம் செய்து மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்தத் திருமணம் பெருமளவு சர்ச்சையை ஏற்படுத்தியது, குறிப்பாக நகதா தன்னுடைய தற்போதைய மனைவியை விவாகரத்து செய்யாமல் ஜெயபிரதாவை திருமணம் செய்தபிறகும் தன்னுடைய முதல் மனைவி மூலம் குழந்தையைப் பெற்றுக்கொண்டார்.[9] ஜெயபிரதா மற்றும் ஸ்ரீகாந்த் இருவருக்குமாக சேர்ந்து குழந்தைகள் இல்லை, ஆனால் ஜெயபிரதா குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஜெயபிரதா மற்றும் அவருடைய கணவரின் முதல் மனைவி இருவரும் ஒரே கணவனைப் பங்குகொள்ள உள்ளன்போடு இணங்கியுள்ளனர்.[10]

அரசியல் வாழ்க்கை தொகு

ஜெயபிரதா, 1994 ஆம் ஆண்டில் அவருடைய முன்னால் உடன் நடிகரான என்.டி.ராமா ராவ் அவர்களால் தெலுங்கு தேசக் கட்சியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து ஜெயபிரதா பிரிந்து சென்று, கட்சியின் சந்திரபாபு நாயுடு பிரிவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் ஆந்திர பிரதேசத்தை பிரதிநிதித்து ராஜ்ய சபாவுக்கு அவர் நியமிக்கப்பட்டார்.

கட்சித் தலைவரான என். சந்திரபாபு நாயுடுவுடனான கருத்துவேற்றுமையைத் தொடர்ந்து, அவர் தெலுங்கு தேசக் கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார், பின்னர் கடந்த 2004 பொதுத் தேர்தலின்போது உத்திரப்பிரதேசத்தின் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். லோக் சபா தேர்தல்களுக்கான அவரின் பிரச்சாரத்தின் போது, ராம்பூரின் ஸ்வார் வட்டாரத்தின் பெண்களுக்கு பிந்திகளைக் கொடுத்ததன் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேர்தல் ஆணையத்திடமிருந்து அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.[11] மே 11, 2009 ஆம் ஆண்டில் மூத்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசாம் கான், ஆடையில்லா நிலையிலான தன் படங்களை விநியோகிப்பதாக ஜெயபிரதா குற்றஞ்சாட்டினார்.[12] 30,000 க்கும் கூடுதலான வாக்குகளுடன் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.[13]

ஃபிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் நியமனங்கள் தொகு

மற்ற விருதுகள் தொகு

 • அந்துலெனி கதாவுக்காக நந்தி சிறந்த நடிகைக்கான விருது
 • கலா சரஸ்வதி விருது
 • கின்னெரா சாவித்திரி விருது
 • இராஜீவ் காந்தி விருது
 • நர்கிஸ் தத் தங்கப் பதக்கம்
 • சகுந்தலா கலா ரத்னம் விருது
 • உத்தம் குமார் விருது[15]
 • சிறந்த நூலாசிரியருக்கான கலாகார் விருது (2005)[16][17]
 • ஏஎன்ஆர் சாதனையாளர் விருது (2008)[18]

குறிப்புதவிகள் தொகு

 1. "அடவி இராமுடு: 29 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அந்த மாயவித்தை இன்னமும் நீடித்திருக்கிறது". http://www.tollywoodinfo.com/modules/wfsection/article.php?articleid=61. 
 2. http://www.nbkfans.com/annantrvideos.html பரணிடப்பட்டது 2009-08-31 at the வந்தவழி இயந்திரம் (பாடலை இங்குப் பார்க்கலாம்)
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.telegraphindia.com/1071029/asp/entertainment/story_8480555.asp. 
 4. http://specials.rediff.com/movies/2006/jun/20slide4.htm
 5. "ஸ்மாஷ்ஹிட்ஸ்.காம் - மாஹிமா: ஸ்மால் ஈஸ் பியூடிஃபுல் டூ - பாலிவுட் ஹிந்தி தமிழ் தெலுங்கு இந்திய இசை வீடியோக்கள் மற்றும் செய்திகள்". http://www.smashits.com/news/bollywood/movie-talk/4925/mahima-small-is-beautiful-too.html. 
 6. டெக்கான் ஹெரால்ட் - இன்றைய பெண்மணி
 7. "ஜெய பிரதா மராத்தி திரைப்படங்களுக்குள் படையெடுக்கிறார்", இந்தியாடைம்ஸ்.காம், மே 24, 2002
 8. "குழப்பமான சூழ்நிலையில் ஜெயபிரதா" பரணிடப்பட்டது 2006-09-06 at the வந்தவழி இயந்திரம், ஐடல்பிரெய்ன்.காம், செப்டம்பர் 4, 2003
 9. "ஃபிலிம்சேம்பர்". http://www.filmchamber.com/tmpl.asp?it=wrjaya. 
 10. ஸ்கிரீன் தி பிசினஸ் ஆஃப் என்டர்டெய்ன்மெண்ட்-பிலிம்ஸ்-இன்டர்வியூ
 11. தேர்தல் விதிமுறை மீறியதற்காக ஜெயபிரதாவிற்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது
 12. "ஆசாம் கான் என்னுடைய ஆடையற்ற நிலையிலான சுவரொட்டிகளை விநியோகிக்கிறார்: ஜெயா". http://ibnlive.in.com/news/azam-circulating-nude-posters-of-mine-jaya/92312-37.html. 
 13. ஜெயபிரதா மற்றவர்களைக் காட்டிலும் சிறப்புற்றிருக்கிறார், ராம்பூரில் வெற்றி
 14. http://www.totaltollywood.com/news/Happy-Days-makes-a-sweep-at-Filmfare_2333.html
 15. "நகதா, திருமதி ஜெய பிரதா:". http://rajyasabha.nic.in/kiosk/rsfinal3/whoswho/alpha_n2.htm. 
 16. "கலாகார் விருதுகள்". http://www.kalakarawards.com/adver/105937cinema-awardee.htm. 
 17. "கலாகார் விருதுகள்". http://www.kalakarawards.com/adver/105937history-main.htm. 
 18. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-3519022,prtpage-1.cms

வெளி இணைப்புகள் தொகு

 1. ஜெயபிரதாவின் வாழ்க்கை வரலாற்றுக்குரிய செய்திக்குறிப்புகள் பரணிடப்பட்டது 2006-01-14 at the வந்தவழி இயந்திரம்

பிற இணைப்புகள் தொகு

 1. ஜெயபிரதாவின் ஐஎம்டிபி சுயவிவரம் http://www.imdb.com/name/nm0419685/
 2. தசாவதாரம் (பத்து அவதாரங்கள்): என்றும் இளமையாக இருக்கும் இந்திய நடிகை ஜெய பிரதா, மீண்டுமொருமுறை மனதைக் கவர்கிறார். பரணிடப்பட்டது 2009-10-31 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயபிரதா&oldid=3733993" இருந்து மீள்விக்கப்பட்டது