கேணி (திரைப்படம்)

எம். ஏ. நிஷாத் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்திரைப்படம்

கேணி (Keni), எம். ஏ. நிஷாத் இயக்கத்தில், சஜீவ். பி. கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் ஒரேநேரத்தில் தமிழிலும், மலையாளத்தில் உருவானது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, அர்ச்சனா ஆகியோர் இத்திரைப்படத்தில் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளர். இத்திரைப்படம் எம். ஜெயச்சந்திரன், பிஜிபால் ஆகியோரின் இசையிலும், நௌசத் செரிஃப்பின் ஒளிப்பதிவிலும், சிறீகுமார் நாயரின் படத்தொகுப்பிலும் பெப்ருவரி 23, 2018இல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம்.

கேணி
இயக்கம்எம். ஏ. நிஷாத்
தயாரிப்புசஜீவ். பி. கே
ஆன் சஜீவ்
கதைஎம். ஏ. நிஷாத்
அன்வர் அப்துல்லா
அஜூ கே. நாராயணன்
இசைஎம். ஜெயச்சந்திரன்
பிஜிபால்
நடிப்புஜெயப்பிரதா
பார்த்திபன்
ரேவதி
அர்ச்சனா
ஒளிப்பதிவுநௌசத் செரிஃப்
படத்தொகுப்புசிறீகுமார் நாயர்
கலையகம்பிரக்னன்ட் நேச்சர் பிலிம் கிரியேசன்ஸ்
வெளியீடு23 பெப்ரவரி 2018 (2018-02-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மலையாளம்

நடிப்பு

தொகு

ஏரிகளும் குளங்களும் காணமல் போவது. நிலத்தடி நீர்மட்டம் நாளுக்குநாள் கீழே செல்வது என்று நீர்த்தேவை மக்களின் அடிப்படை சிக்கலாக மாறிவிட்டது. நீர் சார்ந்த அடிப்படைச் சிக்கல்களை இப்படம் விவரிக்கின்றது.காற்று, வானம், நிலம் போல இம்மண்ணில் வாழும் உயிரிகள் எல்லாவற்றிற்கும் பொதுவானது நீர். நீர் அனைத்து உயிரிகளுக்குமான அடிப்படைத்தேவை என்பதை இப்படம் வலியுறுத்துகின்றது.[1]

படப்பணிகள்

தொகு

1956ஆம் ஆண்டில் கேரள மாநிலம் உருவானபோது நிகழ்வதுபோல் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.[2]

கேணி
திரையிசை
எம். ஜெயச்சந்திரன் மற்றும் கல்லார் கோபன்
வெளியீடு7 பெப்ருவரி 2018
இசைப் பாணிதிரையிசை
இசைத்தட்டு நிறுவனம்மியூசிக்247

தமிழ் வடிவத்தில்

# பாடல்வரிகள்பாடகர்Singer(s) நீளம்
1. "ஐயா சாமி"  பி. கே. ஹரிநாராயணன், பழனிபாரதிஎம். ஜெயச்சந்திரன்கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:43
2. "கலையும் மேகமே"  பழனிபாரதிஎம். ஜெயச்சந்திரன்சித்ரா 3:58
3. "வெடித்திடும் பூமி"  பழனிபாரதிகல்லர கோபன்விஜய் யேசுதாஸ் 4:16

இத்திரைப்படத்திற்கு எம். ஜெயச்சந்திரனும், பிஜிபாலும் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை பி. கே. ஹரிநாராயணன், பழனிபாரதி [3] ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் மலையாள வடிவில் கே. ஜே. யேசுதாசும், எஸ். பி. பாலசுப்பிரமணியமும் தளபதி திரைப்படத்திற்குப்பிறகு 27 ஆண்டுகள் கழித்து ஒன்றாக இணைந்துப் பாடியுள்ளனர்.[4]

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேணி_(திரைப்படம்)&oldid=3709415" இலிருந்து மீள்விக்கப்பட்டது