ஆர். கே. தவன்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
ஆர். கே. தவன் (Rajinder Kumar Dhawan, 16 சூலை 1937 - 6 ஆகத்து 2018) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவரும் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் மேனாள் பிரதமர் இந்திரா காந்தியின் தனிச்செயலராகவும் நெருக்கமான உதவியாளராகவும் இருந்தார். நெருக்கடி காலத்தில் அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவராக இருந்தார். டேராடூனில் உள்ள கர்னல் பிரவுன் கேம்பிரிச் பள்ளியிலும், பனாரசு இந்து பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். தமது 74 ஆம் அகவையில் திருமணம் செய்து கொண்டார்.[1] இவர் 2018 ஆகத்து 6 ஆம் திகதியில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.[2]
ஆர். கே. தவன் | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சினியாட், பாக்கித்தான் | சூலை 16, 1937
இறப்பு | ஆகத்து 6, 2018 புது தில்லி, இந்தியா | (அகவை 81)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Eternal bachelor R K Dhawan gets hitched at 74". Times Of India (July 19, 2012)
- ↑ "Veteran Congress leader RK Dhawan passes away at 81".The Indian Express (August 06, 2018)