இராஷ்டிரிய லோக் தளம்

இந்திய அரசியல் கட்சி

இராஷ்டிரிய லோக் தளம் (Rashtriya Lok Dal) (மொழிபெயர்ப்பு: தேசிய மக்கள் கட்சி) இந்தியாவின் முன்னாள் பிரதமரும், லோக் தளம் கட்சியின் தலைவருமான சரண் சிங்கின் மகன் அஜய் சிங் என்பவர் இக்கட்சியை 1996-ஆம் ஆண்டில் அரசியல் கட்சியாக நிறுவினார்.[2][3]தற்போது இக்கட்சியின் தலைவராக சௌத்திரி அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌத்திரி என்பவர் உள்ளார். இக்கட்சியின் சின்னம் கைப்பம்பு[தெளிவுபடுத்துக] ஆகும்.

இராஷ்டிரிய லோக் தளம்
சுருக்கக்குறிRLD
தலைவர்ஜெயந்த் சௌத்திரி[1]
நிறுவனர்அஜித் சிங் (முன்னாள் இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் மகன்)
தொடக்கம்1996; 28 ஆண்டுகளுக்கு முன்னர் (1996)
பிரிவுஜனதா தளம்
முன்னர்லோக் தளம்
தலைமையகம்406, விபி ஹவுஸ், ரபி மார்க், புது தில்லி, 110001
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (1999-2003,2009-2011,2024-முதல்),ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2011-2014), மகாகட்பந்தன் (2018-2019), சமாஜ்வாதி கூட்டணி (2003-2007,2019-2024)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(உத்தரப் பிரதேச சட்டமன்றம்)
0 / 403
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(இராஜஸ்தான் சட்டமன்றம்)
1 / 200
தேர்தல் சின்னம்
இணையதளம்
www.rashtriyalokdal.com
இந்தியா அரசியல்

இக்கட்சியின் தலைவராக அஜித் சிங் இருக்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி (1999-2003,2009-2011), சமாஜ்வாதி கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (2011-2014) செயல்பட்டார். இக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜெயந்த் சௌத்திரி, மகாகட்பந்தன் கூட்டணியிலும் (2018-2019), தற்போது சமாஜ்வாதி கூட்டணியிலும் (2003-2007,2019-தற்போது வரை) உள்ளது.

தேர்தல் வரலாறு

தொகு
  • இக்கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சுபாஷ் கார்க் இராஜஸ்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும், அமைச்சராக உள்ளார்.[4]
  • 2002-இல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தலைமையிலான அமைச்சரவையில் இக்கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
  • 2004 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 3 மக்களவை தொகுதிகளை வென்றது.[5]
  • 2009 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து, உத்தரப்பிரதேசத்தில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளை வென்றது.[4]
  • 12 டிசம்பர் 2011 அன்று இக்கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து, 2014 மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் 8 இடங்களில் போட்டியிட்டு,[6]அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், கட்சித் தலைவர் அஜித் சிங்கும், அவர் மகன் ஜெயந்த் சௌத்திரியும் முறையே பாக்பத் மற்றும் மதுரா மக்களவைத் தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர்.[4][7]
  • சனவரி 2015-இல் உத்தரப் பிரதேச மேலவை தேர்தலில் இக்கட்சி பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்தது.[8][9][10]
  • 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வென்றது.
  • 2018 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், இக்கட்சியின் வேட்பாளர் சுபாஷ் மார்க் வெற்றி பெற்று அமைச்ச்ராக உள்ளார்.
  • 2019இல் இக்கட்சி உத்தரப் பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் இணைந்து 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை தழுவியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Jayant Chaudhary appointed new RLD president". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jayant-chaudhary-appointed-new-rld-president/articleshow/82935316.cms. 
  2. BKKP, RLD merge with Lok Dal
  3. "रालोद के अध्यक्ष चौधरी अजित सिंह का कोरोना से निधन, मेदांता अस्पताल में थे भर्ती". Zee News Hindi (in இந்தி). 2021-05-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
  4. 4.0 4.1 4.2 Seth, Maulshree (28 May 2014). "Post rout, RLD mulls solo fight in Assembly bypolls". Lucknow: The Indian Express. http://indianexpress.com/article/cities/lucknow/post-rout-rld-mulls-solo-fight-in-assembly-bypolls/. 
  5. RLD leaders upset over poll pact
  6. "Cong to leave 8 seats for RLD, 3 for Mahan Dal in western UP". Indian Express. 9 March 2014. http://indianexpress.com/article/india/politics/cong-to-leave-8-seats-for-rld-3-for-mahan-dal-in-western-up/. 
  7. Shah, Pankaj (16 May 2014). "Election Results 2014: Ajit Singh's RLD bites the dust in UP". The Times of India. https://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Election-Results-2014-Ajit-Singhs-RLD-bites-the-dust-in-UP/articleshow/35200845.cms. 
  8. "RLD springs a surprise: Dumps ally Congress to support BSP". http://indianexpress.com/article/cities/lucknow/rld-springs-a-surprise-dumps-ally-congress-to-support-bsp/. 
  9. "Miffed with Cong, RLD to back BSP in MLC polls". http://timesofindia.indiatimes.com/city/lucknow/Miffed-with-Cong-RLD-to-back-BSP-in-MLC-polls/articleshow/45861529.cms. 
  10. "Unlikely allies in Council polls: RLD, BSP". http://indianexpress.com/article/india/india-others/unlikely-allies-in-council-polls-rld-bsp/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஷ்டிரிய_லோக்_தளம்&oldid=3886640" இலிருந்து மீள்விக்கப்பட்டது